கண்ணம்மா பாரதியை பாராட்டிய விக்ரம், கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மா பாரதியை பாராட்டிய விக்ரம், கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை -
கண்ணம்மா பாரதியை பாராட்டிய விக்ரம், கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை - "பாரதி கண்ணம்மா" இன்றைய எபிசோட்!
கண்ணம்மா பாரதியை பாராட்டிய விக்ரம், கண்ணம்மா கண்டுபிடித்த உண்மை – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், விக்ரம் மீண்டும் பாரதியையும் கண்ணம்மாவையும் அழைத்து சக்தி ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்ததற்கு பாராட்டுகின்றனர். பின் வெண்பாவின் அம்மா நாளை மாப்பிள்ளை வர இருப்பதாக போனில் பேச சாந்தி அதை கேட்டுவிடுகிறார். மறுபக்கம் கண்ணம்மா வீட்டை ஒதுங்க வைக்க பாரதி பெயர் பலகை கிடைக்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா வேணுவும் ஹேமா லட்சுமி விளையாடுவதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். அப்போது ஹேமா லக்ஷ்மியை ஏமாற்றிவிட லட்சுமி கோவமாக பேசுகிறார். பின் அகில் வந்து உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க லட்சுமி ஹேமா ஏமாற்றுவதாக சொல்கிறார்.அகில் நான் உங்களுடன் விளையாடுகிறேன் என்னை எப்படி ஏமாற்றுகிறீர்கள் என பார்க்கிறேன் என சொல்கிறார். ஹேமா உடன் அகில் விளையாட ஆனால் ஹேமா மீண்டும் ஏமாற்றி விடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஹேமா சிறு வயதில் நடந்த விஷயங்களை பற்றி பேசுகிறார். அப்போது ஹேமா பட்டாசு வெடித்தது பற்றி பேச லட்சுமி கண்ணம்மா தீபாவளி நேரத்தில் அம்மா துணி தைத்து கொடுப்பது பற்றி பேசுகிறார். சௌந்தர்யா அதை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் விக்ரம் கண்ணம்மா பாரதி சக்தியின் ஆப்ரேஷனை நல்லபடியாக முடிந்ததற்கு பாராட்டி பேசுகிறார். ஏற்கனவே நிறைய பாராட்டுக்கள் கிடைத்துவிட்டது என சொல்ல விக்ரம் கண்ணம்மா இன்னொரு ஆம்புலன்சில் பின் தொடர்ந்து வந்தது எல்லாம் பெரிய விஷயம் என சொல்கிறார்.

அதன் பின் பாரதி 6 மணி நேரம் ஆப்ரேசன் செய்தது எல்லாம் பெரிய விஷயம் நான் உங்களுக்கு பெரிய பாராட்டுகளை கொடுக்கிறேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா கிளம்ப சாப்பிட்டிங்களா என விக்ரம் கேட்கிறார். சாப்பிட்டேன் என சொல்ல , சாப்பிடாமல் வேலை செய்ய கூடாது என பாரதி சொன்னது நியாபகத்தில் இருக்கிறதா என கேட்கிறார். இருக்கிறது என கண்ணம்மா சொல்கிறார். பின் கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா போன் செய்கிறார். அவர் நீ ஜெயிச்சிட்டா மா எல்லாரும் உன்னை பற்றி தான் பேசுகிறார்கள். உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு – E-Shram போர்ட்டலுடன் இணைப்பு!

பின் அகில் வேணு என வரிசையாக போன் செய்து பேசுகின்றனர். உயிரை காப்பாற்றி இருப்பது பெரிய விஷயம் என வேணு சொல்கிறார். அடுத்து அகில் பேச அப்பறம் அஞ்சலி போனை வாங்கி பேசுகிறார். இப்படியே எல்லாரும் கண்ணம்மாவிடம் பேசுகின்றனர். கண்ணம்மாவை வீட்டிற்கு சௌந்தர்யா கிளம்ப சொல்ல லட்சுமி காலையில் வருவாள் என சொல்கிறார். பின் பாரதி கண்ணம்மா புத்திசாலித்தனமாக செய்திருக்கலாம் ஆனால் இதை வைத்துக் கொண்டு அவரை அட்மின் வேலையில் வைக்க கூடாது என பாரதி சொல்கிறார். ஆனால் விக்ரம் அவர்களால் எல்லாம் சரியாக செய்ய முடியும் நீங்க பொறுத்திருந்து பாருங்கள் என சொல்கிறார்.

வெண்பாவின் அம்மா யாருடனோ மாப்பிள்ளை என போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சாந்தி நின்று கேட்க, ஷர்மிளா விமான நிலையத்தில் கார் தயாராக இருக்கிறது வெண்பாவின் போட்டோ அனுப்பி இருந்தேனே உங்களுக்கு கண்டிப்பாக புடிக்கும் என சொல்கிறார். நீங்கநாளைக்கு வந்த பின்னால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் சாந்தி வெண்பாவிடம் சொல்கிறார். அப்போது வெண்பா என்ன கட்டிக்க போறவனிடம் பேசுறாங்களா என கேட்க ஆமாம் மாப்பிள்ளை என பேசினார்கள் என விவரத்தை சொல்கிறார். பின் வெண்பா யார் வருகிறான் என பார்க்கலாம் என திமிராக இருக்கிறார். பின் கண்ணம்மா வீட்டில் துணிகளை மடித்து வைக்கிறார். அப்போது பாரதியின் பெயர் பலகையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!