சக்தி பற்றி தெரிந்து வருத்தப்படும் கண்ணம்மா, கண்ணம்மா மீது கோவத்தை காட்டும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சக்தி பற்றி தெரிந்து வருத்தப்படும் கண்ணம்மா, கண்ணம்மா மீது கோவத்தை காட்டும் பாரதி - இன்றைய
சக்தி பற்றி தெரிந்து வருத்தப்படும் கண்ணம்மா, கண்ணம்மா மீது கோவத்தை காட்டும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சக்தி பற்றி தெரிந்து வருத்தப்படும் கண்ணம்மா, கண்ணம்மா மீது கோவத்தை காட்டும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவிற்கு சக்தி பற்றி உண்மையை நர்ஸ் சொல்கிறார். அதனால் கண்ணம்மா சக்தியிடம் அன்பாக பேசுகிறார். மறுபக்கம் கண்ணம்மாவை பாரதி திட்ட அதை நினைத்து கண்ணம்மா கோபப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா நர்ஸிடம் சக்தி எங்கே என பேச அப்போது நர்ஸ் அவள் நன்றாக பேசுகிறாளே என சொல்கிறார். ஆனால் பாவம் அவளுடைய உடம்பிற்கு தான் முடியவில்லை என சொல்கிறார். பின் கண்ணம்மா என்ன ஆனது என கேட்க அப்போது சக்தி ஸ்கூலில் அடிக்கடி மயங்கி விழுவதால் இங்கே வந்தாள் அவளுக்கு இருதயத்தில் பிரச்சனை இருக்கிறதாம் இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என சொன்னதாக சொல்ல கண்ணம்மா அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் சக்திக்கு அவளுடைய அம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா வருகிறார். சக்தி கண்ணம்மா மீது கோவமாக இருப்பதாக சொல்கிறார். ஏன் என கேட்க இந்த மருத்துவமனையில் எல்லாரும் என்னிடம் பேசிவிட்டார்கள் ஆனால் நீங்க என்னிடம் பேசவில்லை என சொல்கிறார். பின் இனிமேல் நான் உன்னிடம் பேசுவேன் என கண்ணம்மா சொல்ல, பின் உங்க பெயர் என சக்தி கேட்கிறாள். அப்போது கண்ணம்மா என சொல்ல, சக்தி கண்ணம்மா பெயரில் இருக்கும் படங்களை பற்றியும், பாடல்களை பற்றியும் சொல்கிறார்.

மறுபக்கம் மருத்துவமனை உணவை பற்றி யூடுபர் ஒருவர் வீடியோ சூட் செய்கிறார். அதை பார்த்து பாரதி கோவப்பட கண்ணம்மா அங்கே இருக்கும் பெண்ணிடம் என்ன ஆனது என கேட்கிறார். அதற்கு அவர் சாப்பாடு பற்றி வீடியோ எடுக்க விக்ரம் சார் அனுமதி கொடுத்துள்ளதாக சொல்கிறார். அதனால் கண்ணம்மா எதுவும் சொல்லாமல் விட மறுபக்கம் பாரதி இதற்கு கண்ணம்மா தான் காரணம் என நினைக்கிறார். பின் கண்ணம்மாவிடம் கோவமாக பேசிவிட்டு செல்ல கண்ணம்மா என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார்.

ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

பின் சௌந்தர்யா வேணு விக்ரம் பேசிக் கொண்டிருக்க கண்ணம்மா அருமையாக வேலை செய்கிறாள் என விக்ரம் சொல்கிறார். பாரதி அந்த பெண்ணின் கணவருக்கு தண்டனை பெற்று கொடுத்து அதன் பின் அவருடைய பெற்றோர்களிடம் பேசி சேர்த்து வைத்துள்ளதாக சொல்கிறார். பின் பாரதி எல்லாருக்கும் நல்லவர்களாக இருக்கிறான் ஆனால் கண்ணம்மாவிடம் மட்டும் ஏன் கோவமாக இருக்கிறான் என தெரியவில்லை என விக்ரம் கேட்கிறார். பின் பாரதி கண்ணம்மாவை வேலைக்கு வைக்க வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார்.

வெண்பா பாரதியிடம் பேசியதை நினைத்து வருத்தமாக அழுது கொண்டிருக்கிறார். அப்போது சாந்தி வர வெண்பாவிடம் நீங்க எதுவும் சாப்பிடாமல் ஏன் இருக்கீங்க காலையில் எங்கே போனீங்க என கேட்கிறார். அப்போது வெண்பா நான் பாரதியை பார்க்க போனதாக சொல்ல அவர் மீது என்ன கோவம் என சொல்கிறார். பின் பாரதி முன்னால் அவனை வெறுப்பதாக சொல்லிவிட்டு வந்ததாக சொல்கிறார். அதை கேட்டு சாந்தி அதிர்ச்சி அடைய பின் ஷர்மிளா பின்னால் நின்று வெண்பா சொன்னதை கேட்டு கை தட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!