ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா - இன்றைய
ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஹேமா, லட்சுமியை கோவிலுக்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதியிடம் லட்சுமி பற்றி பேசுகிறார். லட்சுமி நம்ம பாட்டி மாதிரியே இருக்கா என சொல்கிறார். பின் கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமியை கோவிலுக்கு கூட்டிக் கொண்டு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதி வாங்கி கொடுத்த புதிய ட்ரெஸ் போட்டுக் கொண்டு வருகிறாள். பாரதியிடம் நன்றாக இருக்கிறதா என கேட்க, நன்றாக இருக்கிறது என பாரதி சொல்கிறார். உடனே ஹேமா அவ்வளவு தான என கேட்க, வேற என்ன சொல்றது என பாரதி கேட்கிறார். இந்த ட்ரெஸ் யார் வாங்கி கொடுத்தா என ஹேமா கேட்க, பாரதி தெரியவில்லையே என சொல்கிறார். உடனே ஹேமா கோவித்து கொள்ள, பாரதியிடம் நீங்க எல்லாத்தையும் மறந்துறீங்க நல்ல டாக்டரை பாருங்க என சொல்கிறார்.

பின் இதே போல டிரஸ் லட்சுமிக்கு வாங்கி கொடுத்தீங்க. என்னை விட அவளுக்கு தான் அது நன்றாக இருந்தது. அந்த டிரஸ்ஸில் அவ நம்ம பாட்டி போலவே இருக்கிறாள். நிறைய இடங்களில் நம்ம பாட்டி போலவே இருக்கிறாள். ஏன் அப்படி இருக்காள் என கேட்க பாரதி கோவப்பட்டு அவளை பற்றி என்னிடம் பேசாதே என சத்தம் போடுகிறான். உடனே ஹேமா வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்புகிறாள். பின் சௌந்தர்யா குடும்பத்துடன் அமர்ந்திருக்க பாரதி ஹேமாவை என்னிடம் இருந்து பிரித்துவிடாதீங்க என சொல்கிறான்.

ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஆனால் கண்ணம்மா 4 நாட்களில் எனக்கு குழந்தை வேண்டும் என கேட்கிறாள் என்ன செய்வது என தெரியவில்லை என சொல்லிக் கொண்டிருக்க அங்கே கண்ணம்மா வருகிறார். ஹேமாவை கூட்டிக் கொண்டு செல்ல வந்திருக்கேன் என சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்னும் 2 நாள் கூட ஆகவில்லையே என அகில் சொல்ல, அவளை நான் கோவிலுக்கு அழைத்து செல்ல இருக்கிறேன் வந்ததும் விட்டுவிடுவேன் என கண்ணம்மா சொல்கிறார்.

அப்போது அங்கே ஹேமா வர கண்ணம்மா அவளை கட்டி அணைத்து அன்பை காட்டுகிறார். உன்னை நான் கோவிலுக்கு கூட்டி செல்ல இருக்கிறேன் என கண்ணம்மா சொல்ல, ஹேமா சந்தோசப்படுகிறாள் ஆனால் பாரதியை பார்த்ததும் டாடி சரி என்று சொன்னால் தான் நான் வருவேன் என சொல்கிறார். உடனே சௌந்தர்யா அதெல்லாம் வேண்டாம் என சொல்ல பாரதி சரி என சொல்கிறார். அப்போது அங்கே லட்சுமி வர இருவரும் சந்தோசமாக கட்டிப்பிடித்து குதிக்கின்றனர்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

அதை பார்த்து கண்ணம்மா சந்தோஷத்தில் இருக்கிறாள். குடும்பத்தினரும் அதை பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். பின் கண்ணம்மா இருவரையும் அழைத்து கொண்டு கிளம்புகிறார். காரில் இருவரையும் அணைத்துக் கொண்டு முத்தமிட்டு செல்கிறார். ஹேமா அப்போது கண்ணம்மாவிடம் என் மீது ஏன் இவ்வளவு பாசமாக இருக்கீங்க என கேட்கிறார். உடனே கண்ணம்மா நீயும் என்னுடைய பொண்ணு தான் என சொல்ல, ஹேமா புரியாமல் பார்க்கிறார்.

அப்போது கண்ணம்மா லட்சுமி உன்னுடன் படிக்கிறாள், அவளுக்கும் உனக்கும் ஒரே நாள் பிறந்தநாள், அவளும் நீயும் நல்ல நண்பர்கள் இது போதாதா நீ என்னுடைய பெண்ணாக இருக்க என கேட்கிறார். ஆனால் என் டாடிக்கு மட்டும் ஏன் உங்களை பற்றி பேசினால் கூட பிடிக்க மாட்டேங்குது என ஹேமா கேட்க கண்ணம்மா பதில் சொல்லாமல் இருக்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மா நடந்து கொள்வது நினைத்து வேணுவிடம் புலம்ப, ஹேமாவிற்கு கண்ணம்மா தான் அம்மா பெயர் என தெரியும் இப்போது கோவிலுக்கு கூட்டி சென்று கண்ணம்மா பெயர் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என கேட்க, சௌந்தர்யா பதட்டப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!