ரோஹித்தை மாட்டிவிட பின் தொடரும் வெண்பா, சாந்தியிடம் பேசியதை சொன்ன தில்லி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ரோஹித்தை மாட்டிவிட பின் தொடரும் வெண்பா, சாந்தியிடம் பேசியதை சொன்ன தில்லி - இன்றைய
ரோஹித்தை மாட்டிவிட பின் தொடரும் வெண்பா, சாந்தியிடம் பேசியதை சொன்ன தில்லி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ரோஹித்தை மாட்டிவிட பின் தொடரும் வெண்பா, சாந்தியிடம் பேசியதை சொன்ன தில்லி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித் சர்மிளாவிடம் பணம் வாங்கியதை பற்றி சாந்தி வெண்பாவிடம், சொல்ல ரோஹித்தை பின் தொடர்ந்து செல்கின்றனர். ஆனால் அவன் போகும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.பின் தில்லி போன் செய்த போது வேற பெண் பேசியதாக சொல்ல ரோஹித் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் சாந்தி சர்மிளாவிடம் ரோஹித் பணம் வாங்கியதை பற்றி வெண்பாவிடம் சொல்கிறார். எப்படியாவது அவன் உண்மையாகவே பணக்காரனா இல்லை டூபாக்கூரா என கண்டுபிடிக்க வேண்டும் என கண்டுபிடிக்க வேண்டும் என வெண்பா பேசிக் கொண்டிருக்க அப்போது ரோஹித்திற்கு சர்மிளா பணத்தை அனுப்பி விடுகிறார். ரோஹித் அதை பார்த்து சந்தோசப்பட்டு தில்லிக்கு பணம் கொடுக்க கிளம்புகிறார். வெண்பாவை சந்தித்து பேச வெண்பா அக்கறையுடன் பேசுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதை பார்த்து ரோஹித் ஷாக் ஆகிறார். பின் ரோஹித் காரில் கிளம்ப வெண்பாவும் சாந்தியும் அவரை பின் தொடர்ந்து வருகிறார். இன்னைக்கு எப்படியாவது அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என வெண்பா பின் தொடர்ந்து வருகிறார். ரோஹித் எதுவும் தெரியாமல் சென்று ஒரு கடையில் நிறுத்த வெண்பாவும் சாந்தியும் பின்னால் நின்று மறைந்து கொள்கின்றனர். அப்போது ரோஹித் வண்டி நன்றாக இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் வண்டியில் ஏறி கிளம்புகிறார்.

பின் வெண்பா வண்டி ஓட்டி கொண்டிருக்க போன் வருகிறது. சாந்திக்கு போனை எடுக்க தெரியாமல் இருக்க அப்போது வெண்பா போனை எடுத்து பேசுகிறார். அந்த நேரம் பார்த்து ரோஹித் சென்றுவிட வெண்பா அவனை பின் தொடர முடியாமல் போகிறார். உடனே வெண்பா சாந்தி தான் காரணம் என சொல்கிறார். மறுபக்கம் ஜானகி அம்மாவிற்கு நர்ஸ் டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்துவிடுகிறார். அப்போது அவருடைய கணவர் டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் எங்கே என்னிடம் ஏன் காட்டாமல் இருக்கீங்க என கேட்க ஜானகி அம்மா அந்த நர்ஸை கேள்வி கேட்காமல் இருங்க அவங்க அப்பறம் வேலையை விட்டு சென்றுவிடுவார் என சொல்கிறார்.

பின் சௌந்தர்யா வேணு அகில் விக்ரம் என அனைவரும் ஜானகி அம்மாவை பார்க்க வருகின்றனர். அப்போது உடம்பெல்லாம் எப்படி இருக்கிறது என விசாரித்துவிட்டு இது யாரு என அகிலை பார்த்து ஜானகி அம்மா கேள்வி கேட்கிறார். இது என்னுடைய இரண்டாவது பையன் அகில் என சொல்ல எனக்கு ஒரு பையன் இருக்கிறான் ஆதவன் என அகில் சொல்கிறார். பின் நல்ல தமிழ் பெயர் என சொல்ல அப்போது லக்ஷ்மியும் ஹேமாவும் வருகிறார்கள். இது யாரு உன் பேத்தியா என ஜானகி அம்மா கேட்க ஆமாம் என ஹேமாவை காட்டி பாரதி பொண்ணு என சொல்கிறார்.

கொரோனாவை தொடர்ந்து வீரியமாகும் குரங்கு அம்மை பாதிப்பு – சுகாதார அமைப்பு தகவல்!

பின் லக்ஷ்மியை காட்டி இது கண்ணம்மாவின் பொண்ணு என சொல்ல லட்சுமி அதை கேட்டு வருத்தப்படுகிறார். பின் விக்ரமிடம் ஏன் திருமணம் செய்யவில்லை என கேட்டுக் கொள்கிறார். மறுபக்கம் ரோஹித் தில்லியை பார்க்க செல்கிறார். தில்லியை போன் செய்து வரவழைத்து பணத்தை கொடுக்கிறார். தில்லி இவ்வளவு பணமா என ஆச்சர்யத்தில் இருக்கிறார். ரோஹித் ஆளே மாறிவிட்டதாக தில்லி சொல்கிறார். பின் ரோஹித்திடம் காலையில் போன் செய்தேன் அப்போது வேறு பெண் பேசியதாக சொல்ல ரோஹித் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!