சக்தி உயிரை காப்பாற்ற போராடும் பாரதி, வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷர்மிளா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சக்தி உயிரை காப்பாற்ற போராடும் பாரதி, வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷர்மிளா - இன்றைய
சக்தி உயிரை காப்பாற்ற போராடும் பாரதி, வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷர்மிளா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சக்தி உயிரை காப்பாற்ற போராடும் பாரதி, வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் ஷர்மிளா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சக்திக்கு மிகவும் உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும் ஓரு வாரத்தில் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என பாரதி சொல்ல சக்தியின் பெற்றோர் அதை நினைத்து வருத்தப்படுகின்றனர். சௌந்தர்யா லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்துவிடுமா என சந்தேகப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், சக்தி மீண்டும் மயங்கி விழுந்ததால் அவளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கின்றனர். அப்போது பாரதி சக்தியை பரிசோதனை செய்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சக்திக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் குழந்தையை காப்பாற்ற முடியாது என சொல்கிறார். அதை கேட்டு சக்தியின் பெற்றோர் வருத்தப்படுகிறனர். மறுபக்கம் வெண்பா சுடிதாரில் இருக்க ஷர்மிளா அதை பார்த்துவிட்டு இந்த ட்ரெஸ் நன்றாக இல்லை என சொல்கிறார். பின் வெண்பாவை ட்ரெஸ் மாற்றிவர சொல்ல, என்ன ட்ரெஸ் போட என வெண்பா கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது ஷர்மிளா ஒரு பட்டுப்புடவையை கொடுக்கிறார். இதை போட்டுக் கொண்டு வா என சொல்ல, வெண்பா விவரம் தெரியாமல் போட்டுக் கொண்டு வருகிறார். பின் ஷர்மிளா போட்டோகிராபரை வர சொல்லி போட்டோ எடுக்கிறார். வெண்பா என்ன நடக்கிறது என கேட்க, ஷர்மிளா உனக்கு மாப்பிள்ளை பார்க்க போட்டோ வேண்டும் என சொல்கிறார். அதனால் அழகாக போட்டோ எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க போகிறேன் என சொல்ல வெண்பா கடுப்பாகிறார்.

பின் பாரதி விக்ரமிடம் இது பற்றி சொல்கிறார். நம்மளுடைய மெடிக்கல் டீம்மிடம் சொல்லி சீக்கரம் ஏற்பாடு செய்ய வேண்டும் என விக்ரம் சொல்கிறார். பாரதி அதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். அப்போது பாரதிக்கு ஒரு போன் வருகிறது. அதில் விழுப்புரத்தில் இருந்து டாக்டர் பேசுவதாகவும், இதயம் கேட்டிருந்தீங்க, இங்கே விபத்தில் குழந்தை ஒன்று மூளை சாவு அடைந்து அட்மிட் ஆகி இருக்காங்க அவங்களின் இதயம் சரியாக பொருந்தும் என சொல்கிறார். ஆனால் குழந்தையின் அப்பா அம்மாவிடம் இது பற்றி பேசவில்லை என சொல்ல பின் பாரதி நானே நேரில் வந்து பேசுகிறேன் என சொல்கிறார்.

பாரதி விக்ரமிடம் விவரத்தை சொல்ல நீ தனியாக போக வேண்டாம் அட்மின் கண்ணம்மாவை அழைத்து செல் என சொல்கிறார். அதை கேட்டு பாரதிக்கு கோவம் வருகிறது. அவங்களுக்கு என்ன தெரியும் என பாரதி சொல்ல அதெல்லாம் எல்லாம் தெரியும் என விக்ரம் சொல்கிறார். பாரதி வேற வழி இல்லாமல் இருக்க கண்ணம்மா உடன் கிளம்புகிறார். மறுபக்கம் சௌந்தர்யா வேணுவிடம் பயங்கர டென்ஷனாக இருக்கிறார். அப்போது வேணு என்ன ஆனது என கேட்க, சௌந்தர்யா லட்சுமி பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்துவிட்டது என சொல்கிறார்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

வேணு அதை கேட்டு அதிர்ச்சி அடைய என்ன சொல்ற சௌந்தர்யா என கேட்கிறார். அப்போது சௌந்தர்யா ஆமாம் அப்படி தான் நான் நினைக்கிறேன் அவள் பேசுவது எல்லாம் அப்படி தான் இருக்கிறது என சௌந்தர்யா சொல்ல, வேணு அதெல்லாம் இருக்காது என சொல்கிறார். ஆனால் சௌந்தர்யா அவள் முன்னாடி மாதிரி இல்லை இப்போது நம்மளிடம் மிகவும் உரிமையாக பழகுகிறாள் என சொல்ல, வேணு அப்படி இருந்தால் அவள் நம்மளிடம் கேட்டு இருப்பாளே என சொல்கிறார். ஆனால் சௌந்தர்யா நான் லட்சுமி க்கு உண்மை தெரியும் என்பதை நிரூபிக்கிறேன் என சொல்கிறார்.

பின் பாரதி கண்ணம்மா விழுப்புரத்தில் அந்த மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார்கள். பின் அந்த குழந்தையின் அப்பா அம்மாவை பார்க்க என்னுடைய குழந்தை மீண்டும் வந்துவிடுவாள் தான அவள் என்னை அப்பா என அழைப்பாள் தான என கேட்கிறார். பாரதிக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்க என் மகளுக்கு மூளை சாவு அடைந்து இருப்பதாக சொல்லி இருக்காங்களே என கேட்கிறார். ஆனால் பாரதி இனிமேல் உங்களது மகளை காப்பாற்ற முடியாது என சொல்ல ஆயிஷாவின் பெற்றோர் கதறி அழுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!