ரோஹித் மீது சந்தேகப்பட்ட சாந்தி, மாட்டிக் கொள்வாரா ரோஹித்? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ரோஹித் மீது சந்தேகப்பட்ட சாந்தி, மாட்டிக் கொள்வாரா ரோஹித்? இன்றைய
ரோஹித் மீது சந்தேகப்பட்ட சாந்தி, மாட்டிக் கொள்வாரா ரோஹித்? இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ரோஹித் மீது சந்தேகப்பட்ட சாந்தி, மாட்டிக் கொள்வாரா ரோஹித்? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா சமையல் அம்மாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்க சௌந்தர்யா அவளிடம் சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் ரோஹித் நண்பர் தில்லி போன் செய்ய சாந்தி போனை எடுத்து பேசி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியிடம் அடம் பிடித்து சமையல் அம்மாவை திருமணம் செய்து வைப்பேன் என சொல்கிறாள். நான் சாப்பிடாமல் இருந்து அழுதால் டாடி ஒப்புக் கொள்வார் என சொல்ல அதற்கு சௌந்தர்யா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். இதெல்லாம் பெரியவர்கள் விஷயம் நீ எதாவது சொன்னால் பாரதி கோவப்படுவான் என சொல்ல ஹேமா அப்போ சரி என சொல்கிறார். பின் அகில் லக்ஷ்மிக்கு உண்மை எல்லாம் சொன்னது போல கண்ணம்மா தான் உன்னுடைய அம்மா என ஹேமாவிடம் சொல்லிவிடலாம் என சொல்கிறார்.

சௌந்தர்யா அதை கேட்டு அதெல்லாம் சரியாக வராது பாரதிக்கு தெரிந்தால் நாம தான் சொன்னோம் என கேட்டு கோவப்படுவான் என சொல்கிறார். பின் விவாகரத்து வாங்க போகிறேன் என சொன்னால் என்ன செய்வது என கேட்கிறார். அதுவும் சரி தான் என அஞ்சலி சொல்கிறார். பின் ரோஹித் வெண்பாவை என்ன செய்தும் கரெக்ட் செய்ய முடியவில்லை என நினைத்து கடுப்பில் இருக்கிறார். அப்போது ரோஹித் நண்பன் தில்லி போன் செய்கிறான்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தில்லி ரோஹித்திடம் நீ கடன் வாங்கியவன் உன் வீட்டிற்கு வந்து பயங்கரமாக சண்டை போட்டான் பின் உன் அம்மாவை உள்ளே வைத்து கதவை மூடிவிட்டான் பணம் கொடுக்காமல் வெளியே விடமாட்டேன் என சொல்ல எல்லாரும் வந்துட்டார்கள் ஆனாலும் அவன் யார் சொல்லியும் கேட்கவில்லை. பின் மூன்று நாட்கள் டைம் கொடுத்து இருக்கிறான். பணத்தை கொடுக்காமல் விட்டால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என சொல்கிறார். அதை கேட்டு ரோஹித் அதிர்ச்சி அடைய அம்மாவிற்கு எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்கிறார்.

பின் கண்டிப்பாக ஒரு 50000 ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை செய்வான் நீ பெரிய இடத்து பெண்ணை உசார் செய்ய இருக்கிறாய் அவருடைய அம்மாவிடம் எப்படியாவது பணம் வாங்கு என சொல்கிறார். ரோஹித் இங்கே அந்த பெண்ணை உசார் செய்ய பல கஷ்டங்கள் பட வேண்டியதாக இருக்கிறது என சொல்கிறார். பின் மருத்துவமனையில் ஜானகி மற்றும் சுந்தராமன் சண்டை போட்டுக் கொள்கின்றனர். எல்லாரும் சத்தத்தை கேட்டு வெளியே கூடிவிடுகின்றனர்.

அப்போது நர்ஸ் வந்து பார்த்து இவர்கள் ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள் என தெரியாமல் கண்ணம்மாவை அழைத்து வருகின்றனர். கண்ணம்மா வந்து அவர்களிடம் என்ன ஆச்சு என கேட்க அப்போது ஜானகி அம்மா என்னை குளிக்க வேண்டாம் என டாக்டர் சொன்னார் அதனால் நர்ஸை அழைத்து என்னை துடைத்துவிட சொன்னேன் ஆனால் இவர் நான் எதற்கு இருக்கிறேன் நான் துடைத்துவிடுகிறேன் என சொல்கிறார். இந்த வயதான காலத்தில் என்னை துடைப்பது பெரிய கஷ்டம் தான என சொல்கிறார்.

தமிழக மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம் ‘இவர்களுக்கு’ பொருந்தாது – அரசு அறிவிப்பு!

அம்மா சொல்வது சரி தான என கண்ணம்மா சொல்ல சுந்தராமன் நான் தான அவளுக்கு வீட்டில் இருக்கும் போது எல்லாம் செய்துவிட்டேன் இப்போது என்ன என கேட்க கண்ணம்மா இருவரின் அன்பை பார்த்து சிரிக்கிறார். பின் பாரதி வர கண்ணம்மாவை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார். ஜானகி அம்மாவை பரிசோதனை செய்துவிட்டு இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டும் என பாரதி சொல்கிறார். நீங்க எதுவும் கவலைப்படாதீங்க என பாரதி சொல்கிறார்.

மறுபக்கம் சாந்தி ரோஹித் ரூமை கூட்ட வேண்டும் என கதவை தட்ட ஆனால் ரோஹித் திறக்கவில்லை. அதனால் சாந்தி கதவை திறந்துகொண்டு ரூமிற்குள் செல்கிறார். அப்போது தில்லி போன் செய்ய சாந்தி ரோஹித் குளிப்பதாக சொல்லுவோம் என சொல்லி போனை எடுக்கிறார். அப்போது தில்லி யார் என கேட்காமல் பேச தொடங்குகிறார். பணம் ஏற்பாடு செய்ய சொன்னேன் என்ன ஆச்சு அந்த பெண் லாக்கரில் கை வைக்க சொன்னேனே என சொல்ல சாந்தி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் சாந்தி குரலை கேட்டு தில்லி பேச்சை மாற்றி போனை வைத்துவிடுகிறார். சாந்திக்கு அதனால் ரோஹித் மீது சந்தேகம் வருகிறது உண்மையாகவே இவன் பணக்காரன் தான என சந்தேகத்துடன் பார்க்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!