கண்ணம்மாவிடம் 4 நாள் கெடு கேட்கும் சௌந்தர்யா, வெண்பாவை கடுப்பேத்தி அனுப்பிய கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவிடம் 4 நாள் கெடு கேட்கும் சௌந்தர்யா, வெண்பாவை கடுப்பேத்தி அனுப்பிய கண்ணம்மா - இன்றைய
கண்ணம்மாவிடம் 4 நாள் கெடு கேட்கும் சௌந்தர்யா, வெண்பாவை கடுப்பேத்தி அனுப்பிய கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவிடம் 4 நாள் கெடு கேட்கும் சௌந்தர்யா, வெண்பாவை கடுப்பேத்தி அனுப்பிய கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமாவை அழைத்து செல்வேன் என பிடிவாதமாக இருக்க சௌந்தர்யா கண்ணம்மாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். பின் வெண்பாவை வெறுப்பேத்தி அங்கிருந்து அனுப்புகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா தன் மகள் ஹேமாவை அழைத்து கொண்டு செல்வேன் என பிடிவாதமாக இருக்கிறார். உடனே சௌந்தர்யா கண்ணம்மாவிடம் நீ வீட்டிற்கு செல் நான் அழைத்து வருகிறேன் என சொல்ல கண்ணம்மா முடியாது என சொல்கிறார். சௌந்தர்யா அழுது கெஞ்ச பிறந்த 1 மணி நேரம் ஆன குழந்தையை தூக்கி வரும் போது உங்களுக்கு எதுவும் தோணவில்லை. ஆனால் இப்போது மட்டும் நான் செய்வது தவறு என சொல்வீர்களா என கண்ணம்மா கேட்க, சௌந்தர்யா இப்போ இல்லை இன்னும் 4 நாட்களில் ஹேமாவை கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

உடனே கண்ணம்மா 4 நாள் தான் அதுக்கு அப்பறம் ஒரு நிமிடம் கூட நான் காத்திருக்க மாட்டேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கம் வெண்பா வக்கீலுடன் காத்திருக்க, நீண்ட நேரம் ஆகி யாரும் வராததால் வக்கீல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். பின் கண்ணம்மா அங்க வர வெண்பா என்ன இவ்வளவு நேரம் ஆகுது வர, உன் குழந்தையை நினைத்து கொஞ்சமாவது கவலைப்படுகிறாயா என கேட்கிறார். உடனே கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேத்துவது போல நடிக்கிறார்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

ஐயோ என் குழந்தையை கொடுத்துவிடு நான் பார்க்கவேண்டும் என சோகமாக நடித்துவிட்டு, பின் நான் விவாகரத்து போட்ட பின் நீ குழந்தையை காட்டாமல் சென்றால் என்ன செய்வது என கண்ணம்மா வெண்பாவை மிரட்டுவது போல கேட்கிறார். உன் குழந்தையை பற்றி என்னை தவிர வேறு யாரிடமும் கேட்க முடியாது என வெண்பா சொல்லி, என் குழந்தையை நான் பார்க்க வேண்டும் அந்த தூரத்தில் அவளை நிறுத்து இந்த தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

உடனே வெண்பா கடுப்பாகி அங்கிருந்து கிளம்புகிறார்.பின் கண்ணம்மா என் குழந்தையை பற்றி எதுவும் தெரியாமல் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா என நினைத்து பார்க்கிறார். மறுபக்கம் பாரதி கண்ணம்மா எதற்காக வீட்டிற்கு வந்தால் என குழப்பத்தில் இருக்கிறார். ஹேமா வண்டியில் வரும்போது பாரதி தன்னுடைய தோழி அப்பாவை காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறார். அப்போது பாரதி நீ என் மகள் நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன் என பாரதி சொல்ல, வேகமாக போங்க சமையல் அம்மா நமக்காக காத்திருப்பாங்க என ஹேமா சொல்கிறார்.

குறித்த நேரத்திற்கு முன்பாக திட்டங்களை முடிக்க நடவடிக்கை – பிரதமர் மோடி பெருமிதம்!

பின் கண்ணம்மா லட்சுமியிடம் சென்று எனக்கு இரண்டு பொக்கிஷம் கிடைத்திருக்கு என ஸ்வீட் கொடுக்கிறார். என்ன அம்மா இவ்வளவு சந்தோசமாக இருக்க என லட்சுமி கேட்க, கண்ணம்மா நீ இத்தனை நாளாக விளையாட யாருமில்லை என சொன்னீல, இன்னும் சில நாளில் உனக்கு ஒரு தோழி வர போறாங்க என கண்ணம்மா சொல்ல லட்சுமி சந்தோசமாக நிஜமாக தான் சொல்லுறிய என கேட்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மா கெடு விதித்ததை நினைத்து கண்ணாடி கிளாஸ்ஸை நொருக்கிறார். அப்போது அவர் கையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here