மாப்பிள்ளை முன் வித்தியாசமாக நடந்து கொண்ட வெண்பா, பாரதிக்கு வாழ்த்து சொன்ன லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
மாப்பிள்ளை முன் வித்தியாசமாக நடந்து கொண்ட வெண்பா, பாரதிக்கு வாழ்த்து சொன்ன லட்சுமி - இன்றைய எபிசோட்!
மாப்பிள்ளை முன் வித்தியாசமாக நடந்து கொண்ட வெண்பா, பாரதிக்கு வாழ்த்து சொன்ன லட்சுமி - இன்றைய எபிசோட்!
மாப்பிள்ளை முன் வித்தியாசமாக நடந்து கொண்ட வெண்பா, பாரதிக்கு வாழ்த்து சொன்ன லட்சுமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி பாரதிக்கு போன் செய்து சக்தி உயிரை காப்பாற்றியதற்கு வாழ்த்துக்களை சொல்கிறார். பின் ஹேமா பேச்சு போட்டியில் முதல் பரிசு வாங்குகிறார். வெண்பாவை மாப்பிள்ளை பார்க்க வர அவரிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்பிக் கொண்டிருக்க கண்ணம்மா புத்தகங்களை பேக்கில் வைக்கிறார். அப்போது லட்சுமி இங்கே இப்படி வேர்க்கிறது என சொல்கிறார். மின்விசிறியை வேகமாக வைக்க சொல்லி சொல்ல அப்போது கண்ணம்மா அது வேகமாக தான் ஓடுகிறது என சொல்கிறார். இதுவே நம்ம அப்பா வீட்டில் ஹாலில் பெரிய ஏசி மாட்டி இருக்காங்க நல்ல ஜில்லுனு இருக்கும். நாம இந்த சின்ன வீட்டில் இருந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் என கேட்கிறார். பின் அப்பாவிற்கு போன் செய்ய போகிறேன் என போனை தேட கண்ணம்மா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் கண்ணம்மா சொல்வதை கேட்காமல் லட்சுமி பாரதிக்கு போன் செய்கிறார். அப்போது பாரதி போனை எடுக்க லட்சுமி பேசுவதை பார்த்து பாரதி என்ன ரவுடி என சொல்ல, நீங்க கஷ்டப்பட்டு அந்த சக்தி பாப்பா உயிரை காப்பாற்றியது மிகவும் பெரிய விஷயம் எல்லாரும் உங்களை பாராட்டினார்கள். நானும் வாழ்த்துக்களை சொல்கிறேன் என சொல்கிறார். பின் பாரதி சரி என சொல்கிறார். கண்ணம்மா லட்சுமி எதுவும் பேசாமல் இருந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார்.

வெண்பா தூங்கி கொண்டிருக்க சாந்தி புது ட்ரெஸ் நகை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து வெண்பாவை எழுப்புகிறார். ஆனால் வெண்பா எழுந்திருக்காமல் இருக்க அப்போது ஷர்மிளா வந்து மாப்பிள்ளை வீடு வர இருப்பதாகவும் நீ கிளம்பி இருக்க வேண்டும் என சொல்கிறார். வெண்பா முடியாது என சொல்ல ஷர்மிளா கேஸ் மீண்டும் தொடங்க வேண்டுமா என மிரட்டுகிறார். உடனே சாந்தி வெண்பாவை கிளம்ப சொல்கிறார். வெண்பா வேற வழி இல்லாமல் கிளம்புகிறார்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் கவனத்திற்கு – சூப்பர் அறிவிப்பு!

மறுபக்கம் ஹேமா லட்சுமி ஸ்கூலில் இருக்க ஹேமா நான் ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல இருப்பதாக சொல்கிறார். லட்சுமி என்ன என கேட்க அப்போது ஹேமா அன்னைக்கு நடந்த பேச்சுப்போட்டியில் நான் தான் முதல் பரிசு என சொல்கிறார். லட்சுமி அதை நினைத்து சந்தோசப்பட நீயும் நானும் அக்கா தங்கச்சி போல என பாட்டி சொல்லிருக்காங்க நீ பரிசு வாங்கியதை நினைத்து நான் தான் சந்தோசப்பட வேண்டும் என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா வர லட்சுமி ஹேமா பரிசு வாங்கியதை சொல்கிறார். சௌந்தர்யா ஹேமாவை கிண்டல் செய்ய ஹேமா கோவித்து கொள்கிறார். பின் ஹேமாவிற்கு வாழ்த்துக்களை சொல்கிறார்.

பின் வெண்பாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருகின்றனர். அப்போது ஷர்மிளா அவர்களை வரவேற்கிறார். பின் வெண்பா மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு அடக்க ஒடுக்கமாக வர மாப்பிள்ளையின் அம்மா டாக்டர் என சொன்னீங்க ஆனால் இவ்வளவு அடக்கமான பெண்ணாக இருக்காளே என பெருமையாக சொல்கிறார். பின் மாப்பிள்ளையிடம் தனியாக பேச வேண்டுமா என சொல்ல வெண்பா ஆமாம் என சொல்கிறார். ஷர்மிளா வேண்டாம் என சொல்ல கேட்காமல் தனியாக பேசுகிறார். அப்போது ஆண் நண்பருடன் பேசுவது போல வெண்பா நடிக்க மாப்பிள்ளைக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறது. பின் ஆண் நண்பருடன் வெளியே செல்ல இருப்பது போல வெண்பா பேசுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here