வெண்பா வைக்கும் செக்கில் மாட்டுவாரா கண்ணம்மா? சூடுபிடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!

0
வெண்பா வைக்கும் செக்கில் மாட்டுவாரா கண்ணம்மா? சூடுபிடுக்கும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்!
வெண்பா வைக்கும் செக்கில் மாட்டுவாரா கண்ணம்மா? சூடுபிடுக்கும் 'பாரதி கண்ணம்மா' கதைக்களம்!
வெண்பா வைக்கும் செக்கில் மாட்டுவாரா கண்ணம்மா? சூடுபிடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அதிரடியான காட்சிகளுடன், புதிய திருப்பங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. அந்த வகையில் சமீபத்திய எபிசோடுகளில் கண்ணம்மா பாரதியிடம் இருந்து விவாகாரத்து வாங்க வேண்டும் என அவருக்கு செக் வைத்துள்ளார் வெண்பா.

பாரதி கண்ணம்மா

கடந்த சில வாரங்களாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மீண்டுமாக சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதாவது 8 ஆண்டுகளுக்கு பிறகு என கண்ணம்மாவின் குழந்தைகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களம், வழக்கமான சண்டை, பிரச்சனை என பயணித்து வந்தது. ஆனால் சௌந்தர்யாவின் அரவணைப்பு, அஞ்சலியின் மனமாற்றம் என அவ்வப்போது நிகழ்ந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்து வந்தது. குறிப்பாக கடந்த வாரங்களில் ‘பாரதி கண்ணம்மா’ கதையில் சில முக்கிய கதை முடிச்சுகள் அவிழ துவங்கியது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் ஸ்டாலினின் திரைப்பயணம் – வாழ்வில் உயர்ந்த கதை!

அதாவது பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் கண்ணம்மாவின் மகள் தான் லட்சுமி என்றும் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் தெரிந்து கொண்டனர். குறிப்பாக 2 ஆவது குழந்தை ரகசியமும் உடைந்துள்ளது. இதை தொடர்ந்து பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். இப்படி அவ்வப்போது ஒளிபரப்பாக்கப்படும் சில காட்சிகள் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல அமைந்தது. ஆனால் இந்த கதையில் மீண்டுமாக வெண்பா தனது பழிவாங்கும் படலத்தை சில ட்விஸ்ட்டோடு துவங்கியுள்ளார்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

கண்ணம்மாவின் 2ஆவது குழந்தை வெண்பாவிடம் இருக்கிறது என சொல்லி வெண்பா, கண்ணம்மாவிடம் கதைகட்டுகிறார். இதை நம்பும் கண்ணம்மா, வெண்பா சொல்வதையெல்லாம் செய்கிறார். ஒரு கட்டத்தில் வெண்பா, கண்ணம்மாவை கொஞ்சம் அதிகமாக கடுப்பேற்ற வெண்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய போகிறார் கண்ணம்மா. இந்த எல்லாவற்றையும் விட, குழந்தை வேண்டுமானால் பாரதியை விவாகரத்து செய்ய சொல்லி கண்ணம்மாவை மிரட்டுகிறார் வெண்பா. இதனால் சற்று அதிர்ந்த கண்ணம்மா என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!