கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் ‘WORLD TOUR’ இதே நாளில் அன்று – ‘பாரதி கண்ணம்மா’ ட்ரெண்டிங்!

0
கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் 'WORLD TOUR' இதே நாளில் அன்று - 'பாரதி கண்ணம்மா' ட்ரெண்டிங்!
கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் 'WORLD TOUR' இதே நாளில் அன்று - 'பாரதி கண்ணம்மா' ட்ரெண்டிங்!
கர்ப்பத்துடன் கண்ணம்மாவின் ‘WORLD TOUR’ இதே நாளில் அன்று – ‘பாரதி கண்ணம்மா’ ட்ரெண்டிங்!

விஜய் டிவியில் இன்று அனைவர் மத்தியிலும் இடம் பிடித்து இருக்கும் ஒரு சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலின் முக்கியமான சீன் ஒன்று கடந்த வருடம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

கடந்த ஆண்டு மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் அனைவரும் போன் என்று அடிமையாகினர். அதுவும் ஒரு கட்டத்தில் அலுத்து போன வயது வித்தியாசமின்றி அனைவரும் சீரியல் பார்க்க தொடங்கினர். அப்போது தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மிகவும் பிரபலம் அடைந்தது. கதாநாயகி கண்ணம்மா பாரதியை காதலிக்கிறார். இருவரும் தங்களது குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், பாரதியை ஒரு தலையாக அவரது தோழியான வெண்பா காதலிக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – முழு பட்டியல் ரிலீஸ்!

இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர விடாமல் பண்ணுகிறார். பாரதிக்கு குழந்தை பெற்று கொள்ள முடியாது என்று வெண்பா கூறியதை உண்மை என்று நம்பும் பாரதி கண்ணம்மா கர்ப்பம் அடைந்ததும் அவரை சந்தேகம் கொள்கிறார். இதனை அறிந்து கொந்தளிக்கும் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியே சென்று தனியாக வாழ்ந்து வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறார்.

புதுப்பொலிவுடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வைரல் ப்ரோமோ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஒரு வருடத்திற்கு முன்பாக இதே நாளில் தான் கண்ணம்மா பாரதியை எதிர்த்து சண்டை போட்டு வீட்டை விட்டு சென்ற எபிசோட் ஒளிபரப்பாகியது. இந்த சீன் அப்போது பட்டி தொட்டி எல்லாம் அதிகமாக பேசப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் கண்ணம்மா நடந்து செல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டது. கண்ணம்மாவிற்கு பாரதியின் மேல் காதல் இருந்தாலும், தனது சுய மரியாதையினை சீண்டியதும் அவரை எதிர்த்து தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஒரு சீரியலாக இருந்தாலும் கண்ணம்மா இன்று வரை பல பெண்களின் ரோல் மாடல் தான்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!