கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, லட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, லட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சௌந்தர்யா - இன்றைய
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, லட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, லட்சுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வீட்டிற்கு சென்று பாரதி கண்ணம்மாவை வெறுப்பது போலவே பேசுகிறார். பின் லட்சுமியை சௌந்தர்யா அவரது வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி காரில் கண்ணம்மா வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா வீட்டிற்கு சென்று அவளே வெறுத்து என்னுடன் வாழ மாட்டேன் என சொல்லும்படி செய்வேன் என சொல்லிக் கொண்டே செல்கிறார். பின் கண்ணம்மா மாடியில் இருந்து பார்க்க பாரதி கார் வருகிறது. பாரதி கிழே இறங்கி கண்ணம்மாவை பார்க்க அந்த பக்கம் போன ஒருவர் யார் நீங்க உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். எங்க வீட்டிற்கு தான் வந்திருக்கிறார் என கண்ணம்மா சொல்கிறார். பின் உள்ளே வந்த பாரதி ஹேமா போட்டோவை பார்த்து கோபப்படுகிறார்.

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை – அரசு அறிவிப்பு!

என் பொண்ணோட போட்டோ கண்ட இடத்தில் இருக்க கூடாது அதனால் கழட்டிவிட்டு என சொல்கிறார். கண்ணம்மா கழட்டி வைக்க, உன்னுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ நான் நினைக்கவில்லை 6 நாளில் நீ என் தொல்லை தாங்காமல் விவாகரத்து கொடுக்க சம்மதம் தெரிவிப்ப என சவால் விடுகிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை கூப்பிட வர, சௌந்தர்யாவை பார்க்கிறார். கண்ணம்மா நல்ல புடவை கட்டு நல்லா அவனுக்கு பிடித்த சாப்பாடு சமைத்து கொடு பழசு எல்லாம் நினைவுக்கு வருவது போல நடந்துக்கொள், அவனே இந்த வாழ்க்கையை மிஸ் செய்துவிட்டு இப்படி கஷ்டப்படுகிறேன் என நினைக்க வை என சொல்ல நான் முயற்சி செய்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார். லட்சுமியிடம் நான் என்ன சொல்வது என கேட்க, சௌந்தர்யா ஒரு யோசனை சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐக்கியின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அப்போது லட்சுமி ஹேமா வர, அப்பா எங்கே என ஹேமா கேட்கிறார். உங்க அப்பா மெடிக்கல் கேம்ப் போய்ட்டாரு அதனால் கொஞ்ச நாளைக்கு டாடி வீட்டிற்கு வரமாட்டார் என சொல்ல எத்தனை நாளைக்கு என ஹேமா கேட்கிறார். அப்போது சௌந்தர்யா 6 மாதத்திற்கு என சொல்ல, ஹேமா ரொம்ப நாள் அப்பாவை பார்க்க முடியாதா என கேட்கிறார். வீட்டிற்கு தான் வர முடியாது ஸ்கூலில் வந்து பார்ப்பான் என சௌந்தர்யா சொல்ல, எனக்கு டாடி இல்லாமல் வீட்டில் போர் அடிக்கும் என ஹேமா சொல்ல, சௌந்தர்யா லட்சுமியை நான் அழைத்து செல்கிறேன் என சொல்கிறார். கண்ணம்மாவிடம் நீயும் ஸ்கூலில் இருந்து பார்த்துக்கொள் என சொல்ல, லட்சுமியிடம் எங்க வீட்டில் ஒரு குட்டி பாப்பா வேற இருக்கிறது என சொல்கிறார்.

அஞ்சலி சித்தி வயிற்றில் இருந்த குட்டி பாப்பா வந்துருச்சா என லட்சுமி கேட்க, ஆமாம் உன் அம்மா சொல்லவில்லையா என கேட்கிறார். ஆமாம் என லட்சுமி சொல்ல, கண்ணம்மா லட்சுமி நான் இல்லாமல் இருக்கமாட்டாள் என சொல்கிறார். லட்சுமி நான் போய்ட்டு வரேன் என சொல்ல, சௌந்தர்யா இரண்டு குழந்தைகளையும் அழைத்து செல்கிறார். சௌந்தர்யா கண்ணம்மாவிடம் சிரித்த முகமாக இரு அப்போது தான் நன்றாக இருக்கும் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!