
ஹேமா மற்றும் லட்சுமியுடன் அகில், ஒன்று சேர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போது மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு திருப்பம் நடக்க இருக்கிறது. இது தொடர்பான, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தமிழக மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பதற்கு காரணம் அதன் கதை அமைப்பு தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஆரம்பம் முதல் தற்போதைய நாள் வரை முதல் இடத்தில் உள்ளது பாரதி கண்ணம்மா டிஆர்பி ரேட்டிங். வழக்கமான கதைகளை போல் அல்லாமல், மிகவும் திருப்பங்கள் நிறைந்த கதையாக உள்ளதால் ரசிகர்களின் ஆதரவு இந்த பாரதி கண்ணம்மாவிற்கு கிடைத்துள்ளது. தற்போது கதையின் நாயகன் பாரதி, கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் புரிதல் தான் தேவையாக இருக்கிறது என்று கூறி பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விடுகிறார். இதனால் பாரதி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். ஆனால் குடும்பத்தை சேர்ந்த மற்ற அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், அஞ்சலியை கடத்தி வைத்திருக்கும் போது அவருக்கு பிரசவ வலி வர அப்போது அவரை காணாமல் தேடும் அகிலும், கண்ணம்மாவும் கண்டுபிடித்து விடுகின்றனர். அஞ்சலிக்கு கண்ணம்மா பிரசவம் பார்க்க அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது, அகில் ரவுடிகளிடம் சண்டை போடுவதால் அவருக்கு அடிபட்டு விடுகிறது.
அதன்பிறகு, நிலைமை சீரடைந்து கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வருவது பற்றி பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில், தொடரில் அகிலாக நடிக்கும் நடிகர், ஹேமா மற்றும் லட்சுமி பாப்பா போன்ற மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகில் தலையில் அடிபட்டு கட்டுடன் உள்ளார். இதனால் பாரதியும், கண்ணம்மாவும் குழந்தைகளுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பது போன்ற காட்சிகள் தொடரில் வர இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இவர்கள் குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்பது தெரிகிறது.