பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

1
பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தனது வாரிசு இல்லை என பாரதி உறுதியாக நம்பும் நிலையில், அவரது குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக கூறும் கண்ணம்மாவுக்கு பாரதி உதவி செய்வாரா என அடுத்த கதைக்களம் ஒளிபரப்பாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் புதுப்புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் மக்கள் விரும்பும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. என்னதான் கோவம், அவமானம், சுய மரியாதை, கௌரவம் என்று பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும் கண்ணம்மாவுக்கு, பாரதி மீது எங்கோவொரு இடத்தில் ஷாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்கிறது.

இந்து பையனை காதலிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!

எப்போதும் போல சகஜமாக இருக்க வேண்டும் என கண்ணம்மா நினைத்தாலும் பாரதி காட்டும் வெறுப்பும், கோபமும் கண்ணம்மாவை சற்று அதிகமாக தான் பேச வைக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தனது 2வது குழந்தை குறித்த தேடலில் இருக்கும் கண்ணம்மா, பாரதியிடம் உதவி கேட்க நினைக்கிறார். கண்ணம்மாவின் வார்த்தைக்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பாரதி பிறகு ஒப்புக்கொள்கிறார். இதற்கிடையில் கண்ணம்மா மற்றும் பாரதி பற்றி பேசிக்கொண்டிருக்கும் சௌந்தர்யா குடும்பத்தினரின் பிளானை வெண்பா ஒட்டு கேட்கிறார்.

அதனை பொருட்படுத்தாமல் வழக்கம் போல சௌந்தர்யா அவரை அசிங்கப்படுத்துகிறார். இப்போது பாரதி, கண்ணம்மா இருவரும் பீச்சில் சந்திக்கிறார்கள். அந்த இடம் அவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. இதையடுத்து கண்ணம்மா, தான் பழைய பாரதி மாமாவிடம் பேச வேண்டும் என சொல்லுகிறார். அதற்கு பாரதியும் நானும் பழைய கண்ணம்மாவை பார்க்க வேண்டும் அவளை வர சொல்லு என பதில் கூறுகிறார். இப்படியே இருவரும் பழைய நினைவுகளை மாறி மாறி பகிர்ந்து கொண்டிருக்க பாரதி பிடி கொடுக்காமல் பேசுகிறார்.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – சரவணனுடன் புதிய பைக் ஓட்டும் சந்தியா!

அதனால் தன்னை வழிப்போக்கன் என நினைத்து உதவி செய்யுமாறு கண்ணம்மா கோரிக்கை வைக்க, உனக்கு உதவி செய்ய நான் கடவுள் இல்லை. நீயும் என் உதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என கூறுகிறார். இருந்தாலும், நம்ம குழந்தையை யாரோ கடத்தி வைச்சுக்கிட்டு மிரட்டுறாங்க என கண்ணம்மா கூற நம்ம குழந்தையா என பாரதி கூற அதனுடன் அடுத்த எபிசோடு முடிவு பெற்றுள்ளது. இப்போது வெண்பா தனது குழந்தையை கடத்தியதாக கூறும் கண்ணம்மாவுக்கு பாரதி உதவி செய்வாரா, இல்லையா என்பது அடுத்த கட்ட கதைக்களமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இடம்பெற உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!