அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க போகும் லட்சுமி, பாரதி வரக்கூடாது என நினைக்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க போகும் லட்சுமி, பாரதி வரக்கூடாது என நினைக்கும் சௌந்தர்யா - இன்றைய
அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க போகும் லட்சுமி, பாரதி வரக்கூடாது என நினைக்கும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க போகும் லட்சுமி, பாரதி வரக்கூடாது என நினைக்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மேக்கப் போட்டு வந்ததை பார்த்து லட்சுமி மிகவும் சந்தோசப்படுகிறார். பின் லட்சுமி தனது அப்பாவிற்கு சப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஹேமா பற்றிய உண்மையை பாரதிக்கு சொல்வதால் சௌந்தர்யா பதட்டமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா அஞ்சலி மேக்கப் போட்டு வர லக்ஷ்மியை அழைத்து காட்டுகிறார். அப்போது லட்சுமி இப்போது தான் மிகவும் அழகாக இருக்கிறாய் என காட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். பின் இப்போது தான் அப்பா வருவார் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது என லட்சுமி சொல்கிறார். பின் லட்சுமி தனது தோழிகளை அழைத்து கண்ணம்மாவை சந்தோசப்படுத்துகிறார். கண்ணம்மாவின் அப்பா இவள் லக்ஷ்மியை வளர்கிறாரா, இல்லை லட்சுமி இவளை வளர்கிறாரா என தெரியவில்லை என நினைக்கிறார். பின் சௌந்தர்யா சோகமாக இருப்பதை பார்த்து வேணு என்ன ஆச்சு என கேட்கிறார்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – சான்றிதழ் வழங்கல் துவக்கம்!

அப்போது சௌந்தர்யா ஒன்றுமில்லை என சொல்லி, போன் செய்ய நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் பாரதி கண்ணம்மா சொல்ல போகும் ரகசியத்தை நினைத்து வேகமாக ஹேமாவுடன் காரில் வருகிறார். அப்போது ஹேமா நாம எங்கே போகிறோம் சமையல் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என சொல்கிறார். பாரதி நாம போனால் உனக்கு தெரிந்துவிடும் என ஹேமாவிடம் சொல்கிறார். பின் சௌந்தர்யா வருத்தமாக இருக்க வேணு என்னாச்சு என கேட்கிறார். சௌந்தர்யா நீங்க நினைத்து பார்த்ததை விட பெரிய விஷயம் எல்லாம் நடக்க போகிறது என சௌந்தர்யா சொல்கிறார்.

என்ன சொல்கிறாய் என கேட்க, ஆமாம் கண்ணம்மா என்னிடம் சொன்னால் பாரதியிடம் ஹேமா பற்றி சொல்ல போகிறேன் என என்று சொல்ல, வேணு இது என்ன புது பிரச்சனை என கேட்கிறார். அப்போது லட்சுமி வர ஹேமாவும் டாக்டர் அங்கிளும் கிளம்பிட்டாங்களா அவர்கள் வரும் போது என் அப்பாவும் வருவார்கள் நான் டாக்டரிடம் காட்டுவேன் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா அப்பாவை அழைத்து என் அப்பா எப்படி இருப்பார் என கேட்கிறார். அவர் நல்ல உயரமாக இருப்பார் என சொல்ல, என் அப்பா கார் வைத்திருக்கிறாரா என கேட்கிறார். 3 கார் இருப்பதாக சொல்ல, ஹேமா வீட்டிலும் மூணு கார் இருக்கிறது என லட்சுமி சந்தோசப்படுகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை வழங்கப்படுமா?

எங்களுக்கு ஒரு கார் கொடுத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என சொல்கிறார். பின் தனது நண்பர்களை அழைத்து என் அப்பா காரில் வருவார் அப்போது மலர் தூவி வரவேற்க வேண்டும் என சொல்கிறார். பின் கண்ணம்மா பாரதி வருவாரா என பார்த்து கடவுளை வேண்டிக் கொள்கிறார். சௌந்தர்யா அதை பார்த்து கண்ணம்மா மனதில் பல குழப்பம் இருக்கிறது என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா ஹேமா பற்றிய உண்மை அவனுக்கு தெரிய கூடாது என நினைக்கிறார். வேணு எப்படியும் உண்மை தெரியவரும் என சொல்ல, ஆனால் ஹேமா நிலைமை ரொம்ப மோசமாகிவிடும் என சொல்கிறார்.

லட்சுமி அப்பா வராமல் ஏமாந்து போவாள் அதை சமாளித்து விடலாம் ஆனால் ஹேமாவை பாரதி வெறுத்துவிட்டால் என்ன செய்வது என கேட்கிறார். ஹேமா தான் 8 வருசமாக அவனுக்கு மருந்தாக இருந்தால் ஆனால் அதை அவனிடம் இருந்து புடுங்கினால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் லட்சுமி அப்பா வருவதால் கோலத்தில் விளக்கு ஏற்றி அலங்காரம் செய்கிறார். அப்பா வந்து பார்த்து சப்ரைஸ் ஆக போவதாக சொல்கிறார். சௌந்தர்யா காத்துக் கொண்டிருக்க, கண்ணம்மா நீங்க என்ன நினைக்கிறீர்கள் என தெரியவில்லை ஆனால் அவர் வருவார் என எனக்கு நம்பிக்கை இருப்பதாக கண்ணம்மா சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here