இரண்டு குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் கண்ணம்மா, சித்த மருத்துவரை சந்திக்கும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
இரண்டு குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் கண்ணம்மா, சித்த மருத்துவரை சந்திக்கும் அஞ்சலி - இன்றைய
இரண்டு குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் கண்ணம்மா, சித்த மருத்துவரை சந்திக்கும் அஞ்சலி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
இரண்டு குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் கண்ணம்மா, சித்த மருத்துவரை சந்திக்கும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா தனது குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கும் நேரத்தை போட்டோ எடுத்து கொள்கிறார். பின் அஞ்சலி சித்த மருத்துவ பாட்டியை சந்திக்கிறார். அவர் சில மருந்துகளை கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா இரண்டு குழந்தைகளுடன் படுத்து கொண்டிருக்கும் போது சந்தோசமாக நினைப்பதாக எண்ணுகிறார். இந்த நாள் இந்த ராத்திரி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கிறது. ஒருத்திக்கு அம்மா பாசம் கிடைக்கவில்லை, இன்னொருத்திக்கு அப்பா பாசம் கிடைக்கவில்லை. ஆனால் இருவருக்கும் இரண்டு பாசமும் கிடைக்கிறது என நினைத்து பார்க்கிறார். அப்போது வெண்பா குழந்தை பற்றி பேசியது கண்ணம்மாவிற்கு ஞாபகம் வருகிறது.

குழந்தையை பற்றி தெரியாமல் என்னை எப்படி மிரட்டுனாய், உன்னை நிம்மதியாக இருக்க விட கூடாது என கண்ணம்மா நினைத்து வெண்பாவிற்கு போன் செய்கிறார். அப்போது சாந்தி எடுத்து போனை கொடுக்க, கண்ணம்மா அழுவது போல நடிக்கிறார். என்னுடைய குழந்தை வெண்பா என அழுது கொண்டே பேச, உடனே கண்ணம்மா என் குழந்தை என்னிடம் தான் இருக்கா என சொல்கிறார். வெண்பா என்ன சொல்கிறாய் என கேட்க, உனக்கு காது கேக்கலையா என் குழந்தை என்னிடம் தான் இருக்கா என சொல்கிறார்.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – காரணமும், விளக்கமும்!

அதாவது வெண்பா என் குழந்தை எப்போதும் என்னைவிட்டு பிரியாமல் இருக்கிறது என சொன்னேன் என நக்கலாக பேசுகிறார். உடனே கடுப்பாகி வெண்பா போனை வைக்கிறார். பின் கண்ணம்மா போட்டோகிராபரை வர சொல்லி போட்டோ எடுக்க சொல்கிறார். இரு குழந்தைகளுடன் சந்தோசமாக போட்டோ எடுத்துக் கொள்ள. லட்சுமியை கை போட விடாமல் ஹேமா கோபப்படுகிறார். உடனே லட்சுமி நீ என்னுடைய அம்மா தான என்னையே இவ கை போட விடமாட்டேங்குறா என லட்சுமி சொல்ல ஹேமா வருத்தப்படுகிறார்.

உடனே கண்ணம்மா இருவரும் சண்டை போட கூடாது என சொல்லி சத்தியம் வாங்குகிறார். பின் மூவரும் சேர்ந்து அழகான போட்டோ எடுத்து கொள்கிறார். மறுபக்கம் பாரதி ஹேமாவை கூப்பிட வர முக்கியமான போன் வருகிறது. பின் அஞ்சலியை பார்க்க கண்ணம்மா சித்த மருத்துவரை அழைத்து வருகிறார். அஞ்சலி என்ன சொல்ல போகிறார் என தெரியாமல் இருக்க அவர் கண்ணம்மாவை உள்ளே போக சொல்கிறார். கண்ணம்மாவும் சென்றுவிட உன் முகத்தில் மாசமாக இருப்பதற்கான சந்தோசமே இல்லை, ரத்த ஓட்டமும் சரியாக இல்லை நீ மருத்துவமனை சென்றாய் அல்லவா அங்கே என்ன சொன்னாங்க என கேட்கிறார்.

பாரதி & வெண்பாவை சீண்டும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்தடுத்த எபிசோடுகள்!

அஞ்சலி சொல்ல முடியாமல் இருக்க இதான் கண்ணம்மாவை உள்ளே போக சொன்னேன் நீ சொல்லு என்ன சொன்னாங்க என கேட்கிறார். அஞ்சலி எனக்கு பிரசவம் ஆகும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொன்னாங்க என சொல்ல, அவர் இந்த குழந்தை இல்லை என்றால் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் உயிர் போனால் வருமா இப்படி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்லை என சொல்லி மருந்து எழுதி கொடுக்கிறார். பின் கண்ணம்மா வர அஞ்சலியிடம் எதுவும் பிரச்சனை இல்லை தானா என கேட்கிறார். அஞ்சலி ஆமாம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here