ஹேமாவை பாரதியுடன் அனுப்ப மறுக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் அஞ்சலி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
ஹேமாவை பாரதியுடன் அனுப்ப மறுக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் அஞ்சலி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஹேமாவை பாரதியுடன் அனுப்ப மறுக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் அஞ்சலி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஹேமாவை பாரதியுடன் அனுப்ப மறுக்கும் கண்ணம்மா, பதட்டத்தில் அஞ்சலி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த வாரம் ஹேமா கண்ணம்மா வீட்டில் இருப்பதை பாரதி தெரிந்து கொள்கிறார். அதற்கடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் TRP ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் நிலைத்து இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இந்த சீரியலில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. தற்போது ஹேமா, கண்ணம்மா, அஞ்சலி என அனைவரும் ஒரே வீட்டில் இருக்கின்றனர். பாரதியிடம் ஹேமாவை தான் அழைத்து செல்வதாக கூறி அஞ்சலி கண்ணம்மா வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். இந்த உண்மை பாரதிக்கு தெரிய வந்தால் என்ன ஆகும் என சௌந்தர்யா பயத்துடன் இருக்கிறார். இதற்கிடையில் ஹேமா தன்னுடைய மகள், யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்பதில் கண்ணம்மா உறுதியுடன் இருக்கிறார். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

அடுத்த வார எபிசோடுகளில் ஹேமா, கண்ணம்மா வீட்டில் இருப்பதை பாரதி தெரிந்து கொள்கிறார். இதனால் கோபத்துடன் கண்ணம்மா வீட்டிற்கு சென்று ஹேமாவை தன்னுடன் அனுப்புமாறு கூறுகிறார். அதனை மறுக்கும் கண்ணம்மா ஹேமா தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர், என்னுடைய மகள் என கூற வருகிறார். ஆனால் அவரை அஞ்சலி தடுத்து உண்மையை சொல்ல விடாமல் செய்கிறார். மறுபுறம் உண்மை தெரியாத பாரதி ஹேமாவை தன்னுடன் அழைத்துச் செல்வதில் பிடிவாதமாக இருக்கிறார். ஹேமாவை தன்னுடன் அனுப்பா விட்டால் போலீஸ் கேஸ் கொடுத்துருவேன் எனவும் கண்ணம்மாவை மிரட்டுகிறார்.

‘முடிவுக்கு வரும் வெண்பாவின் ஆட்டம்’ – பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா வரை இன்றைய ப்ரோமோ!

இதனால் என்ன செய்வது என தெரியாமல் அஞ்சலி பதட்டத்தில் இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் சீரியல் நகர உள்ளது. இதற்கிடையில் சினிமா வாய்ப்புகளின் காரணமாக ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து விலக உள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது கிட்டத்தட்ட உண்மை என சின்னத்திரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வேளை கண்ணம்மா விலகி விட்டால் அவர் கேரக்டருக்கு யாரும் சூட் ஆக மாட்டாங்க எனவும் புலம்பி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here