மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா - இன்றைய
மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
மகளின் நிலைமையை நினைத்து கோவப்பட்டு பேசிய சண்முகம், லக்ஷ்மியை கூட்டிச் சென்ற கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியை சௌந்தர்யா பயங்கரமாக திட்ட பாரதி என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறார். பின் கண்ணம்மாவின் அப்பா மகளின் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார்

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி என் பக்கம் இருக்கும் நியாயத்தை ஏன் யாரும் பார்க்க மாட்டேங்குறீர்கள் என கேட்கிறார். என் பக்கம் யாருமே இருப்பதில்லை உங்க மனது எல்லாம் கல்லாகிவிட்டது என சொல்கிறார். பின் மாடி ஏறி போக சௌந்தர்யா நில்லுடா என சொல்கிறார். அவள் செய்த காரியத்திற்கு வேறு யாரவது இருந்தால் அவளை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி இருப்பான் ஆனால் நான் வாழ வேண்டும் என நினைத்து தான் இந்த வாய்ப்பை கொடுத்தேன் என சொல்கிறார். பின் கண்ணம்மாவின் அப்பா கையை தட்டி அருமை மாப்பிள்ளை என் கண்ணம்மா ஒரு அறிவில்லாதவள்.

நீங்க கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி இருக்கலாம், ஆனால் சுயமரியாதை வைத்துக் கொண்டு என்ன வாங்க முடியும் என கேட்கிறார். அஞ்சலி என்ன பேசுறீங்க என கேட்க, நான் நடத்தை கெட்டவளை பெற்றவள் என சொல்கிறார். பாரதி என்ன ரொம்ப புத்திசாலித்தனமா பேசுவதாக நினைப்பா உங்களுக்கு என கேட்கிறார். அப்போது சௌந்தர்யா பெத்த அப்பா முன்னாடி இப்படி நடந்து கொண்டால் அவர் கேட்க தான் செய்வார் என சொல்கிறார். என் பொண்ணு தப்பு செய்வதை ஒப்புக் கொள்ள சொல்வது உங்களுக்கு சரியா என கேட்கிறார்.

உன்னை எவ்வளவு நல்லவன் என நினைத்தேன் ஆனால் தப்பு செய்யாத என் பொண்ணை நீ நடத்தை கெட்டவள் என ஒப்புக் கொள்ள சொல்வது கோடரியை எடுத்து நெஞ்சை பிளப்பது போல இருக்கிறது. 9 வருசமாக என் மகள் படும் கஷ்டத்தை நீ பார்க்கவில்லையா என கேட்கிறார். செய்யாத தப்பை எப்படி ஏற்றுக் கொள்ள சொல்கிறார். அப்படியே ஏற்றுக் கொள்ள சொன்னாலும் என்றாவது ஒருநாள் யாராவது ஒரு நாள் எதாவது பேச அது இன்னும் கொழுந்து விட்டு எரியும், இப்படி குணம் இருக்கும் நீங்க இன்னும் கஷ்டப்பட தான் போறீங்க, நான் சம்பம் விடுவதாக நினைக்காதீங்க, இந்த அகங்காரம் எல்லாம் அடங்கி எல்லார் கூடி இருக்கும் சபையில் நீங்க நிற்க தான் போறீங்க என கேட்கிறார்.

என சொல்லி கண்ணீருடன் அவர் செல்கிறார். பின் சௌந்தர்யா இப்போது உனக்கு நிம்மதியாக இருக்குமே இதற்கு தான ஆசைப்பட்டாய் என கேட்கிறார். இனிமேல் வீட்டில் எதாவது நிகழ்ச்சி என்றால் இவனை கூப்பிட வேண்டாம் என அகில் சொல்ல இப்படி ஏதாவது செய்வார் என எப்படி தெரியும் என கேட்கிறார். என்னை என்ன சொல்கிறீர்கள் வெளிப்படையாக பேசினால் இப்படி சொல்றீங்க என சொல்ல, சௌந்தர்யா இந்த 6 மாதம் எங்கே இருக்க போற என நீ முடிவு செய் இது கோர்ட் ஆர்டர் அதனால் நான் அதை மீற அனுமதிக்கமாட்டேன் என சொல்கிறார்.

அடுத்த 64 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

கண்ணம்மா பாரதி பேசியதை நினைத்து வருத்தத்துடன் நடந்து சென்றிருக்க, ஹேமாவும் லக்ஷ்மியும் காரில் கண்ணம்மாவை பார்க்கிறார். இருவரும் இறங்கி வர லட்சுமி வா நம்ம வீட்டிற்கு போவோம் என சொல்கிறார். அப்போ நா என ஹேமா கேட்க உன் டாடி வந்துவிட்டார் என சொல்கிறார். ஏன் உங்க முகம் இப்படி இருக்கிறது என ஹேமா லட்சுமி கேட்க வெயில் அதனால் தான் என கண்ணம்மா சொல்கிறார். பின் லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

கண்ணம்மாவின் அப்பா அழுது கொண்டே வர மாயாண்டி அவரை பார்க்கிறார். என்ன மாமா பூஜை இருக்கும் என சொன்னார்களே நல்லபடியாக முடிந்ததா என கேட்கிறார். அது எப்படி நல்லபடியாக நடக்கும் என சொல்ல, உங்களுக்கு தான் உங்க மருமகன் இருக்கானே என கேட்கிறார். அவன் தான் என் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டானே போ ஊர் முழுவதும் என் மகள் வாழ்க்கை போனதை சொல்லு என சொல்கிறார். உடனே மாயாண்டி வெண்பா அம்மாவிடம் இதை உடனே சொல்வோம் என நினைக்க, கண்ணம்மா ஒருபக்கம் பாரதி ஒருபக்கம் சௌந்தர்யா ஒரு பக்கம், கண்ணம்மாவின் அப்பா ஒரு பக்கம் வருத்தத்துடன் செல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!