மேடையில் உண்மையை சொல்லும் ஹேமா, வெண்பாவிற்கு வந்த புதிய ஆபத்து – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
மேடையில் உண்மையை சொல்லும் ஹேமா, வெண்பாவிற்கு வந்த புதிய ஆபத்து - இன்றைய
மேடையில் உண்மையை சொல்லும் ஹேமா, வெண்பாவிற்கு வந்த புதிய ஆபத்து - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
மேடையில் உண்மையை சொல்லும் ஹேமா, வெண்பாவிற்கு வந்த புதிய ஆபத்து – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வாங்கியதை அடுத்து மேடையில் பாரதியை பற்றி பெருமையாக பேசுகிறார். பின் லட்சுமி பற்றி பேச தொடங்கிய ஹேமா எனக்கு அம்மா இல்லாதது மிகவும் வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். பின் பாரதி மைக்கை வாங்கி பேச்சை நிறுத்துகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், ஹேமா முதல் பரிசு வாங்கியதை அடுத்து பரிசு வாங்க மேடைக்கு வந்திருக்கிறார். அப்போது பாரதி மற்றும் கண்ணம்மாவை மேடைக்கு வர சொன்ன ஹேமா நான் நிறைய பேச வேண்டும் என சொல்கிறார். டீச்சர் இது உன்னுடைய நாள் பேசலாம் என சொல்கிறார். அப்போது ஹேமா எனக்கு அவ்வளவாக மேடையில் பேச வராது. என்னுடைய தோழி லட்சுமி தான் நான் இந்த அளவிற்கு பேச காரணம் அவளும் நன்றாக பேசுவாள் ஆனால் அப்பா பற்றி பேச சொன்னதால் தான் அவள் கலந்து கொள்ளவில்லை.

TN Job “FB  Group” Join Now

அவள் மிகவும் பாவம் அவளையும் மேடைக்கு வர சொல்ல வேண்டும் என சொல்கிறார். லட்சுமி மேடைக்கு வர, ஹேமா லக்ஷ்மிக்கு அப்பா இல்லை எனக்கு அம்மா இல்லை. என் அப்பா என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் எனக்கு அம்மா இல்லாமல் கவலையாக இருக்கிறது. லக்ஷ்மி அப்பாவும் அவளை பார்க்க வந்ததே இல்லை என சொல்ல, உடனே ஹேமா உண்மை எல்லாத்தையும் மேடையில் பேசி விடுவாள் என சௌந்தர்யாவும் வேணுவும் நினைக்கிறார்.

அப்பாவை பார்த்துக் கொள்ள யாருமே இல்லை அதனால் எனக்கு ஒரு அம்மா இருந்தால் நன்றாக இருக்கும், சமையல் அம்மா என்னை அவருடைய மகள் மாதிரி பார்த்துக் கொள்வார் என சொல்ல உடனே சுதாரித்துக் கொண்ட பாரதி மைக்கை வாங்கி ஹேமா நிறைய நேரம் பேசி விட்டாள் இன்னும் நிறைய குழந்தைகள் பரிசு வாங்க காத்திருக்கிறார்கள் என சொல்கிறார். அப்போது ஹேமாவிற்கு பரிசு கொடுக்கின்றனர். லக்ஷ்மியும் இணைந்து பரிசு வாங்குகின்றனர்.

பெண் அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – அலுவலக நேரம் உட்பட பல்வேறு அறிவிப்புகள்!

பின் பாரதி கோவமாக கிளம்ப ஹேமா பின்னால் வந்து ஏன் என்னை பேச விடாமல் செய்தீர்கள் என கேட்கிறார். அப்போது பாரதி ஹேமா மீது கோவப்பட சௌந்தர்யா குழந்தை மீது ஏன் கோவப்படுகிறாய் என கேட்கிறார். அப்போது சௌந்தர்யாவிடம் நீங்கி சொல்லி கொடுத்து தான் ஹேமா இப்படி பேசுவதாக சொல்ல ஹேமா அப்படி எல்லாம் இல்லை உங்களை பார்த்துக் கொள்ள தான் யாருமே இல்லையே என சொல்கிறார். பின் ஹேமாவிடம் ஹேமா என்னை தவிர யாரும் என் வாழ்க்கையில் வர முடியாது என சொல்லி கிளம்புகிறார்.

லட்சுமி பாரதி பேசுவதை கேட்டுவிட்டு அப்பா என்ன இப்படி பேசுகிறார். ரொம்ப மோசம் அவர் என சொல்கிறார். மறுபக்கம் வெண்பா ஷர்மிளா பார்த்த மாப்பிள்ளையை பார்க்க பார்க் வருகிறார். அங்கே சில அடியாட்களை செட் செய்துவிட்டு மாப்பிள்ளையை அடிக்க வேண்டும் என சொல்கிறார். பின் அடியாட்களை மறைந்திருக்க சொல்லிவிட்டு வெண்பா மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறார். அப்போது அந்த ரவுடிக்கு வெண்பா மீது ஒரு ஆசை வருகிறது. அவர் வெண்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஷர்மிளா போன் செய்து மாப்பிள்ளை இப்போது வரவில்லை என சொல்கிறார்.

அதனால் வெண்பா அந்த ரவுடிகளை அழைத்து இன்னொரு நாள் வர சொல்கிறேன் அப்போது வாருங்கள் என சொல்கிறார். ஆனால் அந்த ரவுடி வெண்பா கையை பிடித்து இழுக்க என்ன காசு வேண்டுமா என கேட்டு வெண்பா காசை கொடுக்கிறார். பின் வெண்பாவின் கையை மீண்டும் பிடித்து முத்தம் கொடுக்க வருகிறார். வெண்பா வேண்டாம் யாரவது வாங்க என சத்தம் போட அப்போது ஒரு ஆள் ஒருவர் வந்து அந்த ஆட்களை அடிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!