சௌந்தர்யா பேச்சை கேட்க மறுக்கும் கண்ணம்மா, அப்போ பாரதியின் நிலைமை? சீரியலில் அடுத்த திருப்பம்!

0
சௌந்தர்யா பேச்சை கேட்க மறுக்கும் கண்ணம்மா, அப்போ பாரதியின் நிலைமை? சீரியலில் அடுத்த திருப்பம்!
சௌந்தர்யா பேச்சை கேட்க மறுக்கும் கண்ணம்மா, அப்போ பாரதியின் நிலைமை? சீரியலில் அடுத்த திருப்பம்!
சௌந்தர்யா பேச்சை கேட்க மறுக்கும் கண்ணம்மா, அப்போ பாரதியின் நிலைமை? சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவியில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் ஹேமாவை அழைத்து போக வேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு யாரை பற்றியும் கவலை கிடையாது என்று கூறி விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்திருக்கும் சீரியல் என்றால் அது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது யாருமே எதிர்பார்த்த விதமாக சௌந்தர்யா ஹேமா பற்றிய உண்மைகளை கண்ணம்மாவிடம் கூறி விடுகிறார். ஹேமா பற்றி கண்ணம்மா அறிந்ததும் அவரால் ஹேமா மேல் இருக்கும் அன்பினை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் உடனடியாக பாரதியின் வீட்டிற்கு செல்லுகிறார்.

ஜீ தமிழ் சத்யா & ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல்களுக்கு எண்ட் கார்டு – கிளைமாக்ஸ் படப்பிடிப்பு!

அங்கு ஹேமாவிடம் உண்மையை கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மறைமுகமாக ஹேமாவை கொஞ்சி விட்டு சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி மற்றும் வேணு நால்வரிடமும் சண்டை போடுகிறார். நால்வரும் தன்னிடம் இத்தனை வருடங்களாக தனது மகளை பற்றி மறைத்ததை பற்றி எதற்காக மறைக்க வேண்டும் என்று சண்டை போடுகிறார். பின்னர், பாரதி கிளம்பியதும் தனது மகளை தன்னுடன் அழைத்து செல்ல இருப்பதாக கூறுகிறார்.

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” 2வது ப்ரோமோ – அப்பா பற்றி பேசி அழுது புலம்பிய அபிஷேக் ராஜா!

இதனை கேட்டு ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. சௌந்தர்யா கண்ணம்மாவிடம் கெஞ்சுகிறார். தனது மகன் கண்ணம்மா பிரிந்ததும் மிகவும் குடி பழக்கத்திற்கு ஆளானதாகவும், பின்னர் ஹேமா வந்த பிறகு தான் பழைய நிலைக்கு திரும்பினான் என்று கூறுகிறார். அதனால் ஹேமாவை அழைத்து போக வேண்டாம் என்று கெஞ்சுகிறார். அவர் மட்டுமின்றி அனைவரும் கெஞ்சுகின்றனர். அதற்கு கண்ணம்மா கூலாக யார் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? எனது குழந்தை எனக்கு வேண்டும் என்று அதிரடியாக கூறி விடுகிறார். கண்ணம்மாவின் இந்த அதிரடி பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here