ஆயிஷா பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன கண்ணம்மா, ஆப்ரேசன் செய்ய தயாராகும் பாரதி – இன்றைய எபிசோட்!

0
ஆயிஷா பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன கண்ணம்மா, ஆப்ரேசன் செய்ய தயாராகும் பாரதி - இன்றைய எபிசோட்!
ஆயிஷா பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன கண்ணம்மா, ஆப்ரேசன் செய்ய தயாராகும் பாரதி - இன்றைய எபிசோட்!
ஆயிஷா பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன கண்ணம்மா, ஆப்ரேசன் செய்ய தயாராகும் பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா விழுப்புரத்திற்கு வர கணேஷ் ஆப்ரேஷனுக்கு முன்னதாக கண்ணம்மாவை அசிங்கப்படுத்துவது போல பேசுகிறார். பின் ஆப்ரேசன் செய்ய பாரதியும் மருத்துவமனைக்கு வருகிறார். ஆப்ரேஷனுக்கான வேலை எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா விழுப்புரத்திற்கு வந்து இறங்க அங்கே இருக்கும் டாக்டர் எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருப்பதாக சொல்கிறார். அப்போது டாக்டர் ஆப்ரேசன் முடிந்ததும் எல்லா ஏற்பாடுகளும் சரியாக செய்துவிட்டீர்களா என கேட்கிறார். உடனே கணேஷ் எல்லாம் சரியாக இருக்கிறது ஆப்ரேசன் முடிந்ததும் முதலில் ஆம்புலன்ஸ் வழியாக சென்று பின் ஹெலிகாப்டர் வழியாக சென்னைக்கு அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். இதற்கெல்லாம் 1 மணி நேரம் தான் ஆகும் என சொல்ல, டாக்டர் சரி என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் கண்ணம்மா ஆயிஷா அம்மா அப்பா பற்றி கேட்க, அவர்களை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. என்ன சொன்னாலும் சமாதானம் ஆகாமல் இருக்கிறார்கள் என சொல்கிறார். பின் கண்ணம்மா நான் சென்று பேசுகிறேன் என சொல்கிறார் . டாக்டர் சென்றதும் கணேஷ் மணி எத்தனை என கேட்கிறார். அப்போது இரவு 12 மணி என சொல்ல, ஆனாலும் பகல் போல எவ்வளவு வெக்கையாக இருக்கிறது. இதில் மழை வரும் என சிலர் அடித்து பேசுகிறார்கள் என சொல்கிறார். நாளைக்கு சாப்பரில் மூன்று பேர் தான் இருக்க முடியும் நீ வந்து விடாதே என சொல்கிறார்.

நீங்க போட்ட திட்டத்தின் படி நல்லபடியாக நடக்க வேண்டும் என நானும் ஆசைப்படுகிறேன் என சொல்கிறார். சாப்பரில் போனால் சக்திக்கு நல்லபடியாக ஆப்ரேசன் நடக்கும் மழை வர கூடாது என நான் கடவுளிடம் வேண்டி கொள்வதாக சொல்கிறார். ஆனால் கணேஷ் கண்ணம்மாவை அவமானப்படுத்தி அனுப்புகிறார். பின் ஆயிஷா அம்மா அப்பாவை சந்தித்த கண்ணம்மா நாளைக்கு ஆப்ரேசன் நடக்க இருக்கிறது என சொல்ல அவர்கள் ஒரு புள்ளை அவளை பறிகொடுத்துவிட்டு நாங்க கவலைப்படுகிறோம் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா ஆயிஷா எங்கையும் போகவில்லை

மீண்டும் சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இணையும் நடிகை சுவேதா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இந்த உலகில் அவள் உயிரோடு வாழ போகிறாள் என சொல்கிறார். இத்தனை வருசமாக ஆயிஷாவாக வாழ்ந்தவள் இப்போது சக்தியாக வாழ போகிறாள் நீங்க எடுத்த முடிவு நல்ல முடிவு என சொல்கிறார். பின் விழுப்புரத்தில் இருக்கும் டாக்டர் பாரதிக்கு போன் செய்து ஒரு உதவி என கேட்கிறார். பாரதி என்ன என கேட்க நான் நிறைய ஆப்ரேசன் செய்திருக்கேன் ஆனால் இதை செய்ய சில பதட்டம் இருக்கிறது. அதனால் நீங்க ஆப்ரேசன் செய்ய இங்கே வந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். பின் பாரதி கணேஷிடம் சொல்லிவிட்டு வர ஏற்பாடு செய்கிறார்.

பின் மக்கள் அனைவரும் இந்த செய்தியை கேட்டு சந்தோசப்படுகின்றனர். எல்லாரும் ஆப்ரேசன் நல்லபடியாக முடிய வேண்டும் என பேசிக் கொள்கின்றனர். மறுநாள் கண்ணம்மா மழை வர கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறார். பின் சௌந்தர்யாவும் என்ன ஆச்சு என தெரியாமல் பதட்டமாக இருக்கிறார். பின் கணேஷ் பாரதி வருவாரா என காத்திருக்க கண்ணம்மா என்ன என கேட்கிறார். ஆனால் கணேஷ் சொல்லாமல் இருக்க அப்போது பாரதி வருகிறார். பின் கண்ணம்மா சென்னையில் இருக்காமல் ஏன் இங்கே இருக்கீங்க என கேட்கிறார். ஆனால் கணேஷ் மற்றும் பாரதி கண்ணம்மாவிடம் கோவமாக பேசுகிறார். பின் பாரதி சக்தியை நினைத்து பதட்டமாக ஆப்ரேசன் செய்ய தயாராகுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!