
லட்சுமிக்கு ட்ரெஸ் கொடுக்க செல்லும் ஹேமா, இரட்டை குழந்தைகள் குழப்பத்தில் இருக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமிக்கும் ஹேமாவிற்கும் ஒரே மாதிரி புதிய ட்ரெஸ் வாங்கியதை நேராக கொண்டு போய் கொடுக்கும் ஹேமா. சந்தேகத்தில் பாரதி இருக்கிறார். கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகள் பற்றி எப்படி தெரியாமல் இருந்தது என வெண்பா கோவத்தில் இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா லட்சுமிக்கு சாப்பாடு போட்டு அழைக்கிறார். லட்சுமி பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்தவர்களை பற்றி பேசுகிறார். பின்னர் பாரதி வீட்டை பற்றி பேச, குமார் அண்ணனுக்கே பாரதி தான் என்னுடைய கணவர் என சந்தேகம் வந்த போது லட்சுமிக்கு வருவதில் என்ன தவறு என நினைத்து பார்க்கிறார். பின்னர் அகில் சௌந்தர்யா வேணு பேசி கொண்டிருக்க கண்ணம்மாவிற்கு சந்தேகம் வந்து துளசியை பார்க்க சென்றதை சொல்கிறார்.
அப்போ எல்லாம் தெரிந்துவிட்டதா என அகில் கேட்க, நான் அவள் பார்க்க செல்வாள் என தெரிந்து முன்னதாக சென்று சொல்லிவிட்டேன் என சௌந்தர்யா சொல்கிறார். அஞ்சலியிடமும் கண்ணம்மா கேட்டிருக்காள், அடுத்து உன்னிடம் தான் கேட்பாள், அதனால் நீயும் எதுவும் சொல்லவிடாதே என சொல்கிறார். இவ்வளவு தூரம் தெரிந்துள்ளது இனி சிறிது நாள் தான் என்னைக்கு நம்ம வீட்டு வாசலில் இன்று ஹேமா என்னுடைய பொண்ணு என்று சொல்ல போகிறாளோ என அகில் சொல்கிறார்.
சிறந்த வீரருக்கான ஐசிசி விருது 2021 – இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தேர்வு!
உண்மை தெரிந்ததும் எல்லாரையும் விட ஹேமா எப்படி நினைப்பாள் என சௌந்தர்யா சொல்ல, ஹேமா லட்சுமி இருவரையும் இதில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அகில் சொல்கிறார். அப்போது அஞ்சலி அங்கே வர இப்போது மனது சரியாக இருக்கிறதா என கேட்கிறார். இப்போ பரவாயில்லை என அஞ்சலி சொல்கிறார். பின்னர் பாரதியும் ஹேமாவும் அங்கே வர, ஹேமா லட்சுமிக்கு வாங்கிய டிரஸ்ஸை கொண்டு போய் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.
நீ ஏன் போக வேண்டும் அவங்களை வந்து வாங்கிக்க சொல்லு என பாரதி சொல்ல, சௌந்தர்யாவும் அகிலும் ஹேமாவை போக வேண்டாம் என சொல்கின்றனர். அப்போது பாரதிக்கு சந்தேகம் வந்து ஹேமாவை போக சொல்கிறார். அகில் அவளை அழைத்து செல்கிறார். கண்ணம்மா பாரதியை பிரிக்க இவ்வளவு திட்டம் போட்டும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது எப்படி தெரியாமல் இருந்தது. இதை வைத்து இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என வெண்பா நினைத்து கொள்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மாற்றம்? BCCI விளக்கம்!
அப்போது அங்கே சாந்தி வர நடந்ததை சொல்லி கோபப்படுகிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அதன் பின் அஞ்சலி வீட்டு வெளியே அமர்ந்திருக்க குறி சொல்லும் அம்மா மீண்டும் வருகிறார். அஞ்சலி அன்று குழப்பத்தில் இருந்ததாகவும் எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா அவளும் மாசமாக இருக்கிறார் என சொல்கிறார். அன்னைக்கு முழுசா செல்லவிடாமல் உன் கணவர் தடுத்துவிட்டதால் என்னால் சொல்ல முடியவில்லை எனவும், அதற்கான பரிகாரம் ஒன்றை சொல்லி, இதை செய்தால் சின்ன உயிர் பெரிய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.