ஹேமா அம்மா பற்றி கண்ணம்மாவிடம் கேட்ட ஹேமா, ஜானகி அம்மா நிலைமையை சொன்ன பாரதி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியிடம் கண்ணம்மாவின் அப்பா வந்து கண்ணம்மாவின் அம்மா பற்றி சொல்ல உடனே ஹேமா அம்மா பற்றி லட்சுமி கேட்கிறாள். ஆனால் கண்ணம்மா பதில் சொல்லாமல் கிளம்புகிறார். மறுபக்கம் ஜானகி அம்மா நிலைமையை நினைத்து கண்ணம்மா வருத்தப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி வீட்டில் தனியாக இருக்க அப்போது கண்ணம்மாவின் அப்பா வருகிறார். அவர் லட்சுமிக்க்கு ட்ரெஸ் சாக்லேட் எல்லாம் வாங்கி வருகிறார். அப்போது லட்சுமி என்னை பார்க்க ஏன் பாட்டி வரவில்லை என கேட்க கண்ணம்மா அப்பா வருத்தப்படுகிறார். அப்போது அஞ்சலி சித்திக்கு அன்னைக்கு வளைகாப்பு நடந்த போது ஒருத்தவங்க இருந்தார்களே அது தான் என் பாட்டியா என கேட்க இல்லை என கண்ணம்மாவின் அப்பா சொல்கிறார். கண்ணம்மாவின் அம்மா அவள் பிறந்ததும் இறந்துவிட்டாள் அதனால் என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சொன்னதாக சொல்கிறார்.
லட்சுமி அதை நினைத்து வருத்தப்பட பின் அஞ்சலி சித்தி யார் என கேட்க அவள் எனக்கும் அந்த பாட்டிக்கும் பிறந்தவள் உனக்கு சித்தி என சொல்கிறார். அப்பாவின் தம்பி மனைவி என்பதால் தான் சித்தி என அழைத்தேன் ஆனால் அவர் என் அம்மாவின் தங்கச்சியா என கேட்கிறார். அப்போது கண்ணம்மா வர ஏன் இதெல்லாம் இவளிடம் சொல்றீங்க என கேட்கிறார். பின் அவளே தெரிந்து கொள்வதற்கு முன் நாம சொல்லிவிடலாம் என சொல்கிறார். பின் நேரமாகிவிட்டதாக சொல்லி கிளம்ப அப்போது லட்சுமி கண்ணம்மாவிடம் உன் அம்மா நீ பிறந்ததும் இறந்துட்டாங்களா என கேட்கிறாள்.
கண்ணம்மா ஆமாம் என சொல்ல அப்போது லட்சுமி அப்பாவும் உன்னை பிரிந்த பின் தான் ஹேமா அம்மாவை கல்யாணம் செய்து கொண்டாரா இல்லை அவரை கல்யாணம் செய்ததால் தான் நீ பிரிந்து வந்தியா என கேட்க ஆனால் கண்ணம்மா பதில் சொல்லாமல் இருக்கிறார். ஹேமா அம்மா யார் என கேட்க ஆனால் கண்ணம்மா பதில் சொல்லாமல் கிளம்பி செல்கிறார். மறுபக்கம் ரோஹித் பாடலுக்கு நடனம் ஆடி ஜாலியாக இருக்கிறார்
TN Job “FB
Group” Join Now
அப்போது ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து போன் செய்கிறார். என் மகள் உங்களை ஏற்றுக் கொண்டாரா என கேட்க ஆனால் ரோஹித் உங்க மகள் இதயம் கருங்கல் அதை கஷ்டப்பட்டு தான் கரைக்க வேண்டும் என சொல்கிறார். உங்க மகளின் மனதை கரைக்க 25 லட்சத்திற்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் ஆனால் அவள் அதை வேண்டாம் என சொன்னால் கூட பரவாயில்லை அதை சந்தேகப்பட்டு நகைக்கடை ஊழியரை அழைத்து சோதனை செய்து பார்க்கிறாள் என சொல்ல ஷர்மிளா முட்டாள் அவள் என சொல்கிறார். பின் ரோஹித் சீக்கிரமாக மனதை மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன் என சொல்கிறார்.
பின் கண்ணம்மா மருத்துவமனையில் இருக்க பாரதி அவரை அழைக்கிறார். அப்போது கண்ணம்மா விக்ரமை வைத்து கொண்டு ஜானகி அம்மா ரிப்போர்ட் பற்றி பேசுகின்றனர். விக்ரம் என்ன ஆச்சு என கேட்க நான் நினைத்தது போலவே பிரச்சனை தான் இருக்கிறது. அவருக்கு இதயத்திற்கு போகிற ரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என சொல்ல அவருடைய உடம்பு மோசமாக இருக்கிறது. ஆப்ரேசன் செய்தாலும் காப்பாற்றுவது கஷ்டம், அது போல ஆப்ரேசன் செய்யாமல் விட்டால் 5 மாதங்கள் தான் உயிரோட இருப்பார் என சொல்கிறார்.
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – போக்குவரத்துத்துறைக்கு முக்கிய எச்சரிக்கை!
இது பற்றி உடனே சொல்ல வேண்டும் என கண்ணம்மாவிடம் சொல்லி ராமன் சாரை வர சொல்கிறார். ஆனால் கண்ணம்மா அவரிடம் சொல்ல வேண்டாம் என சொல்ல பாரதி கண்ணம்மாவை சத்தம் போடுகிறார். பின் கண்ணம்மா அவர் ரொம்ப எமோஷனல் ஆனவர் என சொல்ல இப்படி எல்லாம் சொல்வதற்கு தான் இங்கே வேலை செய்கிறீர்களா என பாரதி கேட்கிறார். அப்போது வேறு வழியில்லாமல் கண்ணம்மா ராமன் சாரை அழைத்து வர அவரிடம் ஜானகி அம்மா ரிப்போர்ட் பற்றி பேச தயக்கப்பட அதை பார்த்து ராமன் அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.