ஆப்ரேசன் பற்றி இறுதியாக முடிவெடுத்த ஜானகி அம்மா, ரோஹித் நினைத்து கடுப்பில் இருக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஆப்ரேசன் பற்றி இறுதியாக முடிவெடுத்த ஜானகி அம்மா, ரோஹித் நினைத்து கடுப்பில் இருக்கும் வெண்பா - இன்றைய
ஆப்ரேசன் பற்றி இறுதியாக முடிவெடுத்த ஜானகி அம்மா, ரோஹித் நினைத்து கடுப்பில் இருக்கும் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஆப்ரேசன் பற்றி இறுதியாக முடிவெடுத்த ஜானகி அம்மா, ரோஹித் நினைத்து கடுப்பில் இருக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஜானகி அம்மா தன்னுடைய ஆப்ரேசன் பற்றிய இறுதி முடிவை பாரதியிடம் சொல்கிறார். மறுபக்கம் கண்ணம்மாவை கொல்ல திட்டமிட்ட வெண்பா அது தோல்வியில் முடிந்ததால் அதை நினைத்து கோவத்தில் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி ஜானகி அம்மாவை பார்க்க வந்து எப்படி இருக்கீங்க என கேட்கிறார். அப்போது ஜானகி அம்மா உங்க மருத்துவமனையில் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார். பின் பாரதி ஆப்ரேசன் பற்றி இன்று முடிவு சொல்கிறேன் என சொன்னீங்க என்னாச்சு ஆப்ரேசன் செய்யலாமா, ஆப்ரேசனிற்கு எல்லாம் தயாராக இருக்கிறது என்ன ராமன் சார் இவங்களை கூட்டிக் கொண்டு போகலாமா என கேட்கிறார். ஆனால் அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

என்ன அமைதியாக இருக்கீங்க என கேட்க உடனே ஜானகி அம்மா நான் ஆப்ரேசன் செய்து கொள்ளமாட்டேன் என சொல்கிறார். என்ன சொல்றீங்க என பாரதி கேட்க எனக்கு வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாக அமைந்தது, நல்ல அப்பா அம்மா, நல்ல கணவர், முத்து முத்தாக 3 குழந்தைகள் பேரக் குழந்தைகள் என அனைத்தும் நல்லபடியாக கொடுத்த கடவுளிடம் இன்னும் என் நாட்களை அதிகமாக கொடுக்க சொல்லி சொன்னால் அது பேராசை போல இருக்கிறது என சொல்கிறார். பாரதி அப்படி எல்லாம் இல்லை என சொல்ல உடனே ஜானகி அம்மா ஆப்ரேசன் செய்யாமல் என்னால் 4 மாசம் இருந்தால் அது போதும் என சொல்கிறார்.

உடனே பாரதி நான் ஆப்ரேசன் செய்தால் 10 சதவிகிதம் என சொன்னதை கேட்டு இப்படி எல்லாம் செய்கிறீர்களா என கேட்கிறார். நான் சொன்னது ஒரு மருத்துவ உண்மை ஆனால் இப்படி சொன்ன பலருக்கு ஆப்ரேசன் செய்து எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கிறது என சொல்கிறார். ஜானகி அம்மா முடியாது என சொல்ல, ராமன் சார் நீங்க சொல்லுங்கள் என சொல்கிறார். ஆனால் ராமன் சார் ஜானகி ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக தான் இருப்பாள் என சொல்கிறார். பின் பாரதி என்னை நம்பி நீங்க ஆப்ரேசன் செய்து கொள்ளுங்கள் என சொல்ல, நான் ஆப்ரேசன் செய்தால் எத்தனை வருஷம் நன்றாக இருப்பேன் என கேட்கிறார் 10 வருஷம் என சொல்ல, அப்புறம் நான் சுயமாக இருக்க முடியுமா என கேட்கிறார்.

பாரதி இல்லை என சொல்ல நான் நன்றாக இருக்கும் போதே என் பசங்க என்னுடைய பேர குழந்தைகளுடன் நான் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறன் என சொல்கிறார். இப்போது சொல் என் முடிவு சரி தான என கேட்க ஆமாம் என பாரதி சொல்கிறார். நான் நன்றாக இருக்கும் போதே என் வாழ்க்கை முடிய வேண்டும் என சொல்ல, பாரதி எதுவும் பேசாமல் கிளம்புகிறார். மறுபக்கம் ஹேமா சமையல் அம்மா பெயர் கண்ணம்மா என உண்மையை தெரிந்து யோசனையில் இருக்கிறார். என் அம்மா சமையல் அம்மா என்பதால் தான் என்னிடம் உண்மையை சொல்லாமல் இருக்காங்க என சொல்கிறார்.

லட்சுமி கூட அவ அம்மா பெயர் கண்ணம்மா என்ற உண்மையை மறைத்துவிட்டாள் என நினைக்கிறார். என்னுடைய அம்மா தான் என்ற உண்மை தெரிய கூடாது என்பதால் தான் இப்படி இருக்கிறார் என நினைக்கிறார். பின் வெண்பா வீட்டிற்கு வர சாந்தி அந்த கண்ணம்மா கதை முடிந்துவிட்டதா என கேட்கிறார். வெண்பா எல்லாத்தையும் அந்த அரை ,மெண்டல் கெடுத்துவிட்டான் என சொல்ல உடனே ரோஹித் வருகிறார். அவர் இன்னைக்கு கண்ணம்மாவின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன் என சொல்ல, சாந்தி ஏன் என கேட்கிறார்.

JEE 2022 மெயின் தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

அப்போது கண்ணம்மா ரோட்டில் வரும் போது லாரி இடிக்க வந்தது அப்போது நான் ஓடி சென்று காப்பாற்றினேன் என சொல்ல வெண்பா பயங்கர கோவத்தில் இருக்கிறார். எவ்வளவு பெரிய விஷயம் செய்து இருக்கிறேன் ஆனால் நீ எதுவும் சொல்லமால் இருக்கிறாய் என கேட்கிறார். வெண்பா என்ன சொல்வது என தெரியாமல் கடுப்பில் இருக்கிறார். சாந்தி நாட்டுக் கோழி குழம்பு செய்து என்னை சப்ரைஸ் செய்ய நினைத்தாயா என கேட்க, வெண்பா யாருடா நீ என கடுப்பில் கேட்கிறார்.

பின் விக்ரமிடம் பாரதி கண்ணம்மா பேச வருகின்றனர். ஜானகி அம்மாவிடம் பேசினீர்களா என்ன சொன்னார்கள் என கேட்க அப்போது விக்ரம் அவருடைய முடிவில் பிடிவாதமாக இருப்பதாக சொல்கிறார். அவங்களின் பசங்க பேரக் குழந்தைகளை வர சொல்லி இருக்கிறார்கள். இன்னும் இருக்க போற கொஞ்ச நாட்களை சந்தோசமாக வாழ போறதாக சொன்னார் என சொல்கிறார். பின் அவங்க முடிவு அதுவாக தான் இருந்தால் என்ன செய்ய முடியும் என பாரதி சொல்கிறார். விக்ரம் அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!