பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய
பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
பாரதியை அழைத்து தனியாக பேசும் கண்ணம்மா, இருவரும் இணைவார்களா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைக்கிறார். பாரதியிடம் நம்ம குழந்தையை காணவில்லை என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா டாக்டர் உங்களுக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என சொன்னதை நினைத்து பார்க்கிறார். இது பற்றி அத்தையிடம், துளசியிடம், அகில், அஞ்சலி என அனைவரிடமும் கேட்டுட்டேன் ஆனால் யாரும் தெரியாது என சொல்கின்றனர். அவர்கள் சொல்வது மேலே எனக்கு நம்பிக்கை இல்லை. இது பற்றி பாரதியிடம் கேட்போம் என நினைத்து, பாரதிக்கு போன் செய்கிறார். பாரதி போனை எடுத்ததும் முதலில் பேச தயங்கிய கண்ணம்மா, உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார்.

உன்னுடன் பேசும் அளவிற்கு நமக்குள்ள எதுவும் இல்லை என பாரதி சொல்ல, முக்கியமான விஷயம் என கண்ணம்மா சொல்கிறார். பாரதி சரி என ஒப்புக் கொள்கிறார். மறுபக்கம் வேணு சௌந்தர்யா அகில் அஞ்சலி பேசிக் கொண்டிருக்க, எனக்கு முடியாமல் இருக்கும் போது கூட கண்ணம்மா வர மறுக்கிறாள் என சொல்லி வருத்தப்படுகின்றனர். அப்போது அங்கே வெண்பா வந்து அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கிறாள். உடனே அகில் பாரதி தவறை உணர்ந்தால் கண்ணம்மா அண்ணி வரேன் என்று தானே சொல்லிருக்காங்க என சொல்ல சௌந்தர்யா பாரதியை மனம் திருந்த வைக்க வேண்டும் என சொல்கிறார்.

ஜீ தமிழ் ‘திருமதி ஹிட்லர் ‘ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

அப்போது யாரோ மறைந்து நிற்பதை பார்த்து, யார் என கேட்கிறார். அங்கே வெண்பா வர கோபத்துடன் நாங்க பேசியதை எல்லாம் ஒட்டு கேட்கிறியா என கேட்க, இல்லை நீங்க பேசிக் கொண்டு இருக்கீங்க அதான் அங்கே நின்று பார்த்தேன் என வெண்பா சொல்கிறார். உடனே வெண்பாவை வெறுப்பேத்துவது போல பேசிய சௌந்தர்யா, வெண்பாவிற்கு ஜூஸ் தர சொல்கிறார். மறுபக்கம் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சந்திக்கின்றனர்.

அந்த இடத்தில் தான் கண்ணம்மா தான் கர்ப்பமாக இருப்பதை சொன்னால், என்ன விஷயம் என பாரதி கேட்க, நான் என் பழைய பாரதி மாமாவிடம் பேச வேண்டும் அவர் மிகவும் அன்பானவர்,அனைவருக்கும் உதவி செய்பவர் என கண்ணம்மா சொல்ல, நானும் என் பழைய கண்ணம்மாவிடம் பேச வேண்டும் அவள் உண்மையானவள் உலகம் தெரியாதவள் என சொல்கிறார். நான் தான் பழைய கண்ணம்மா என சொல்ல, பாரதி சிரிக்கிறார்.

சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் – ஹைதராபாத்தை விட்டு வெளியேற திட்டம்?

கண்ணம்மா என் கண்ணை பார்த்து பேசுங்கள் பழைய கண்ணம்மா தெரிவாள் என சொல்ல, பாரதி பேசாமல் அப்படி பேசுகிற அளவிற்கு நாம் இல்லை நீண்ட தூரம் சென்றுவிட்டோம் என சொல்லி நடக்க தொடங்குகிறார். உடனே பின்னாடி சென்ற கண்ணம்மா நம்ம குழந்தையை பற்றி பேச வேண்டும் என சொல்கிறார். உடனே பாரதி நம்ம குழந்தையா என சிரிக்க, நம்ம குழந்தையை காணவில்லை யாரோ கடத்திவைத்து மிரட்டுகிறார்கள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!