பாரதி கண்ணம்மா வழக்கம் போல டாப் – மற்ற சீரியல்கள் சொதப்புவது ஏன்?

0
பாரதி கண்ணம்மா வழக்கம் போல டாப் -
பாரதி கண்ணம்மா வழக்கம் போல டாப் -

பாரதி கண்ணம்மா வழக்கம் போல டாப் – மற்ற சீரியல்கள் சொதப்புவது ஏன்?

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை பெற்றாலும், மற்ற சீரியல்கள் எதுவும் இடம் பெறாததால் விஜய் டிவி சீரியல்கள் தடுமாற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் என்னவென்றால் மற்ற சீரியல்களின் திரைக்கதை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்:

பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இரு சேனல்களுக்கு இடையே மட்டுமே பெரும் போட்டி நிலவி வருகிறது. சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் இடையே போட்டி என்பதைவிட ரோஜா சீரியல் மற்றும் பாரதிகண்ணம்மாவுக்கு இடையே பெரும் போட்டி என்று கூறுவதுதான் சரி. ஏனென்றால் இந்த இரண்டு சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங் எது முதலில் என்று அடித்துக் கொள்கிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஜோடியாக புது நடிகை – ஐஸ்வர்யா மாற்றம்! ரசிகர்கள் ஷாக்!

தற்போது வெளியாகியுள்ள கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பாரதிகண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது.அதன்பின் டாப்-5 லிஸ்டில் ஒரு விஜய் டிவி சீரியல் கூட இடம் பெறவில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் ரோஜா, மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல 4வது இடத்தில் பூவே உனக்காக, ஐந்தாவது இடத்தில் சுந்தரி, ஆறாவது இடத்தில் கண்ணான கண்ணே ஆகிய சீரியல்கள் இடம்பெற்றுள்ளன.

மற்ற சீரியல்கள் சொதப்புவது ஏன்?

விஜய் டிவியில் பல்வேறு டாப் சீரியல்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை எதுவும் டிஆர்பி ரேட்டிங் முதல் 5 இடத்தைப் பெறவில்லை. இதற்கும் பெரும் காரணம் அவைகளின் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.

விஜய் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கண்ணன் திருமணத்திற்குப் பிறகு சுவாரஸ்யங்கள் குறைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதன் பின் பாக்கியலட்சுமி சீரியல் அனைவரும் எதிர்பார்த்து ,கோபி எப்போது மாட்டுவார் என்று ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் தப்பிக்கின்ற கதைக்களம் ரசிகர்களிடையே இந்த சீரியலின் எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. ராஜா ராணி 2 சீரியலை பொருத்தவரை சந்தியாவை எப்போதும் மாமியார் சிவகாமி திட்டிக் கொண்டே இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூக்குத்தி அம்மனாக மாறிய சன் டிவி ரோஜா சீரியல் நடிகை – ஸ்பெஷல் எபிசோட்!

முத்தரசு கொலை பற்றி சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டிருந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தம்பி மாறன் கதாபாத்திரம் உள்ளே நுழைந்ததால் கதை வேறு திசையை நோக்கி பயணிக்கிறது. இதை ரசிகர்கள் பெரிதும் விரும்பவில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் சந்தித்து வரும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் இது போன்ற கதைகள் என்று அறியப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!