வெண்பா திருமண நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்கும் ஷர்மிளா, லட்சுமியிடம் வருத்தப்படும் ஹேமா – இன்றைய எபிசோட்!

0
வெண்பா திருமண நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்கும் ஷர்மிளா, லட்சுமியிடம் வருத்தப்படும் ஹேமா - இன்றைய எபிசோட்!
வெண்பா திருமண நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்கும் ஷர்மிளா, லட்சுமியிடம் வருத்தப்படும் ஹேமா - இன்றைய எபிசோட்!
வெண்பா திருமண நிகழ்ச்சிக்கு கண்ணம்மாவை அழைக்கும் ஷர்மிளா, லட்சுமியிடம் வருத்தப்படும் ஹேமா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி இரவு நேரமாகி வீட்டிற்கு வர சௌந்தர்யா வெண்பா திருமண நிகழ்ச்சி பற்றி சொல்லி சந்தோசப்படுகிறார். பின் ஷர்மிளா கண்ணம்மாவிற்கு போன் செய்து வெண்பா நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி வீட்டிற்கு வர சௌந்தர்யா இங்கே வா பாரதி என கேட்கிறார். அப்போது எப்படி இருக்கிறாய் பாரதி என கேட்க எல்லாத்தையும் செய்துவிட்டு எப்படி இப்படி கேட்குறீங்க என பாரதி கேட்கிறார். அப்போது சௌந்தர்யா எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என மீண்டும் சொன்னதையே சொல்லாதே என சொல்கிறார். பின் பாரதி ஹேமா எங்கே என கேட்க அவள் தூங்கிவிட்டாள் என சொல்கிறார். பின் சௌந்தர்யா முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல நாளைக்கு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது என சௌந்தர்யா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

வேலை இருக்கிறது என வராமல் இருக்காதீங்க என சொல்ல அப்போது சௌந்தர்யா முக்கியமான ஆள் நிகழ்ச்சி என சொல்கிறார். அதை கேட்டு பாரதி அப்படி யாருடைய கல்யாணம் என கேட்க வெண்பாவின் திருமணம் என சொல்கிறார். வெண்பாவை தான் உங்களுக்கு பிடிக்காதே என பாரதி கேட்க, உன்னை திருமணம் செய்து கொண்டால் எனக்கு பிடிக்காது ஆனால் வேறு பையனுடன் திருமணம் செய்து கொண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும் என சொல்கிறார். பின் வெண்பா அம்மா ஷர்மிளா எனக்கு அக்கா மாதிரி நாங்க அவ்வளவு நெருக்கம் என சொல்ல அவருக்காகவே நான் போக வேண்டும் என சொல்கிறார்.

ஷர்மிளா வெண்பாவிற்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அவன் பெயர் கூட ரோஹித் நல்ல இருக்கு பெயர் நீ கண்டிப்பாக வெண்பா நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என சொல்கிறார். பாரதி எதுவும்பேசாமல் கிளம்புகிறார். மறுபக்கம் சாரதி நிறைய தர்பூசணி பழங்களை வாங்கி வருகிறார். எதற்கு இவ்வளவு என கேட்க வெண்பாவிற்கு தர்பூசணி புடிக்கும் அதனால் தான் வாங்கி கொண்டு வந்தேன் என சொல்கிறார். அது எப்படி உங்களுக்கு தெரியும் என ஷர்மிளா கேட்க, வெண்பாவிற்கு என்னவெல்லாம் பிடிக்கும் என எனக்கு தெரியும் என சொல்கிறார்.

பாட்டு பாடி, கியூட்டாக நடனமாடிய ஆலியா மானசா மகள் ஐலா – வைரலாகும் வீடியோ!

இது மட்டுமில்ல இன்னும் வெண்பாவிற்கு பிடித்தது எல்லாம் வாங்கி கொடுக்க போறேன் என சொல்கிறார். இப்போ எங்கே போனீங்க என ஷர்மிளா கேட்க விக்ரம் பாபு மருத்துவமனைக்கு சென்று பாரதியை நாம நிகழ்ச்சிக்கு கூப்பிட போனேன் என சொல்கிறார். பாரதி மட்டுமில்லை கண்ணம்மாவையும் கூப்பிட போனேன் அவர் மிகவும் நல்லவர் பழகிய 2 தடவைகளில் என்னை தம்பி தம்பி என பாசத்தை காட்டுகிறார் என சொல்கிறார். பின் ஷர்மிளா கண்ணம்மா இதற்கு முன் நடந்து கொண்டதை பற்றி நினைத்து பார்க்கிறார்.

அவர் மிகவும் நல்லவராக இருந்திருக்கிறாள் என ஷர்மிளா கண்ணம்மாவிற்கு போன் செய்து நிகழ்ச்சிக்கு அழைக்கிறார். அப்போது கண்ணம்மா கண்டிப்பாக வருகிறேன் என சொல்கிறார். லட்சுமி வந்து யாரிடம் பேசுனாய் என கேட்க கண்ணம்மா மருத்துவமனையில் போன் வந்ததாக சொல்கிறார். பின் பாரதி ஹேமா கேட்டகேள்வி பற்றி நினைத்து வருத்தப்படுகிறார். கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிவதை நினைத்து பாரதி வருத்தப்படுகிறார். மறுபக்கம் ஷர்மிளா சாந்தியிடம் வெண்பா எங்கே என கேட்க அப்போது வெண்பா வருகிறார்.

நண்பரின் வீட்டிற்கு சென்றேன் என சொல்ல, ஷர்மிளா நாளைக்கு நாம குடும்ப நிகழ்ச்சி ஒன்று இருப்பதாக சொல்ல அப்போது என்ன நிகழ்ச்சி என வெண்பா கேட்கிறார். அடுத்த வாரம் நான் வெளிநாட்டிற்கு போக வேண்டும் அதனால் உன்னுடைய திருமணம் பற்றி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருக்கிறேன் என சொல்கிறார். என்ன நிகழ்ச்சி என கேட்க ஆனால் ஷர்மிளா சொல்ல மாட்டேன் என சொல்கிறார். நாளைக்கு நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என பார்க்கிறேன் என வெண்பா நினைக்கிறார்.

மறுபக்கம் ஹேமா வருத்தமாக இருக்க லட்சுமி என்ன ஆனது என கேள்வி கேட்கிறார். அப்போது ஹேமா டாடி 2 நாட்களாக என்னை பார்க்கவே இல்லை என சொல்ல லட்சுமி அழாதே என சொல்கிறார். ஆனால் ஹேமா அழுது கொண்டே இருக்க ஹேமா 2 நாட்களுக்கு முன்னாள் டாடி அந்த அங்கிள் பேசியதாக சொன்னேன்ல அதை பற்றி டாடியிடம் நான் கேட்டேன் ஆனால் டாடி சொல்லவே இல்லை கேஸ் வந்துவிட்டதாக கிளம்பிவிட்டார் அப்பறம் நான் அவரை பார்க்கவே இல்லை என சொல்ல லட்சுமி அதை கேட்டு கோபப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!