லட்சுமியிடம் சத்தம் போடும் கண்ணம்மா, ஹேமா கேள்விக்கு குடும்பம் தான் காரணம் என சொல்லும் பாரதி – இன்றைய எபிசோட்!

0
லட்சுமியிடம் சத்தம் போடும் கண்ணம்மா, ஹேமா கேள்விக்கு குடும்பம் தான் காரணம் என சொல்லும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியிடம் சத்தம் போடும் கண்ணம்மா, ஹேமா கேள்விக்கு குடும்பம் தான் காரணம் என சொல்லும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமியிடம் சத்தம் போடும் கண்ணம்மா, ஹேமா கேள்விக்கு குடும்பம் தான் காரணம் என சொல்லும் பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா காதலிப்பதாக சொன்னாலும் ரோஹித் அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை என சொல்கிறார். மறுபக்கம் ஹேமாவிடம் லட்சுமி தான் உண்மையை சொன்னதாக நினைத்து கண்ணம்மா சத்தம் போடுகிறார். பின் பாரதி ஹேமாவிடம் உண்மையை சொன்னது குடும்பத்தினர் என நினைத்து சண்டை போடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித்திடம் நான் பாரதி என்பவரை காதலிகிறேன் என சொல்ல ஆனால் ரோஹித் பரவாயில்லை நான் உன்னை தான் காதலிக்கிறேன் என சொல்கிறார். எனக்கும் காதல் இருந்தது ஆனால் திருமணம் என்றால் உன்னை தான் செய்வேன் என ரோஹித் சொல்கிறார். வெண்பாவிற்கு அதை கேட்டு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் கண்ணம்மா வீட்டிற்கு வந்து கோவமாக இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பாரதி கண்ணம்மாவை திட்டியதை நினைத்து கண்ணம்மா கோவப்படுகிறார். அப்போது லட்சுமி வர எனக்கு ரொம்ப பசிக்கிது சாப்பாடு செய்து கொடு என சொல்கிறார். ஆனால் கண்ணம்மா பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிந்தும் யாரிடமும் சொல்ல கூடாது என சொன்னேன் ஆனால் நீ ஏன் சொல்லி இருக்கிறாய் என கேட்க லட்சுமி நான் யாரிடம் சொன்னேன் என கேட்கிறார். ஹேமாவிற்கு உண்மை தெரிந்துவிட்டதாக அவர் என்னிடம் சண்டை போடுவதாக சொல்ல, அவர் திட்டினால் நீ அவருடன் தான் சண்டை போட வேண்டும் என்னிடம் ஏன் திட்டுகிறாய் என கேட்கிறார்.

அப்போது கண்ணம்மா நீ ஹேமாவிடம் சொல்லவில்லை என்றால் யார் ஹேமாவிடம் சொன்னது என கேட்க அப்படி கேளு என சொல்லி பாரதி ஒரு அங்கிளிடம் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என சொன்னதை ஹேமா கேட்டதாக சொன்னாள் என சொல்ல அப்போது தான் கண்ணம்மாவிற்கு எல்லாம் புரிகிறது பின் இது தெரியாமல் என்னை கோவித்து கொண்டாய் என லட்சுமி கோவமாக இருக்கிறாள். மறுபக்கம் வெண்பா ரோஹித் வீட்டிற்குள் வர உன்னிடம் பேச வேண்டும் என வெண்பா சொல்கிறார்.

பாரதியை என்னால் மறக்க முடியாது என வெண்பா சொல்ல, உன்னை பெண் பார்க்க வரும் போதே இதெல்லாம் உன் அம்மா என்னிடம் சொல்லிவிட்டார். நான் அமெரிக்காவில் சிறு தொழில் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தேன் என் தொழிலில் பெரிய பிரச்சனை அதை சமாளிக்க உன் அம்மா தான் எனக்கு உதவி செய்தார் அவர் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொன்னார். அப்பறம் உன் போட்டோவை பார்த்து நான் மயங்கிட்டேன் என சொல்கிறார். அதனால் வெண்பாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

1 – 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

பின் சௌந்தர்யா ஸ்கூலில் நடந்தது பற்றி மல்லிகாவிடம் சொல்கிறார். ஹேமா பாரதி கண்ணம்மா இருவர் கையால் பரிசு வாங்கியது எல்லாம் சந்தோசமாக இருந்ததாக சொல்லி சிரித்து கொண்டிருக்க அப்போது பாரதி கோவமாக வருகிறார். எல்லாம் செய்து விட்டு எப்படி இப்படி எல்லாம் பேசுறீங்க என பாரதி கேட்க எனக்கு கெடுதல் நினைப்பது நீங்க தான் என சொல்கிறார். அப்போது சௌந்தர்யாவிற்கு என்ன சொல்கிறார் என தெரியாமல் இருக்க ஹேமாவிடம் எல்லாத்தையும் சொல்லி அவளை கேள்வி கேட்க வைக்கிறீங்க என சொல்லி சண்டை போடுகிறார். பின் ரூமிற்கு சென்று பார்க்க ஹேமா தூங்கி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here