ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி - இன்றைய
ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமா, அஞ்சலியுடன் சந்தோசமாக இருக்கும் கண்ணம்மா, ஹேமா நினைப்பாக இருக்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி ஹேமாவை அழைத்து கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். கண்ணம்மா ஹேமா வந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமா நினைப்பில் இருக்க எங்கே பார்த்தாலும் ஹேமா போலவே தெரிகிறார். அந்த நேரம் பார்த்து அஞ்சலி ஹேமாவை அழைத்துக் கொண்டு வர சமையல் அம்மா என கண்ணம்மாவை கூப்பிடுகிறார். ஆனால் சமையல் அம்மா போ நீ இப்படி தான் என்னை ஏமாற்றுவாய் என சொல்ல அஞ்சலி அக்கா என கண்ணம்மாவை கூப்பிடுகிறார். உடனே கண்ணம்மா ஹேமாவை பார்த்து சந்தோசமாக இருக்க, காலையில் இருந்து உன் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது அதான் நம்பவில்லை என சொல்கிறார்.

பின் அஞ்சலி இன்னும் 2 நாட்கள் இங்கே தான் இருக்க போகிறோம் என சொல்ல ஹேமா அப்பா எப்படி உங்களை இங்க வர சம்மதம் தெரிவித்தார் என கேட்கிறார். அவர் எங்கே விட்டார் நான் என் அம்மா வீட்டிற்கு சென்று 4 நாள் இருந்துவிட்டு வருகிறேன் என சொன்னேன் அவர் சரி என சொல்லி அவரே கூட்டிக் கொண்டு விடுகிறேன் என சொன்னார் நல்ல வேளை எதோ முக்கியமான போன் வந்ததால் அவர் எங்களை கார் புடித்து அனுப்பிவிட்டு சென்றுவிட்டார் என சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் ஹேமாவை சேர்க்க திட்டமிடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கண்ணம்மா எதாவது சமைக்கிறேன் என சொல்ல சமைக்க வேண்டாம் நான் ஆர்டர் செய்கிறேன் என அஞ்சலி சொல்கிறார். அந்த நேரம் பார்த்து பாரதி போன் செய்ய வீட்டிற்கு சென்றுவிட்டீர்களா என கேட்கிறார். உடனே அஞ்சலி இப்போ தான் வருகிறோம் என சொல்ல, ஹேமாவிடம் போன் கொடுக்க சொல்கிறார். ஹேமா வாங்கி பேச பாரதி நம்பிவிடுகிறார். பின் அஞ்சலி அனைவருக்கும் உணவு ஆர்டர் செய்கிறார். பின் ஹேமாவும் லட்சுமியும் சந்தோஷமாக விளையாட செல்கின்றனர்.

நீண்ட நேரம் விளையாடிவிட்டு போர் அடிப்பதாக சொல்ல கண்ணம்மா சீட்டு விளையாடலாம் என சொல்லி சேர்ந்து விளையாடுகிறார். அப்போது லட்சுமி என்னுடன் விளையாடவில்லை ஆனால் ஹேமா வந்தால் மட்டும் விளையாடுகிறாய் என கேட்க கண்ணம்மா சரி அப்போ நான் விளையாடவில்லை என சொல்கிறார். பின் ஹேமா நீ சும்மா இரு லட்சுமி என சொல்ல, சாப்பாடு வந்துவிடுகிறது. கண்ணம்மா ரொம்ப செலவாகி இருக்கும் இதற்கு நான் சமைத்திருப்பேன் என சொல்ல நீ சமைத்தால் இப்படி சந்தோசமாக இருக்க முடியுமா என கேட்கிறார்.

தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பின் அஞ்சலி ரொம்ப நாளைக்கு அப்பறம் மிகவும் சந்தோசமாக இருக்கேன் என சொல்ல ஏன் உனக்கு என்ன கவலை வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என கண்ணம்மா சொல்ல, அஞ்சலி எல்லருடன் இருப்பது சந்தோசமாக இருக்கிறது என சொல்கிறார். பெற்ற குழந்தைகளுடன் இருப்பது சந்தோசம் தான் என கண்ணம்மா சொல்ல, நீயும் குழந்தை பெற்றுக் கொண்டால் உனக்கு தெரியும் என சொல்கிறார். உடனே அஞ்சலி அதை பார்க்க நான் இருக்கமாட்டேன் என சொல்கிறார்.

பின் சௌந்தர்யாவிடம் வேணு ஹேமாவிடம் பேச வேண்டும் போன் பண்ணு என சொல்ல, சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். இப்போது தான் இருவருக்கும் விளையாடி பூ வைத்து பார்த்தேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது என சொல்ல, ஹேமாவிடம் பேச வேண்டும் என மாமா சொல்கிறார் அவள் இருக்காளா என கேட்க அவள் தூரமாக விளையாட சென்றிருக்கிறார் என கண்ணம்மா சொல்கிறார்.

உடனே சௌந்தர்யா ஹேமாவை 2 நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவிடு என சொல்ல எனக்கு தோணும் போது அனுப்பி வைக்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார். சொல்லப்போனால் அவளை அனுப்பவே வேண்டாம் என நினைப்பதாக கண்ணம்மா சொல்கிறார். உடனே சௌந்தர்யா என்ன செய்வது என தெரியாமல் இருக்க வேலை விட்டு வந்த பாரதி ஹேமா நினைப்பாகவே இருக்கிறார். அனைத்து இடங்களிலும் ஹேமா நினைப்பு வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!