பாரதி பெட்டியை திருப்பி கொடுத்த கண்ணம்மா, உண்மையை நிரூபிக்க போட்ட சபதம் – இன்றைய எபிசோட்!

0
பாரதி பெட்டியை திருப்பி கொடுத்த கண்ணம்மா, உண்மையை நிரூபிக்க போட்ட சபதம் - இன்றைய எபிசோட்!
பாரதி பெட்டியை திருப்பி கொடுத்த கண்ணம்மா, உண்மையை நிரூபிக்க போட்ட சபதம் - இன்றைய எபிசோட்!
பாரதி பெட்டியை திருப்பி கொடுத்த கண்ணம்மா, உண்மையை நிரூபிக்க போட்ட சபதம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியின் பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று கொடுக்க, நான் எந்த தவறும் செய்யவில்லை என நிரூபிப்பேன் என சபதம் போடுகிறார். பின் லட்சுமி கண்ணம்மா பிறந்தநாள் விழாவிற்கு பாரதியை அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி வீட்டிற்கு வந்து பாரதி பெட்டியை கொடுக்கிறார். அப்போது பாரதி என்ன எல்லா பொருளையும் நான் கேட்காமலே கொடுத்துவிட்டாய் என சொல்ல, இது ஒரு டாக்டரின் பெட்டி இதனால் யாரவது ஒருவர் உயிர் காப்பாற்றப்படும் அதனால் தான் நான் வந்தேன் என சொல்கிறார். பாரதி ஒருவேளை அவள் உண்மையை ஒப்புக் கொள்ள போகிறாளோ என பாரதி நினைக்க அப்போது சௌந்தர்யா வருகிறார். இதை நீயே ஏன் கொடுக்கிறாய் அப்போ எல்லாத்தையும் விட போகிறாயா என கேட்க, நான் ஏன் விட வேண்டும் நான் எந்த தவறும் செய்யவில்லை.

தவறு செய்யாத என்னை உண்மையை ஒப்புக் கொள் என சொல்லி அசிங்கப்படுத்தியவர்களை என்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பேன். அதுவும் என் மகளுக்கு அப்பா யார் என்ற உண்மையை நான் நிரூபிப்பேன் இது இந்த கண்ணம்மாவின் சபதம் என சொல்கிறார். பின் வெண்பாவிற்கு பாரதி போன் செய்கிறார். நல்லபடியாக பாரதி பேச அவர் சந்தோசப்படுகிறார். வெண்பா அவரை வீட்டிற்கு வர சொல்ல, பாரதி வரேன் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா சந்தோசப்பட, கண்ணம்மா வந்தது பற்றி சொல்கிறார். அதை கேட்டு வெண்பா பதட்டம் அடைய, என் வாழ்க்கையில் மிகவும் தலைவலி என சொல்ல, நீ இங்கே என்னை பார்க்க வா எல்லாம் சரியாகிவிடும் என வெண்பா சொல்கிறார்.

லட்சுமி கண்ணம்மாவை காணாமல் தேட குமாரை போன் செய்ய சொல்கிறார். அந்த நேரம் கண்ணம்மா வர முக்கியமான வேலையாக வந்ததாக சொல்கிறார். நீ எதோ பேக் எடுத்துட்டு போனியே அது என்ன பேக் என லட்சுமி கேட்க அது சாப்பாடு வாங்க வந்தவரின் பேக் என சொல்கிறார். பின் டாக்டர் அங்கிள் உன்னிடம் சாப்பிட்டுவிட்டு ஏன் பணம் கொடுக்கிறார் என கேட்க, யார் சொன்னது என கண்ணம்மா கேட்கிறார். பாட்டி தான் சொன்னாங்க என சொல்ல, இனிமேல் அவரிடம் நீ காசு வாங்காதே அவர் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார் என சொல்கிறார்.

தமிழக தனியார் நிறுவனங்களில் 80% வேலை தமிழர்களுக்கே – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

குமார் தங்கைக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லி கண்ணம்மாவை அழைக்கிறார். பின் பாரதி கண்ணம்மா ஸ்கூலிற்கு செல்ல அங்கே ஹேமா அழுது கொண்டே வருகிறார். என்னாச்சு உனக்கு அடிபட்டதா என கண்ணம்மா கேட்க எனக்கு இல்லை லக்ஷ்மிக்கு என சொல்கிறார். அப்போது லட்சுமி நடந்ததை சொல்ல, என்னை ஒரு பெண் தள்ளி விட்டதாக சொல்கிறார். அதற்கு நானே தான் விழுந்தேன் என மிஸ் சொன்னார் அது உண்மை இல்லை அதனால் மீண்டும் போட்டி வைக்க சொன்னேன் என லட்சுமி சொல்கிறார். செய்யாத தவறை ஒப்புக் கொள்ள கூடாது என நீ சொல்லிருக்க அதனால் தான் நான் அப்படி செய்தேன் என சொல்கிறார்.

பின் லட்சுமி பாரதியிடம் காசு கொடுத்து இனிமேல் அம்மாவிடம் சாப்பிட்டால் காசு கொடுக்காதீங்க என சொல்கிறார். அந்த பணத்தை வாங்கி கொள்ள சொல்ல வேறு வழி இல்லாமல் பாரதி வாங்கி கொள்கிறார். பின் அடுத்த வாரம் என் அம்மாவிற்கு பிறந்தநாள் வருகிறது. நீங்க கண்டிப்பாக வர வேண்டும் என சொல்ல, ஹேமா டாடியை நான் கூட்டிக் கொண்டு வருகிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here