லட்சுமி மீது பாசத்தை காட்டும் பாரதியின் குடும்பம், உண்மையை தெளிவுபடுத்திய சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
லட்சுமி மீது பாசத்தை காட்டும் பாரதியின் குடும்பம், உண்மையை தெளிவுபடுத்திய சௌந்தர்யா - இன்றைய
லட்சுமி மீது பாசத்தை காட்டும் பாரதியின் குடும்பம், உண்மையை தெளிவுபடுத்திய சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
லட்சுமி மீது பாசத்தை காட்டும் பாரதியின் குடும்பம், உண்மையை தெளிவுபடுத்திய சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருந்ததை நினைத்து சௌந்தர்யா குடும்பத்தினர் பெருமைப்படுகின்றனர். சௌந்தர்யா லக்ஷ்மியை அன்பாக பார்த்துக் கொள்கிறார். பின் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் பாரதி தான் அப்பா என தெரிந்தும் ஏன் என்னிடம் எதுவும் சொல்லாமல் இருந்தாய் என கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா வேணு அகில் என அனைவரும் லக்ஷ்மிக்கு முத்தங்களை கொடுத்து சந்தோசப்படுகின்றனர். அப்போது லட்சுமி ஏன் இவ்வளவு முத்தம் கொடுத்து என் மீது அன்பாக இருக்கீங்க என கேட்க ஏன் நாங்க இருக்க கூடாத என சௌந்தர்யா சொல்கிறார். பின் ஹேமா அதை எல்லாம் பார்த்து எல்லாரும் லக்ஷ்மியை மட்டும் ஏன் இப்படி கொஞ்சுகிறீர்கள் என கேட்கிறார். லட்சுமி இன்று நல்ல பெண்ணாக இருந்தாள் அதனால் தான் என சொல்கிறார். லட்சுமி எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும் போல இருக்கிறது நான் கிளம்புகிறேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

சௌந்தர்யா நானே கொண்டு சென்று விடுகிறேன் என சொல்கிறார். பின் ஷர்மிளா பாட்டு கேட்டு கொண்டிருக்க வெண்பா வந்து ஷர்மிளாவை கூப்பிடுகிறார். அப்போது ஷர்மிளா என்ன பேபி என கேட்க, அதான் உன் கூடவே ஒருத்தி இருப்பாளே அவள் எல்லாத்தையும் கேட்டு வந்து சொல்லிருப்பாளே மாப்பிள்ளை வர போறாராம் அதற்கு ஏர்போர்டிற்கு கார் அனுப்ப வேண்டுமாம் என சொல்லிருப்பாளே என கேட்கிறார். அப்போது வெண்பா யார் அந்த மாப்பிள்ளை என கேட்க அப்போது அதெல்லாம் உனக்கு நாளை தெரிய வரும் நீ தயாராக இரு என சர்மிளா சொல்கிறார்.

பின் சௌந்தர்யாவும் லக்ஷ்மியும் காரில் வர, அப்பா பற்றி தெரிந்தும் சின்ன பொண்ணு எதையும் வெளியே சொல்லாமல் மனதிற்குள் வைத்திருக்கிறாள் என நினைத்து பெருமைப்படுகிறார். இவள் நினைத்திருந்தால் பாரதியிடம் நீங்க தான என்னுடைய அப்பா எனவும் நீங்க தான என்னுடைய பாட்டி என கேட்டிருக்கலாம் ஆனால் கேட்காமல் மனதிற்குள் வைத்திருக்க எப்படி முடிந்ததோ என நினைத்து சௌந்தர்யா லக்ஷ்மிக்கு முத்தம் கொடுக்கிறார். பின் லட்சுமி ஏன் என்னிடம் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல, உனக்கு காரில் வந்துள்ளது பிடித்திருக்கிறதா என கேட்கிறார்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறையின் சூப்பர் திட்டம்!

எனக்கு பிடித்துள்ளது ஆனால் நான் பெரிய ஆளாக மாறி கலெக்டர் ஆகி என்னுடைய அம்மாவிற்கு இதே போல கார் வாங்கி குடுப்பேன். இது என்னுடைய சொந்த கார் இல்லை, நீங்க சொந்த பாட்டி இல்லை என சொல்கிறார். பின் சௌந்தர்யா லக்ஷ்மிக்கு எதாவது வாங்க தர வேண்டும் என நினைத்து எல்லாம் வாங்கி கொடுக்கிறார். லட்சுமி சொந்த பாட்டி தான என நினைத்து சந்தோசமாக வாங்கி கொள்கிறார். பின் கண்ணம்மா வீட்டில் எல்லா உண்மையும் தெரிந்து எப்படி என்னிடம் சொல்லாமல் இருந்தாய் என நினைத்து அழுகிறார்.

பெத்த பெண்ணிடம் உண்மையை சொல்ல முடியாத அளவு பாவி ஆயிட்டேன் என கண்ணம்மா நினைத்து அழுகிறார். அப்பா பக்கத்தில் இருந்தும் ஏன் உண்மையை சொல்லவில்லை என கேட்டால் நான் என்ன செய்வது என கண்ணம்மா நினைக்கிறார். அப்போது சௌந்தர்யாவுடம் லட்சுமி வருகிறார். கண்ணம்மா லக்ஷ்மியை கட்டி பிடித்து அழுகிறார். பின் சௌந்தர்யா லட்சுமியிடம் உனக்கு எப்படி இவ்வளவு பக்குவம் வந்தது உன் அப்பா பற்றி எத்தனை முறை ஆசை காட்டி இருக்கிறாய். ஆனால் நீ எதிர்பார்த்து இருந்தது பல தடவை ஏமாற்றமாக இருந்தது.

நான் யாருக்கும் பேச பயந்தது இல்லை ஆனால் உன்னிடம் மட்டும் நான் பயந்தேன். உனக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்தும் ஏன் என்னிடம் கேட்கவில்லை என சௌந்தர்யா கேட்கிறார். அப்போது கண்ணம்மா இது பற்றி உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என கேட்க, லட்சுமி கேட்பதற்கு எனக்கு அர்த்தம் தெரியாமல் இருக்குமா என கேட்கிறார். அவள் டாக்டர் அப்பா என கூப்பிட தொடங்கியது முதல் எனக்கு சந்தேகம் வந்தது. ஆனால் பெயர் பலகையில் ஐ லவ் யூ அப்பா எழுதி வைத்திருப்பதை பார்த்து எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!