இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா - இன்றைய
இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அகில் அழைத்து செல்கிறார். அங்கே கண்ணம்மா அகிலிடம் இரட்டை குழந்தைகள் பற்றி கேட்கிறார். பின்னர் ஹேமாவும் லட்சுமியும் ஒரே மாதிரி டிரஸ் போட்டதை பார்த்து ஒரே மாதிரி இருப்பதால் கண்ணம்மா தன்னுடைய குழந்தை என நினைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அகில் ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அப்போது ஹேமா லட்சுமிக்கும் ஒரே மாதிரி ட்ரெஸ் அப்பா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார். ஒரே மாதிரி ட்ரெஸ் நல்ல இருக்கு என லட்சுமி சந்தோசப்படுகிறார். நம்ம இரண்டு பேரும் இந்த ட்ரெஸ் போடுவோமா என கேட்டு இருவரும் உள்ளே செல்கின்றனர். அப்போது கண்ணம்மா எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக டாக்டர் சொன்னார்.

இது பற்றி நான் சௌந்தர்யா அத்தையிடம் கேட்டேன், அஞ்சலியிடம் கேட்டேன் ஆனால் யாரும் தெரியாது என சொல்லிவிட்டதாக சொல்கிறார். அகில் உனக்கு இது பற்றி தெரியுமா என கேட்க எனக்கும் தெரியாது என சொல்கிறார். அப்போ ஹேமா யாரு என கண்ணம்மா கேட்க, அவளை நாங்க தத்து எடுத்து வளர்க்கிறோம். நீங்க சென்ற பின்னால் பாரதி பயங்கார மன உளைச்சலில் இருந்தான் அதுனால் தான் அவளை அம்மா தத்து எடுத்துவிட்டு வந்தார்கள். குழந்தை முகத்தை பார்த்து மனம் மாறுவான் என நினைத்தோம் என சொல்கிறார்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 6 பேருக்கு கொரோனா – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

பின் ஹேமாவும் லட்சுமியும் ஒரே ட்ரெஸ்ஸில் வந்து நிற்க, இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக கண்ணம்மா நினைக்கிறார். ஒருத்தி என்னை போலவே இருக்காள் இன்னொருத்தி அவரை போலவே இருக்காள் என நினைத்து பார்க்கிறார். ஹேமாவும் லட்சுமியும் கண்ணம்மா அருகில் வந்து நிற்க, அம்மா நாங்க இந்த ட்ரெஸ்ல இரட்டை குழந்தைகள் போல இருக்கோம் என லட்சுமி சொல்கிறார். அதை கேட்டு ஹேமா அதிர்ச்சி அடைகிறார்.

என்னது அம்மாவா சமையல் அம்மாவ அம்மானு மாத்தி கூப்பிட்டுவிட்டியா என ஹேமா கேட்கிறார். இல்லை ஹேமா லட்சுமி அம்மா நான் தான் என சொல்கிறார் கண்ணம்மா. அப்போ ஏன் என்னிடம் பொய் சொன்னீங்க என கேட்க, அவ கலெக்டர் ஆன பின்னால் தான் என்னை அம்மா என கூப்பிட வேண்டும் என நான் தான் பொய் சொல்ல சொன்னேன் என கண்ணம்மா சொல்கிறார். பின்னர் இருவருக்கும் கண்ணம்மா பாயசம் எடுத்துக் கொண்டுவந்து கொடுக்கிறார்.

சினிமாவை மிஞ்சும் ‘கண்ணான கண்ணே’ மீராவின் உண்மை ஸ்டோரி – விடாமுயற்சி தந்த வெற்றி!

கண்ணம்மா ஹேமாவை ஏக்கத்துடன் பார்க்கிறார். இவள் தான் என் மகள் நீயும் என்னை அம்மா என்று கூப்பிட வேண்டும் என நினைத்து பார்க்கிறார். பின் அகில் ஹேமா அங்கிருந்து கிளம்ப, அஞ்சலி சோகத்துடன் இருக்கிறார். ஏன் இப்படி சோகமாக இருக்க அஞ்சலி, உனக்கு எல்லாம் நல்லா தான இருக்கு உன் அம்மா எவ்வளவு பாசமாக வளைகாப்பு செய்தார்கள், நீ கொஞ்ச நாள் வேணும்னா கண்ணம்மா வீட்டில் இருந்துவிட்டு வா, நீ உன் குழந்தை கண்ணம்மா அவளுடைய குழந்தை எல்லாரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என சௌந்தர்யா சொல்கிறார்.

சௌந்தர்யாவும் வேணுவும் பேசிக் கொண்டிருக்க அகில் ஹேமா வருகின்றனர். ட்ரெஸ் சரியாக இருந்ததா என ஹேமாவிடம் கேட்க சரியாக இருந்தது என சொல்கிறார். அங்கே எடுத்த போட்டோக்களை காட்டுகிறார். சரி நீ சென்று தூங்கு என சௌந்தர்யா சொல்ல, ஒரு முக்கியமான விஷயம் என ஹேமா சொல்கிறார். என்னது என கேட்க, சமையல் அம்மா தான் லட்சுமியின் அம்மாவாம் என சொல்கிறார். விஷயம் தெரியாதது போல சௌந்தர்யாவும் வேணுவும் நடிக்கின்றனர். ஹேமா சென்ற பின்னர் ஒவ்வொரு உண்மையும் தெரிந்த பின்னர் தான் எனக்கு நிம்மதியாக இருக்கு என சௌந்தர்யா சொல்கிறார். இனிமேல் அடிக்கடி கண்ணம்மா வீட்டிற்கு ஹேமாவை அனுப்ப வேண்டாம் என சௌந்தர்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!