லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா - இன்றைய
லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமிக்கு உணவு சமைத்து தரும் சௌந்தர்யா, கண்ணம்மாவை ஏமாற்றும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா கண்ணம்மா வீட்டிற்கு வந்து லட்சுமி நல்ல உணவுகளை சமைத்து கொடுக்கிறார். பின்னர் வெண்பா இரண்டாவது குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை அழுக வைத்துவிடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா உடன் சென்ற கண்ணம்மாவை தேவையில்லாமல் என்னிடம் பகைத்து கொள்ளாதே, இப்போ வந்துட்டு போனவளிடம் சொன்னால் உன் குழந்தையை காலம் முழுவதும் பார்க்க முடியாமல் போய்விடும் என சொல்கிறார். கண்ணம்மா என் குழந்தையை கொடுத்துவிடு என கெஞ்ச, அப்போ நான் சொல்றது எல்லாத்தையும் செய்ய வேண்டும் என சொல்கிறார். சரி என கண்ணம்மா சொல்ல, இனிமேல் தினமும் எனக்கு போன் செய்ய வேண்டும், நான் எடுத்ததும் என்னிடம் திருமதி பாரதி என சொல்லி பேச வேண்டும் என சொல்கிறார்.

உன் வாய்யால நான் அப்படி சொல்வதை கேட்டு சந்தோசப்பட வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா கண்களை கட்டி கொண்டு வந்து ரோட்டில் இறக்கி விடுகிறார் வெண்பா. சௌந்தர்யா கண்ணம்மா வீட்டிற்கு வர, இங்க ஏன் வந்திருக்க என வேணு கேட்க, அவள் நான் விலகி போறேன் என தெரிந்தால் சந்தேகம் வரும், அதனால் தான் வந்தேன் என சொல்கிறார்.

வாராக்கடன் பிரச்சனைகளுக்காக ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – மத்திய நிதியமைச்சர் தகவல்!

அங்கே லட்சுமி மட்டும் தான் இருக்கிறார். உன் அம்மா எங்கே என கேட்க, அவங்க வெளியே போயிருக்காங்க என சொல்கிறார். எனக்கு ரொம்ப பசிக்குது என சொல்ல, சௌந்தர்யா நானே சமைக்கிறேன் என சொல்கிறார். உங்களுக்கு சமைக்க தெரியுமா என லட்சுமி கேட்க, உனக்கு பாட்டி எப்படி சமைக்கிறேன் என சொல்லிவிட்டு, சமைக்கிறார். ஒரு பக்கம் அகில் அஞ்சலி பேசிக் கொண்டிருக்க, அஞ்சலி என் மீது கோவமா என கேட்கிறார்.

நான் ஏன் உன் மீது கோவப்பட போறேன் என அகில் சொல்ல, அன்னைக்கு வந்த ஜோசியக்காரர் என்னை ஒரு பரிகாரம் செய்ய சொன்னார்கள், அதை செய்வோமா என கேட்க, அகில் அதெல்லாம் வேண்டாம், மருத்துவமனைக்கு செல்வோம், அது என்னுடைய நம்பிக்கை என அஞ்சலி கேட்கிறார். அவங்க கண்டதெல்லாம் சொல்லி மனதை குழப்புவார்கள் அதுனால வேண்டாம் என அகில் சொல்கிறார்.

விஜய் டிவி பிரபல சீரியலில் களமிறங்கும் ஆனந்தி – புது ட்விஸ்ட்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

வெண்பா கண்ணம்மாவை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கண்ணம்மா வெண்பா சொல்லு சொல்லு என கெஞ்ச வெண்பா சொல்லவே இல்லை. சௌந்தர்யா லட்சுமிக்கு நன்றாக சமைத்து கொடுக்க, அப்போது கண்ணம்மா வருகிறார். நீங்க எப்போ வந்தீங்க என கேட்க சாப்பாடு போடவா என கேட்கிறார். வேண்டாம் என கண்ணம்மா சொல்ல, லட்சுமி நான் அவங்களுடன் சேர்ந்து ஹேமா கூட விளையாட போகவா என கேட்கிறார். கண்ணம்மா வேண்டாம் என சொல்கிறார்.

உடனே லட்சுமியை வேணுவுடன் அனுப்பிவிட்டு ஏன் லட்சுமியை எங்களுடன் அனுப்ப மாட்டேங்குற என கேட்கிறார். அங்கே உங்க புள்ள இருக்காரு அவரு லட்சுமி மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்து கொள்வார். அதை அவரால் தாங்க முடியாது. என் இரண்டு குழந்தைகளில் ஒருத்தியாவது என்னுடன் இருக்கட்டும் என சொல்கிறார். உங்களுக்கு என்ன நீங்க பெத்த இரண்டு பசங்களும் உங்களுடன் இருக்காங்க, ஆனால் என் நிலைமையை நினைத்து பாருங்க என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!