இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா”எபிசோட்!!

0
இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி - இன்றைய
இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா"எபிசோட்!!
இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா”எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா இரண்டாவது குழந்தை பற்றி துளசியிடம் கேட்கிறார். அவர் தனக்கு தெரியாது என சொல்கிறார். பின்னர் துளசியும் சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கும் போது பாரதி பார்த்ததை வெண்பாவிடம் சொல்லி சந்தேகப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா நேரடியாக துளசியை பார்க்க சென்று இரட்டை குழந்தைகள் பிறந்தது பற்றி கேட்கிறார். ஆனால் துளசி எனக்கு தெரியாது என்பது போல் சொல்கிறார். உனக்கு யார் சொன்னா என துளசி கேட்க, நான் மாசமாக இருக்கும் போது ஒரு டாக்டரிடம் ஸ்கேன் எடுக்க சென்றேன். ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் இத்தனை நாள் எதோ ஒன்றை தொலைத்த உணர்வு எனக்குள் இருந்தது.

இப்போது தான் அது என்ன என்று தெரிந்துள்ளது என கண்ணம்மா சொல்கிறார். பின்னர் கண்ணம்மா அங்கிருந்து கிளம்ப துளசி என் மனம் அறிந்து உன்னிடம் பொய் சொல்கிறேன் என மனதிற்குள்ளேயே மன்னிப்பு கேட்கிறார். பின்னர் பாரதியும் ஹேமாவும் வெண்பா வீட்டிற்கு வருகின்றனர். ஹேமா இங்கே எதற்கு வரோம் என கேட்க உனக்கு டிரஸ் வாங்க வேண்டும். எனக்கு சரியாக வாங்க தெரியாது அதான் இவரை கூட்டிக் கொண்டு செல்ல போகிறோம் என சொல்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!

நீங்க என்ன வாங்கி கொடுத்தாலும் எனக்கு புடிக்கும், இவங்க வர வேண்டாம் என ஹேமா சொல்ல, பாரதி அடுத்தவங்க பேச்சை கேட்டு இப்படி சொல்ல கூடாது என சொல்கிறார். பின்னர் வெண்பா வீட்டிற்கு சென்றதும், ஹேமா ரெஸ்ட் ரூம் செல்கிறார். அப்போது பாரதி சௌந்தர்யாவும் துளசியும் ஒன்றாக பேசிக் கொண்டு இருந்தார்கள். அவளிடம் ஏன் அம்மா பேச வேண்டும் அவள் யார் என தெரியுமா என பாரதி கேட்கிறார். எனக்கு தெரியவில்லை என வெண்பா சொல்கிறார்.

அதன் பின் அஞ்சலி வீட்டு வாசலில் நிற்க ஒரு குறி சொல்லும் அம்மா வருகிறார். அவர் அஞ்சலியை பார்த்து உன் கை பார்த்து சொல்கிறேன் என் வாக்கு எப்போதும் பொய்த்தது இல்லை என சொல்கிறார். சரி என உள்ளே அழைத்து பேச, நீ உன் உயிரை கொடுத்து உன் பிள்ளையின் உயிரை காப்பாற்ற நினைக்கிறார். அதை கடவும் மதிக்கிறார். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை, சின்ன உயிர் சேதாரம் அடைந்து பெரிய உயிருக்கு ஆபத்து வந்தால் என்ன செய்வ என சொல்லி, முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல வருகிறார்.

அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கனரா வங்கியில் பூஜ்ஜியம் இருப்பு கணக்கு – புதிய உத்தரவு!

அப்போது அங்கே அகில் வர அந்த அம்மாவை சத்தமிட்டு வெளியே போக சொல்கிறார். முக்கியமான விஷயம் சொல்லணும் என அந்த அம்மா சொல்ல, எதுவும் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு அஞ்சலியை திட்டுகிறார். அதன் பின்னர் கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன்னுடைய மகள் என்ற குழப்பம் அதிகமாகி உள்ளது. அப்போது அங்கே குமார் வருகிறார். அவர் லக்ஷ்மியின் அப்பா வெளிநாட்டில் இருப்பது உண்மை இல்லை தான என கேட்கிறார்.

அந்த டாக்டர் தான உன் புருஷன் என சொல்கிறார். எப்படி தெரியும் என கேட்க நடப்பதை எல்லாம் பார்த்தால் அப்படி தான் இருக்கிறது என சொல்கிறார். ஒரு குழந்தை உன்னிடம் இன்னொரு குழந்தை அவரிடம் இதெல்லாம் நன்றாக இல்லை அதான் குழந்தைகள் இங்கேயும் அங்கேயும் இருக்கிறார்கள் என அவர் சொல்கிறார். அவருக்கே ஹேமா என் குழந்தை என நினைப்பு வருகிறது எனக்கு வந்தால் என தப்பு என கண்ணம்மா நினைத்து கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!