சௌந்தர்யாவிடம் பிறந்தநாளுக்கு அப்பா வருவதாக சொல்லும் லட்சுமி, உதவி கேட்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
சௌந்தர்யாவிடம் பிறந்தநாளுக்கு அப்பா வருவதாக சொல்லும் லட்சுமி, உதவி கேட்கும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
சௌந்தர்யாவிடம் பிறந்தநாளுக்கு அப்பா வருவதாக சொல்லும் லட்சுமி, உதவி கேட்கும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!சௌந்தர்யாவிடம் பிறந்தநாளுக்கு அப்பா வருவதாக சொல்லும் லட்சுமி, உதவி கேட்கும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
சௌந்தர்யாவிடம் பிறந்தநாளுக்கு அப்பா வருவதாக சொல்லும் லட்சுமி, உதவி கேட்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பிறந்தநாள் விழாவில் நிச்சயம் உண்மையை சொல்ல போறேன் என குமாரிடம் சொல்கிறார். பின் ஹேமாவை கூட்டிக் கொண்டு பாரதி வீட்டிற்கு வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி பிறந்தநாள் விழாவிற்கு அப்பா வருவாரு என சொல்ல, குமார் வாய்யை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் டாக்டர் வருகிறாரா என கேட்கிறார். உடனே லட்சுமி என்னது டாக்டர் அங்கிளா, அப்பாவிற்கும் டாக்டர் அங்கிளிற்கும் என்ன சம்மந்தம் என கேட்கிறார். உடனே கண்ணம்மா இந்த அண்ணா இப்படி தான் எதையாவது பேசுவார் என சொல்லி சமாளிக்கிறார். பின் லட்சுமியை கண்ணம்மா அனுப்ப, குமார் என்ன சொல்கிறாய் கண்ணம்மா என கேட்கிறார். உண்மையாகவே உன் பிறந்தநாள் விழாவில் லட்சுமி அப்பா வருகிறாரா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆமாம் நான் உண்மையை சொல்ல தான் போகிறேன் என சொல்லி உறுதியாக இருக்கிறார். பின் பாரதி ஹேமாவுடன் வந்து கொண்டிருக்க, வீட்டிற்கு போவதை நினைத்து வருத்தப்படுகிறார். காரை விட்டு இறங்கி இப்படி எல்லா வசதியும் இருந்தும் நானும் என் மகளும் போக இடம் இல்லாமல் இருப்பதாக நினைக்கிறார். பின் ஹேமா அப்பா என்ன தனியாக பேசிக் கொண்டிருக்கிறார் என நினைத்து இறங்கி வர ஹேமாவிடம் நான் உன்னை கஷ்டப்படுத்துகிறேனா என கேட்கிறார். இல்லை எனக்கு அந்த டாக்டர் ஆன்டி வீட்டிற்கு போவது பிடிக்கவே இல்லை என சொல்கிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

இப்போ நாம பெரிய ஹோட்டலுக்கு போவோமா என கேட்க வேண்டாம் நம்ம வீடு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என சொல்கிறார். சௌந்தர்யா பாரதி வருவான் என கிண்டல் செய்ய காத்துக் கொண்டிருக்க ஹேமாவை மட்டும் பாரதி உள்ளே அனுப்புகிறார். அப்போது சௌந்தர்யா வெளியே வந்து பாரதிக்கு ஆரத்தி எடுத்து கிண்டல் செய்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மா வீட்டிற்கு போக அங்கே லட்சுமி பிறந்தநாள் பற்றி சொல்கிறார். நீங்க எல்லாரும் வாங்க டாக்டர் அங்கிள் வருவாரா என கேட்கிறார், அவனும் கண்டிப்பாக வருவார் என சொல்ல, என் அம்மா பிறந்தநாளுக்கு என் அப்பா வருவாராம் என் அம்மா சொன்னாங்க என சொல்கிறார்.

அம்மா பிறந்தநாளுக்கு தான் நான் என் அப்பாவை பார்க்க போகிறேன் என சொல்கிறார். நீங்க எல்லாரையும் கூட்டிக் கொண்டு கண்டிப்பாக வாங்க என சொல்கிறார். பின் லட்சுமி சென்றதும், சௌந்தர்யா கண்ணம்மாவிடம் என்ன இப்படி சொல்லி இருக்கிறாய் அதை பாரதி ஒப்புக் கொள்வானா என கேட்கிறார். அவர் கேட்காமல் இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லி தான் ஆகணும் என சொல்கிறார். அவன் இப்போது தான் இவ்வளோ பிரச்சனை வந்து வெண்பா வீட்டிற்கு போய்ட்டு வந்துருக்கான் . இப்போ இதை எப்படி செய்வான் என கேட்க, லட்சுமி குழந்தை இல்லை அவளுக்கு எல்லாம் சொல்லி தான் ஆக வேண்டும் என சொல்கிறார்.

பாரதி முதலில் வருவானா என கேட்க அது தான் தெரியவில்லை நீங்க தான் எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்கிறார். நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் ஆனால் பாரதி என்ன நினைப்பான் என்று சௌந்தர்யா கேட்கிறார். பின் சௌந்தர்யா லக்ஷ்மிக்கு பணம் கொடுக்கிறார். இது எதுக்கு என கேட்க, உன் அம்மா பிறந்தநாளுக்கு எதாவது வாங்கி கொடு என சொல்கிறார். அப்போது லட்சுமி நீங்க கண்டிப்பாக பிறந்தநாளுக்கு வந்தால் தான் வாங்கி கொள்வேன் என சொல்ல கண்டிப்பாக வரேன் என சௌந்தர்யா சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!