ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா - இன்றைய
ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட செல்ல சௌந்தர்யா தடுக்கிறார். பின் கண்ணம்மா என் குழந்தை வேண்டும் அதற்காக என்ன வேணும்னாலும் செய்வேன் என கண்ணம்மா சொல்கிறார். உடனே சௌந்தர்யா ஹேமா தான் உன்னுடைய பொண்ணு என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட போகிறார். அப்போது சௌந்தர்யாவை லட்சுமி அழைத்துக் கொண்டு வருகிறார். லட்சுமி சௌந்தர்யாவிடம் அம்மா சில நாட்களாக சரியாக தூங்காமல் சரியாக சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்கிறார் என சொல்கிறாள். உடனே சௌந்தர்யா லட்சுமியை விளையாட அனுப்பி வைத்துவிட்டு கண்ணம்மாவிடம் பேசுகிறார். என்ன பிரச்சனை குழந்தைக்கு தெரியும் அளவு ஏன் இப்படி நடந்து கொள்கிற என கேள்வி கேட்கிறார்.

உடனே கண்ணம்மா சௌந்தர்யாவை அத்தை என அழைக்காமல் உங்களுக்கு என்ன மேடம் என கேட்கிறார். ஏன் என்னை இப்போ மேடம் என சொல்கிறாய் என கேட்க, அதெல்லாம் நாளை தெரியும் என கண்ணம்மா சொல்ல, ஏன் என்ன செய்ய போகிறாய் பாரதியும் அப்படி தான் பேசுகிறான் இருவரும் சேர்ந்து என்ன செய்ய போறீங்க என சௌந்தர்யா கேட்கிறார். உடனே கண்ணம்மா கதறி அழுது சுவற்றில் தலையை முட்டி அழுகிறார். என் குழந்தையை காப்பாற்ற எனக்கு வேற வழி தெரியவில்லை என சொல்லி அழுகிறார்.

தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

உடனே கண்ணம்மா டேபிளில் இருந்த விவாகாது பேப்பரை எடுத்து மடிக்கிறார். இது என்ன பேப்பர் என சௌந்தர்யா கேட்க, கண்ணம்மா அந்த பேப்பரை மறைகிறார். உடனே சௌந்தர்யா அதை வாங்கி பார்த்து, இத்தனை நாளாக எத்தனையோ கஷ்டம் வந்திருக்கு அப்போ எல்லாம் தைரியமாக இருந்த இப்போ என்ன நடந்தது என கேட்கிறார். உடனே கண்ணம்மா என் குழந்தை வேண்டும் என சொல்கிறார். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என சௌந்தர்யா கேட்க, கண்ணம்மா என் குழந்தையை காப்பாற்ற இதான் வழி பாவம் அவள் மிகவும் கஷ்டப்படுகிறாள் என சொல்கிறார்.

உன் குழந்தை எங்கே இருக்கு என உனக்கு தெரியுமா என சௌந்தர்யா கேட்க, தெரியும் பாவம் அவள் எங்கே இருக்காளோ எப்படி இருப்பாளோ அவளை தூக்கி நான் கொஞ்ச வேண்டும் என கண்ணம்மா அழுது கொண்டே சொல்ல, உன் குழந்தை இருக்கும் இடத்தை யார் சொன்னார் என சௌந்தர்யா கேட்கிறார். உடனே கண்ணம்மா என்னை விடுங்க நான் வக்கீல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என சொல்ல உடனே சௌந்தர்யா கோவப்பட்டு உன் குழந்தை சந்தோசமாக இருக்காள் என சொல்கிறார்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தீவிரமெடுக்கும் ஆய்வு!

என் பொண்ணை பார்த்திருக்கீங்களா என கேட்க, இன்று ஒரு நாள் விடு உன் குழந்தை நன்றாக ஒரு வீட்டில் இருக்கும் என நம்பு என சொல்ல, கண்ணம்மா என்னால் நம்ப முடியாது நான் போகிறேன் என சொல்கிறார். உடனே சௌந்தர்யா யாரோ உன்னை ஏமாற்றுகிறார்கள். உன் பொண்ணு ஒரு குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறாள் என சொல்ல, கண்ணம்மா அப்போ என் பொண்ணு எங்கே இருக்காள் என உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார். அவ எப்படி இருப்பா என கண்ணம்மா கேட்க, அவ உன்னை போலவே இருப்ப அப்படியே உன் குணம். பேச்சு, நிறம், பொறுமை எல்லாமே உன்னை போல தான் என சௌந்தர்யா சொல்ல, அவ வேற யாரும் இல்ல, சமையல் அம்மா சமையல் அம்மா என உன் பின்னால சுற்றி வந்தாலே அந்த ஹேமா தான் உன் பொண்ணு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here