வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி - இன்றைய
வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசித்து பார்க்கிறார். பின் அஞ்சலி வெண்பா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி நீதிமன்றத்தில் சொன்னது பற்றி நினைத்து பார்க்கிறார். கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என நினைக்க, அவர் மனசாட்சி பேசுகிறார். அது உனக்கு துரோகம் செய்தவளுடன் சேர்ந்து வாழ வேண்டுமா என கேட்க இன்னொரு மனசாட்சி நீ ரொம்ப நல்லவனா நம்பி வந்த பெண்ணை இப்படி தனியாக விட்டிருக்கிறாய். ஊரே கண்ணம்மா மீது நியாயம் இருக்கிறது என சொல்ல, நீ ஏன் அதை நம்ப கூடாது. அதை மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என சொல்கிறது.

திருச்சியில் நாளை (நவ.26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

மற்றொரு பக்கம் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் இந்த ஊரே உன்னக்கு கேவலமாக பார்க்கும் என சொல்ல, பாரதி முடியாது அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என சொல்கிறார். பின் மாயாண்டியை செல்வி திட்டி கொண்டே இருக்கிறார். நல்லா சாப்பிடுகிறாய் ஆனால் ஒரு வேலை ஒழுங்காக செய்ய முடியவில்லை என சொல்ல, அஞ்சலி அல்லது கண்ணம்மா யாரையாவது வெண்பா வெளியே வருவதற்கு முன்பு கொல்ல வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா வீட்டில் அவர் குலாப் ஜாமுன் செய்து கொண்டிருக்கிறார். அப்போது குமார் வந்து எல்லா பணமும் கலெக்சன் பண்ணியாச்சு, நீண்ட நாளாக வராத காசு கூட வந்துவிட்டது என சொல்கிறார்.

அப்போது என்ன விஷயம் இப்படி சந்தோசமாக இருக்க என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் பாரதி வெண்பா எப்படி இருக்கிறாள் என தெரியவில்லை. அவளை பார்த்தா நீதிமன்றத்தில் சொன்னதற்கு ஒரு தெளிவு கிடைக்கும் என நினைக்கிறார். அப்போது அஞ்சலி அகில் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என சொல்லி பாரதியிடம் பேச வருகிறார்கள். என்ன நடந்தது என கேட்க, நான் குழந்தை பற்றி மருத்துவரிடம் செல்ல வேண்டும் என நினைத்து போனேன் அங்கே என் கர்ப்பப்பை குழந்தையை தாங்க முடியாதது என சொன்னார்கள்.

சென்னையில் நாளை மறுநாள் (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இது பற்றி வெண்பாவிற்கு தெரியும் என சொல்ல, வெண்பாவிற்கு தெரியுமா என பாரதி அதிர்ச்சி அடைகிறார். பின் அவள் எனக்கு மருந்து எழுதி கொடுத்தாள் அதை சாப்பிட்டால் எனக்கு நெஞ்சுவலி அதிகமாகும், ஒரு நாள் கண்ணம்மா வீட்டிற்கு சென்ற போது அது உங்க கையெழுத்து இல்லை என கண்ணம்மா அதை கிழித்து விட்டாள் ஒருநாள் மருந்து வாங்க அகில் போனிற்கு அந்த சீட் புகைப்படம் எடுத்தேன் என சொல்லி பாரதியிடம் காட்டுகிறார். இது என்னுடைய மருந்து சீட்டு தான் என்னுடைய கையெழுத்து போலவே இருக்கிறது என அதிர்ச்சி அடைகிறார்.

இது என்ன மருந்து என கேட்க உனக்கு இருக்கும் பிரச்சனைக்கு இந்த மருந்தை சாப்பிட்டால் உனக்கு அதிகமாகும் என சொல்ல, ஆமாம் அதிகமானதுனால தான் நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என சொல்கிறார். இப்பவாச்சும் வெண்பாவின் உண்மை முகத்தை தெரிந்து கொள் நீதிமன்றத்தில் சொன்னதை நினைத்து பார் என அகில் சொல்கிறார். பாரதி வெண்பா செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்படுகிறார். வெண்பாவும் துரோகி தான் கண்ணம்மா பழைய துரோகி அதனால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என நினைக்கிறார். ஆனால் இது நீதிமன்றத்தில் தீர்ப்பு நாம் கடைபிடிக்க தான் வேண்டும்.

தூத்துக்குடி, நெல்லை உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – வானிலை மையம் எச்சரிக்கை!

ஆனால் அவள் இங்கே வந்தால் இந்த வீட்டில் இருப்பவர்கள் அவளை தூக்கி வைத்து கொண்டாடி என்னை கடுப்பேத்துவாங்க பேசாமல் அவள் வீட்டிற்கு சென்றுவிட வேண்டியது தான் என முடிவு செய்கிறார். சௌந்தர்யா அகிலிடம் குழந்தை பற்றி கேட்க அவன் தூங்கி கொண்டே இருக்கிறான் என சொல்கிறார். இன்னும் கொஞ்ச நாள் தான் என சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்க பாரதி வருகிறார். உங்களிடம் நீதிமன்றத்தில் சொன்னது பற்றி முடிவு செய்திருக்கேன் என சொல்ல, அதற்காக தான் நாங்க காத்துக் கொண்டிருக்கேன் என சௌந்தர்யா சொல்கிறார். நீதிமன்ற தீர்ப்பின் படி நான் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்திருக்கேன் என பாரதி சொல்ல, சௌந்தர்யா சந்தோஷத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!