வெண்பா வீட்டிற்கு வந்த பாரதி, கண்ணம்மாவின் திட்டம் என்ன? இன்றைய எபிசோட்!

0
வெண்பா வீட்டிற்கு வந்த பாரதி, கண்ணம்மாவின் திட்டம் என்ன? இன்றைய எபிசோட்!
வெண்பா வீட்டிற்கு வந்த பாரதி, கண்ணம்மாவின் திட்டம் என்ன? இன்றைய எபிசோட்!
வெண்பா வீட்டிற்கு வந்த பாரதி, கண்ணம்மாவின் திட்டம் என்ன? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி வெண்பா வீட்டிற்கு ஹேமா உடன் கிளம்ப அகில் சௌந்தர்யா வேணு அதை தடுக்க முடியாமல் வருத்தப்படுகின்றனர். பின் கண்ணம்மா வெண்பா உடன் அவர் இருக்கமாட்டார் திரும்ப வருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அகில் வந்து அமர சௌந்தர்யா பாரதி எங்கே என கேட்கிறார். துணிகளை பேக் செய்து வைக்கிறான் என சொல்ல, அவனை தடுக்கவே முடியாத என கேட்கிறார். அவன் தான் தடுத்தால் உண்மையை சொல்லிவிடுவேன் என மிரட்டுறானே என சௌந்தர்யா சொல்ல, சொன்னால் சொல்லட்டும் நாமளும் எல்லா உண்மையும் சொல்வோம் இதோட எல்லாம் முடிந்துவிடும் என சொல்ல, வேணு ஹேமாவிற்கு உண்மை தெரிந்தால் அவள் என்ன நினைப்பார் என சொல்கிறார். கண்ணம்மா நிலைமை தான் மோசம் என சௌந்தர்யா சொல்ல, பொண்டாட்டி இருக்கும் போது வேற பெண்ணுடன் வாழ இருப்பது சரி இல்லை என அகில் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பாரதி வாழவில்லை அவன் கேரக்டர் என்ன என எனக்கு தெரியும் என்று சௌந்தர்யா சொல்கிறார். பின் அந்த வெண்பா ஏன் இப்படி இருக்கிறாள் என அகில் கோபப்படுகிறார். அந்த நேரம் பாரதி ஹேமா வர சௌந்தர்யாவிடம் ஹேமா சொல்லிவிட்டு கிளம்புகிறார். சௌந்தர்யா பாரதியிடம் பேச வர என்னை இந்த வீட்டில் இருக்க கூடாது என சொல்லிவிட்டு இப்போது என்ன என கேட்கிறார்.அதற்காக யாரோ ஒருத்தி வீட்டில் இருப்பியா என கேட்க அது என் தோழி வீடு என சொல்கிறார். பின் இவ்வளவு திமிரு உனக்கு இருக்க கூடாது இதை நினைத்து நீ வருத்தப்படுவாய் என சௌந்தர்யா வருத்தப்பட்டு சொல்கிறார்.

மறுபக்கம் கண்ணம்மா வெண்பா பேசியதை நினைத்து பார்க்கிறார். என்னிடமே சவால் விடுகிறாய் எவ்வளவு தைரியம் நான் அவரை இந்த வீட்டில் இருக்க விடுவேனா அதை நான் நடக்க விடமாட்டேன் என நினைக்கிறார். ஹேமா வாயால் உன்னை டாக்டர் அம்மா என கூப்பிடுவாளா அவள் என் வயிற்றில் பிறந்தவள் என நினைக்கிறார். அப்போது வடிவு வந்து என்ன முடிவு செய்திருக்காய் என கேட்கிறார். அதான் யோசித்து கொண்டிருக்கேன் என கண்ணம்மா சொல்ல, பின் வெண்பா வீட்டில் சாந்தி ஊருக்கு கிளம்புகிறார். வெண்பா என்னாச்சு என கேட்க, நீங்க இருவரும் ஜாலியாக இருங்க நான் கிளம்புகிறேன் என சொல்கிறார்.

திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

ஹேமாவும் உடன் வருவதால் நீ இங்கையே இரு என சொல்கிறார். பாரதி எதாவது பிரச்சனை என இருந்தால் தான் இங்கே வருகிறார் அது சரி இல்லை என சாந்தி சொல்கிறார். வெண்பா நான் பாரதி உடன் லிவிங்கில் தான் வாழ போகிறேன் என சொல்கிறார். வெண்பாவும் சாந்தியும் வீடு முழுவதும் அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதி வர, வெண்பா ஆரத்தி எடுத்து வர சொல்கிறார். அதெல்லாம் ஹேமாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. வெண்பா மிகவும் சந்தோசமாக இருக்கிறது. வெண்பா ஹேமாவை டாக்டர் அம்மா என கூப்பிட சொல்ல ஹேமா கூப்பிடமாட்டேன் என இருக்கிறார். டாக்டர் அம்மா என சொல்வது நல்லாவே இல்லை என ஹேமா சொல்கிறார்.

இந்தியாவில் மாத சம்பளம் வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த பட்ஜெட் – முழு விபரம் இதோ!

அதுவும் நீங்க டாக்டர் இல்லையே உங்களை டாக்டர் என கூப்பிட கூடாது என போலீஸ் சொன்னார்களே என சொல்கிறார். பின் நீங்க ஜெயிலுக்கு எல்லாம் போய் வந்துருக்கீங்க என சொல்ல, நான் தான் டிவியில் பார்த்தேனே என சொல்கிறார். நீங்க டாக்டர் இல்லையே அப்போ வெறும் ஆன்டி தான் என கிண்டல் செய்ய பாரதி கோபப்படுகிறார். வெண்பாவிடம் நீ எதுவும் நினைக்காதே என சொல்ல, பரவாயில்லை என சொல்லிவிட்டு ஹேமா பேசியதை நினைத்து வெண்பா கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!