கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் நிறைவேறிய திட்டம், சக்திக்கு ஆப்ரேசன் ஏற்பாடு செய்த விக்ரம் – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் நிறைவேறிய திட்டம், சக்திக்கு ஆப்ரேசன் ஏற்பாடு செய்த விக்ரம் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் நிறைவேறிய திட்டம், சக்திக்கு ஆப்ரேசன் ஏற்பாடு செய்த விக்ரம் - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் நிறைவேறிய திட்டம், சக்திக்கு ஆப்ரேசன் ஏற்பாடு செய்த விக்ரம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பயங்கரமாக மழை பெய்ததால் சாப்பரில் செல்ல முடியாது என கணேஷ் சொல்கிறார். அப்போது பாரதி என்ன செய்வது என தெரியாமல் இருக்க கண்ணம்மா வந்து ரோடு வழியாக செல்ல எல்லாம் தயாராக இருப்பதாக சொல்கிறார். விக்ரம் சக்திக்கு தேவையான ஆப்ரேசன் ஏற்பாடுகளை செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், கணேஷ் விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது பாரதி வருகிறார். இன்னும் 10 நிமிடத்தில் ஆப்ரேசன் முடிந்துவிடும் சாப்பரில் கொண்டு செல்ல முடியாது என்றால் வேற என்ன வழி என கேட்கிறார். அதான் எனக்கும் தெரியவில்லை என கணேஷ் சொல்கிறார். அப்போது பாரதி உங்களுக்கு விஷயத்தின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கிறது. இன்னும் 10 நிமிடத்தில் டாக்டர் ஜார்ஜ் ஆப்ரேசன் முடித்துவிட்டு வந்துவிடுவார். நீங்க எப்படி கொண்டு செல்ல இருக்கீங்க என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கணேஷ் இனிமேல் ரோடு வழியாக கொண்டு செல்வதற்கு அனுமதி வாங்க முடியாது விக்ரம் சார் எதாவது ஏற்பாடு செய்கிறேன் என சொன்னதாக சொல்கிறார். அப்போது கண்ணம்மா வந்து பாரதியிடம் பேச முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருக்கிறோம் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா நானும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல,இதயத்தை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் என கண்ணம்மா சொல்கிறார்.

நீ எப்படி செய்தாய் என பாரதி கேட்க, ரோடு வழியாக கொண்டு செல்ல டிராபிக் எல்லாம் சரி செய்ய சொல்லிவிட்டேன் எல்லாம் தயாராக இருக்கிறது என கண்ணம்மா சொல்கிறார். அப்போது கணேஷ் நீ சொன்னால் அவர்கள் அனுமதி வழங்கி விடுவார்களா என கேட்க, கண்ணம்மா ஏன் அண்ணா என்ன திட்டிக் கொண்டே இருக்கீங்க என கேட்கிறார். அப்போது போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வருகின்றனர். கண்ணம்மா அதை பார்த்து கணேஷிடம் இப்போது நம்புறீங்களா என கேட்கிறார். பின் பாரதிக்கு நிம்மதியாக இருக்கிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் புதிய சீரியலில் என்ட்ரி!

மறுபக்கம் என்ன நடக்க இருக்கிறது என தெரியாமல் சௌந்தர்யா குடும்பத்துடன் இருக்க பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். விக்ரமிற்கு கூட என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறது. பின் வெண்பா அவருடைய அம்மா உடன் சேர்ந்து என்ன நடக்க இருக்கிறது என டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெளியே வந்த பாரதி ரோடு வழியாக இதயத்தை கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருக்கோம் என் சொல்கிறார். ஆப்ரேசன் முடிந்துவிட பாரதி இதயத்தை கையில் வாங்கி கொண்டு ஆம்புலன்சில் ஏறுகிறார்.

அப்போது கண்ணம்மாவை எற விடாமல் கணேஷ் தடுக்கிறார். ஏற்கனவே வர கூடாது என சொன்னேன் இப்போது முதல் ஆளாக ஏறுகிறார். இதற்கெல்லாம் முன் அனுபவம் வேண்டும் என சொல்ல பாரதி நேரமாகிவிட்டதாக சொல்கிறார். பின் கண்ணம்மாவை வெளியே விட்டு அம்புலன்ஸ் கிளம்புகிறது. சௌந்தர்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பொது மக்கள் எல்லாரும் ஆவலுடன் இருக்க அம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பின் கண்ணம்மாவை விட்டு வந்ததை நினைத்து லட்சுமி அழுகிறார். விக்ரம் கண்ணம்மாவை ஏன் ஏற்றவில்லை என கோபப்படுகிறார். பாரதி விக்ரமிற்கு போன் செய்து சக்திக்கு ஆப்ரேசன் தொடங்க சொல்கிறார். சக்தியை ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!