அம்மா பற்றி பாரதியிடம் கேட்கும் ஹேமா, வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
அம்மா பற்றி பாரதியிடம் கேட்கும் ஹேமா, வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அம்மா பற்றி பாரதியிடம் கேட்கும் ஹேமா, வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
அம்மா பற்றி பாரதியிடம் கேட்கும் ஹேமா, வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா பாரதியிடம் அம்மா பற்றி கேட்க உடனே பாரதி ஹேமாவிடம் கோவமாக பேசுகிறார். மறுபக்கம் வெண்பாவை ரோட்டில் சந்தித்த கண்ணம்மா பாரதி விவாகரத்து வாங்கவில்லை என சொல்லி வெறுப்பேற்றுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி மருத்துவமனை வேலைகளை செய்து கொண்டிருக்க அப்போது ஹேமா வருகிறார். ஹேமா பாரதியை பார்த்து பேச வேண்டும் என சொல்ல உடனே பாரதி எனக்கு ஒரு வேலை இருக்கிறது அதை முடித்துவிட்டு பேசுகிறேன் என சொல்கிறார். ஹேமா அதெல்லாம் முடியாது என சொல்லிவிட என்ன இவ்வளவு பாசமாக இருக்கிறாய் என்ன வேண்டும் என பாரதி கேட்கிறார். எதுவும் வேண்டாம் என் அப்பா மீது எனக்கு எப்போதும் பாசம் இருக்கிறது என ஹேமா பாரதியை கொஞ்சுகிறார்.

பின் பாரதி உனக்கு என்ன வேண்டும் என கேட்க எனக்காக விவாகரத்து வேண்டாம் என சொன்னதால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என சொல்கிறார். என் அம்மா உயிரோட இல்லை அதனால் விவாகரத்து பற்றி இனிமேல் பேசமாட்டேன் என சொன்னது எல்லாம் சரி தான் ஆனால் என் அம்மா பெயர் என்ன என ஹேமா கேட்கிறார். பாரதி எதுவும் சொல்லாமல் இருக்க என் அம்மா பெயர் கண்ணம்மா தான என ஹேமா கேட்கிறார். உனக்கு எப்படி தெரியும் என பாரதி கேட்க நீங்க தான ஒரு நாள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் எழுதியதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என் அம்மா எப்படி இருப்பார்கள் உயரமாக இருப்பார்களா இல்லை குள்ளமாக இருப்பார்களா என ஹேமா கேட்க பாரதி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பின் கண்ணம்மா அம்மாவின் போட்டோ கூட நீங்க என்னிடம் காட்டியதில்லை என சொல்ல உங்க அம்மா அப்பா எல்லாம் உங்க கூடவே இருக்காங்க என் அம்மாவின் அம்மா அப்பா எங்கே என கேட்கிறார். பாரதி ஹேமா கேட்ட கேள்விகளால் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். அப்போது பாரதி ஹேமா உன் அம்மா இல்லை இனிமேல் உனக்கு நான் எனக்கு நீ அவ்வளவு தான் என சொல்ல ஹேமா அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பின் வெண்பா காரில் வந்து கொண்டிருக்க அப்போது கார் நடுவே நின்று விடுறது. உடனே வெண்பா மெக்கானிக் போன் செய்து வர சொல்கிறார். பின் வெண்பா இப்படி நடு ரோட்டில் நிற்க வைத்துவிட்டார்கள் எல்லாம் அந்த ரோஹித்தால் வந்தது. அவன் வந்ததில் இருந்து தான் எல்லா பிரச்சனையும் எதுவும் என் இஷ்டப்படி நடக்கவில்லை என வெண்பா புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா வர வெண்பா நன்றாக இருக்கீங்களா என கேட்டு வெறுப்பேத்துகிறார்.

எப்படி இருந்த வெண்பா இப்படி ஆயிட்டீங்க என சொல்லி வெறுப்பேத்துகிறார். வெண்பா வேண்டாம் செம கடுப்பில் இருக்கேன் என சொல்ல இருந்துட்டு போ என கண்ணம்மா சொல்கிறார். பின் கண்ணம்மா அடுத்தவங்க குடும்பத்தை கெடுத்ததற்கு எல்லாம் உனக்கு தேவை தான் என சொல்கிறார். என்ன பண்ண போற என கேட்க வெண்பா கோபப்படுகிறார். கார் நின்றுவிட்டது என ரோட்டில் படுக்க போறீயா இல்லை நடந்தே வீட்டிற்கு போக போறீயா என கேட்கிறார்.

இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பின் கண்ணம்மா இன்னும் நீ திருந்தவே இல்லை சிலர் சாகுறவரை திருந்தவே மாட்டார்கள் அது தான் நீ என சொல்கிறார். டாக்டர் படிச்ச உனக்கு அறிவே இல்லையே எப்போ தான் திருந்த போகிறாய் என கேட்கிறார். அப்போது நீ திருந்த வேண்டும் என தான் உன் அம்மா அமெரிக்காவில் இருந்து மாப்பிள்ளை கூட்டிக் கொண்டு வந்தார்களே என் தம்பி ரோஹித் சாரதி மிகவும் நல்ல பையன் அவனை இன்னும் உனக்கு பிடிக்கவில்லையா என கேட்கிறார்.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா என் கணவர் எனக்கு விவாகரத்து கொடுக்கமாட்டேன் என சொல்லி அந்த கேஸை வாபஸ் வாங்கி விட்டார் என சொல்கிறார். அதனால் இனிமேல் ஒழுங்காக இரு என சொல்கிறார். இப்போ என் வீட்டிற்கு வரியா போடி தோசை ஊற்றி கொடுக்கிறேன். நானும் என் கணவரும் எப்படி எல்லாம் சந்தோசமாக இருக்கோம் ஒரே மருத்துவமனையில் எப்படி வாழ்க்கை நடத்துகிறோம் என பேசலாம் என சொல்கிறார். நீங்களும் ரோஹித் தம்பியும் ஒரே வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என கதை சொல்கிறேன் என சொல்கிறார்.

உன் உடம்புக்கோ மனசிற்கோ எதாவது பிரச்சனை என்றால் எங்க மருத்துவமனைக்கு வா இலவசமாக டிரீட்மென்ட் பார்க்கிறேன் என கண்ணம்மா சொல்ல வெண்பா கோவப்படுகிறார். மறுபக்கம் சௌந்தர்யா பாரதியிடம் ஜானகி அம்மா டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டதா எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க பிரச்சனை இருக்கிறது அவங்க மிகவும் மோசமான கண்டிஷனில் இருப்பதாக பாரதி சொல்கிறார். சௌந்தர்யா அதை கேட்டு வருத்தப்படுகிறார். ஜானகி அம்மா எல்லாருக்கும் நிறைய உதவி செய்திருப்பதாக சௌந்தர்யா பேசி வருத்தப்படுகிறார். பின் எப்படியாவது அவங்களை காப்பாற்ற வேண்டும் என சௌந்தர்யா சொல்ல பாரதி என்னால் முடிந்த அளவிற்கு நான் முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக காப்பாற்றுவேன் என சொல்லி வாக்கு கொடுக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!