பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா - இன்றைய
பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ சொல்லும் வேணு, கவலையில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு நெஞ்சு வலியால் துடிக்க, கண்ணம்மா வருகிறார். கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் கேட்கிறார். வெண்பா தொடர்ந்து போன் செய்ய கண்ணம்மா எடுக்காமல் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு நெஞ்சு வலிப்பது போல நடிக்க கண்ணம்மா அங்கே வருகிறார். கண்ணம்மாவும் பாரதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.அப்போது கண்ணம்மா என்னாச்சு மாமா என ஓடி வர, வேணு நான் சாக போகிறேன் எனக்கு கடைசி ஆசை ஒன்று இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து நிக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் பாரதி வர மறுக்க சௌந்தர்யா சென்று பாரதி அருகில் நிற்க வைக்கிறார்.

பின் நான் இன்னும் கொஞ்ச நேரம் தான் உயிரோடு இருப்பேன் நீங்க இருவரும் பழசு அனைத்தையும் மறந்து சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் கேட்கிறார். அந்த நேரம் பார்த்து வேணுவை பரிசோதனை செய்ய டாக்டர் வர, வேணு மீண்டும் நடிக்க தொடங்குகிறார். வெண்பா தொடர்ந்து போன் செய்ய கண்ணம்மா எடுக்காமல் இருக்கிறார். உடனே கண்ணம்மா வெளியே சென்று பேசிவிட்டு வருகிறேன் என சொல்லி வெளியே சென்று வெண்பாவிடம் பேசுகிறார்.

10 ஆண்டுகளுக்கான செம்மொழி விருதுகள் – தமிழக அரசு அறிவிப்பு!

அப்போது எதுக்கு எனக்கு போன் பண்ணிட்டு இருக்க, நான் என்ன சும்மாவா இருக்கேன் என சொல்ல என்ன திமிரு வந்துவிட்டதா என வெண்பா கேட்கிறார். நான் மருத்துமனையில் இருக்கேன், என் மாமாவிற்கு உடம்பு சரியில்லை சௌந்தர்யா அத்தை தான் என்னை வர சொன்னாங்க என சொல்ல, வெண்பா போச்சு வேணு என்னுடைய கடைசி ஆசை என சொல்லி பாரதியும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்துவிட்டால் என்ன ஆகும் என புலம்புகிறார்.

பின் லட்சுமி குமாருடன் இருக்க போர் அடிப்பதாக சொல்லி போனை வாங்கி ஹேமாவிற்கு போன் செய்கிறார். எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கு நீயும் நானும் வேற வேற தான ஆனால் உன் தாத்தாவிற்கு முடியலை என்றால் என் அம்மா ஏன்போறாங்க என கேட்க, எனக்கும் அதே சந்தேகம் இருக்கு சமையல் அம்மா ஏன் என் மீது இவ்வளவு பாசமாக இருக்காங்க என கேட்கிறார். நாம் இருவரும் ஒரே வீட்டில் பிறந்திருக்கலாம் என லட்சுமி சொல்ல, ஹேமாவும் ஆமாம் என சொல்கிறார்.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா சாதித்த கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பின் வேணுவை வீட்டிற்கு அனுப்ப, கண்ணம்மாவை வீட்டிற்கு வந்து இருக்க சொல்லி ஆசைப்படுகிறார். ஆனால் கண்ணம்மா என் மரியாதை போன இடத்திற்கு நான் வரமாட்டேன் என சொல்ல, சரி என்னை வீடு வரை கொண்டு வந்து விட சொல்கிறார். கண்ணம்மாவும் வரேன் என சொல்ல, வீட்டிற்கு வந்ததும் உள்ளே வர சொல்கின்றனர். ஆனால் கண்ணம்மா பிடிவாதமாக வாசலில் நின்று கொண்டு அப்படியே கிளம்புகிறேன் என சொல்ல, இதுக்கு ஒரு முடிவே இல்லையா என சௌந்தர்யா கேட்க, உங்க புள்ள தப்பை உணர்ந்து என் ஒழுக்கம் மேலே போட்ட பழி அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டால் நான் இந்த வீட்டிற்கு வருவது பற்றி யோசிப்பேன் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!