வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த ரோஹித், சந்தேகப்பட்ட வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த ரோஹித், சந்தேகப்பட்ட வெண்பா - இன்றைய
வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த ரோஹித், சந்தேகப்பட்ட வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த ரோஹித், சந்தேகப்பட்ட வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித் மீது சந்தேகப்பட ஆனால் ரோஹித் வெண்பாவிற்கு வைர நெக்லஸ் வாங்கி வருகிறார். அதனால் வெண்பா குழப்பத்தில் இருக்க நகைக்கடைக்காரரை அழைத்து சோதித்து பார்க்கிறார். அப்போது உண்மையான வைரம் என அவர் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித்தை சந்தேகப்படும் படி பேச ரோஹித் உன்னிடம் ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார். பின் வெண்பா 3 கோடி ப்ராஜெக்ட் என சொன்னியே அது பொய் தான என கேட்க இல்லையே நான் பேசியதும் ப்ராஜெக்ட் ஓகே ஆகிவிட்டது. அந்த சந்தோசத்தை கொண்டாட என் வெண்பாவிற்கு 25 லட்சத்திற்கு டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொண்டு வந்தேன் என ரோஹித் நெக்லஸை காட்ட சாந்தி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் சாந்தியும் சேர்ந்து கொள்ள ரோஹித் நெக்லஸை மாட்டி விடுகிறார்.

வெண்பா அதை பார்த்து கடுப்பாகிக்கிறார். ரோஹித் உன்னால் தான் வைர கற்கள் அழகாக இருக்கிறதா என தெரியவில்லை என சொல்கிறார். நான் வேலைக்காரனாக இருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் உன் மீது இருக்கும் அன்பு குறையாது என சொல்கிறார். பின் வெண்பாவிற்கு சந்தேகம் வர வழக்கமாக வாங்கும் நகைக்கடைக்கு போன் செய்து வர சொல்கிறார். மறுபக்கம் மருத்துவமனையில் ஜானகி அம்மாவிற்கு ராமன் ஐயா சாப்பாடு ஊட்டி விடுகிறார். அதை கண்ணம்மா பார்த்து சந்தோசப்படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் அவர்கள் அருகே சென்று ஏன் இங்கே உட்கார்ந்து சாப்பிடுறீங்க என கேட்க ரூமில் இருந்து வருத்தமாக இருந்தேன் அதான் என்னை இங்கே அழைத்து வந்து ஊட்டி விடுகிறார் என சொல்கிறார். பின் நாளைக்கு உன் பெண்ணை வர சொல் குழந்தைகளுடன் விளையாடினா மனம் நிம்மதியாக இருக்கிறது என ஜானகி அம்மா சொல்கிறார். பின் ராமன் கண்ணம்மாவிடம் வந்து ஜானகி ரிப்போர்ட் எல்லாம் வந்தால் அவளிடம் சொல்லாமல் என்னிடம் சொல்லுங்கள் என சொல்ல கண்ணம்மா பாரதி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் வெண்பாவை பார்க்க கடைக்காரர் வருகிறார். அப்போது வெண்பா அந்த நெக்லஸை காட்டி இது உண்மையான வைரமா என பார்க்க சொல்கிறார். நகைக்கடைக்காரர் அதை பார்க்க இது யார் வாங்கி கொடுத்தா என கேட்கிறார். அப்போது வெண்பா எனக்கு தெரியும் இது பொய்யான வைரம் தான என சொல்ல பின் ரோஹித் 420 வாடா என சத்தம் போடுகிறார். ரோஹித் வந்ததும் நகைக்கடைக்காரர். இது உண்மையான வைரஸ் கோடிஸ்வரர்களிடம் தான் இருக்கும் என சொல்கிறார்.

தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல் – அரசாணை வெளியீடு!

வெண்பா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ரோஹித் என்னை சந்தேகப்பட்டாய் அதனால் என்னை நம்பும் போது வைரத்தை வாங்கி கொள் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பின் மாடிக்கு சென்று தில்லிக்கு போன் செய்த ரோஹித் நம்மளுடைய திட்டம் சரியாகிவிட்டது என சொல்கிறார். நல்லவேளை அந்த நகைக்கடைக்காரருக்கு போன் செய்து மனைவியை கடத்தி வைத்திருப்பதாக மிரட்டினேன். அவனும் அதை நம்பிவிட்டான் என சொல்ல வெண்பா என்ன செய்வாள் என எனக்கு தெரியும், அதற்குள் நான் மாட்டிக் கொள்வேனா என ரோஹித் நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here