பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிய ஹேமா, மனம் இறங்கிய பாரதி – இன்றைய எபிசோட்!

0
பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிய ஹேமா, மனம் இறங்கிய பாரதி - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிய ஹேமா, மனம் இறங்கிய பாரதி - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என கெஞ்சிய ஹேமா, மனம் இறங்கிய பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ரோஹித் வெண்பாவின் மனதில் இடம் பிடிக்க பிரியாணி சமைத்து கொடுக்கிறார். பின் ஹேமாவை பார்க்க லட்சுமி கண்ணம்மாவும் வருகிறார்கள். அப்போது ஹேமா பாரதியிடம் விவாகரத்து வேண்டாம் என அழுகிறாள் அதை கேட்டு பாரதி மனம் மாறுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ரோஹித் வெண்பாவை எப்படி பேசினாலும் கரெக்ட் செய்ய முடியவில்லை என நினைக்கிறார். பின் எப்படியாவது வெண்பாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என நினைத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறார். அப்போது பாரதி சொன்னது ரோஹித்திற்கு நினைவு வருகிறது. வெண்பாவிற்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என பாரதி சொல்கிறார். அதனால் ரோஹித் உடனே சென்று வெண்பாவிற்கு பிடித்த ஆம்பூர் பிரியாணி சமைக்கிறார்.

சாந்தியிடம் இதை நான் தான் செய்தேன் என சொல்ல வேண்டும் என சொல்கிறார். பின் வெண்பா சாப்பாடு ரெடியா என கேட்டு சாப்பிட வருகிறார். சாந்தி பிரியாணி செய்து வைத்திருப்பதாக சொல்ல அதை கேட்டு வெண்பா சந்தோசப்பட்டு சாப்பிடுகிறார். அருமையாக இருப்பதாக சொல்லி வெண்பா இதை சமைத்த கைகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என கேட்கிறார். அப்போது ரோஹித் வந்து தன்னுடைய கையை நீட்டுகிறார். நான் தான் உனக்கு பிடிக்கும் என சமைத்தேன் என சொல்ல வெண்பா பிடிக்காதது போல சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ரோஹித் வெண்பா மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். பின் சௌந்தர்யா வீட்டிற்கு லக்ஷ்மியும் கண்ணம்மாவும் வருகிறார்கள். அப்போது கண்ணம்மா ஹேமாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்ல இது உன்னுடைய வீடு நீ எப்போ வேண்டும் என்றாலும் வரலாம் என சொல்கிறார். பின் ஹேமா எங்கே என கண்ணம்மா கேட்க பாரதி வெளியே கூட்டி சென்று இருக்கிறான் வர நேரம் தான் என சொல்கிறார். அப்போது பாரதி கார் சத்தம் கேட்கிறது. அஞ்சலி லட்சுமியிடம் உன் அப்பா வந்துவிட்டதாக சொல்கிறார்.

பின் பாரதி வர இவ எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என கேட்கிறார். அப்போது ஹேமா சமையல் அம்மா என ஓடி சென்று கட்டி அணைத்து கொள்கிறார். பின் சௌந்தர்யா ஹேமாவிற்கு உடம்பு சரி இல்லை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறார். பாரதி அதை கேட்டு அவளிடம் விவாகரத்து பற்றி சொல்லிவிட்டு இப்போது அவள் நன்றாக இருக்கிறாளா என பார்க்க வந்திருப்பதாக நினைக்கிறார். கண்ணம்மா ஹேமாவிடம் இனிமேல் சாப்பிடாமல் இருக்க கூடாது என சொல்ல லட்சுமி இனிமேல் சரியாக சாப்பிட வேண்டும் என சொல்கிறார்.

மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஹேமா சமையல் அம்மா இனிமேல் நீங்க சாப்பாடு கொண்டு வாங்க என சொல்ல அவங்க வேலைக்கு போறாங்க என சௌந்தர்யா சொல்கிறார். கண்ணம்மா இனிமேல் நன்றாக சாப்பிட வேண்டும் என சொல்கிறார். பின் ஹேமா சமையல் அம்மா டாடி விவாகரத்து கொடுக்க இருக்கிறார். அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என சொல்லுங்கள் என சொல்கிறார். ஹேமா பாரதியிடம் ப்ளீஸ் டாடி விவாகரத்து வேண்டாம் என தேம்பி தேம்பி அழுகிறார். ஹேமாவை அமைதியாக இருக்க சொல்ல ப்ளீஸ் டாடி ப்ளீஸ் டாடி என ஹேமா பயங்கரமாக அழுகிறாள். லட்சுமிக்கு அதை பார்த்து வருத்தமாக இருக்கிறது. ஹேமாவை அழாமல் இருக்க சொன்ன பாரதி சரி நான் விவாகரத்து செய்ய மாட்டேன் என சொல்கிறார். சத்தியமாக என ஹேமா கேட்க பாரதியால் என்ன சொல்வது என தெரியவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here