‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக களமிறங்கிய வினுஷா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய கண்ணம்மாவாக களமிறங்கிய வினுஷா - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய கண்ணம்மாவாக களமிறங்கிய வினுஷா - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக களமிறங்கிய வினுஷா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி TRP ரேட்டிங்கில் எப்போதும் டாப் இடத்தை பிடித்து அசத்தி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியனுக்கு பதிலாக புது நடிகை களமிறங்கி உள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் மீண்டும் பழைய கண்ணம்மா வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படும் சீரியல்களுக்கு எப்பொழுதும் தமிழ் சின்னத்திரையில் வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் தெலுங்கு சீரியலின் கதையை வைத்து எடுக்கப்பட்டது தான் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பிரபலமடைந்ததற்கு அதன் கதைக்களத்தை விட அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தான் முக்கிய காரணம் என்று கூறலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகின்றனர். ஹீரோ பாரதியாக அருண், ஹீரோயின் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன், வில்லியாக வெண்பா என அனைவரும் தனித்துவத்துடன் தங்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சில மாதங்களிலேயே இந்த சீரியல் ஹிட் அடித்தது.

செம்பருத்தி’ ஷபானாவின் திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி TRP ரேட்டிங்கில் டாப் இடத்தையும் பிடித்து அசத்தியது. இருப்பினும் கதைக்களத்தில் முறையான திருப்பங்கள் இல்லாததால் ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கியது. இதனை மாற்ற நினைத்த இயக்குனர் கதையை 8 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பது போன்று மாற்றி அமைத்தார். பின்னர் சீரியலில் சற்று விறுவிறுப்பு கூடியது. ஒரே ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் மொத்த சீரியலும் முடிவுக்கு வந்து விடும். ஆனால் அதை வைத்து கொண்டு தான் சீரியலை இழுத்தடித்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் கதையின் முக்கிய புள்ளியான கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் இதனை நம்பாத ரசிகர்கள் நாளடைவில் வெளிவந்த அடுத்தடுத்த தகவல்களால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான்’ கலாய்க்கும் ரசிகர் – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!

ரோஷினிக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வருவதால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக பேச்சு அடிபட்டது. சின்னத்திரையில் பிரபலமடையும் நடிகர், நடிகைகள் வெள்ளித்திரைக்கு தாவுவது வழக்கமான ஒன்றே. அதற்கு கண்ணம்மா ‘ரோஷினி’ மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புதிய கண்ணம்மாவை சீரியல் குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். நாம் எதிர்பார்த்தபடி டிக் டாக் வினுஷாவே கண்ணம்மாவாக களமிறங்கி உள்ளார். ரசிகர்களின் மனதில் புதிய கண்ணம்மாவை பதிய வைப்பதற்காக காதல் தொடங்கி விவகாரத்துக்காக கோர்ட் படி ஏறியது வரை அனைத்தையும் மீண்டும் வினுஷாவை வைத்து படமாக்கி உள்ளனர். வினுஷாவும் பார்ப்பதற்கு சற்று ரோஷினி போலவே இருப்பதால் நாளடைவில் ரசிகர்கள் அவரை கண்ணம்மாவாக ஏற்றுக் கொள்வார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!