ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பாரதி & கண்ணம்மா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பாரதி & கண்ணம்மா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பாரதி & கண்ணம்மா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பாரதி & கண்ணம்மா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தற்போது பாரதி ஒரு புதிய மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் பணிக்கு சேர்ந்துள்ளதால் இருவரும் சேருவதற்கான அதிகமான வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதிக்கு கண்ணம்மாவை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போதுதான் தெரிய வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை விட்டு பாரதி எவ்வளவு தூரமாக போக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

பலதடவை கண்ணம்மாவுடன் இணைந்து இருக்கும்படியான சூழ்நிலைஅதுவே அமைத்துக் கொடுக்கிறது. தற்போது கூட தன்னுடைய அப்பா யார் என்பதை லட்சுமி அறிந்துகொண்டு பாரதியை விட்டுவிடக் கூடாது என முடிவு செய்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஹேமாவும் தன்னுடைய அப்பாவுக்கு கண்ணம்மாவை திருமணம் செய்து வைத்தால் ஒரே வீட்டில் 4 பேரும் நிம்மதியாக சந்தோசமாக வாழலாம் என நினைக்கிறார். இதற்கு இடையே வெண்பாவின் அம்மாவும் தற்போது சீரியலில் புதிதாக அறிமுகமாகி கண்ணம்மாவுடன் பாரதியை சேர்த்து வைக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முழு விபரம் இதோ!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி VB எனும் ஒரு புதிய மருத்துவமனை ஒன்றில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீசராக பணியில் சேர்ந்துள்ளார். கண்ணம்மாவும் அதே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளதை நினைத்து பாரதிக்கு கோபம் வருகிறது. இவளுடன் இணைந்து தான் நாம் பணியாற்ற போகிறோமா என நினைக்கிறார். இதற்குப் பிறகாவது கண்ணம்மாவை பற்றி பாரதி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!