ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா, லக்ஷ்மியை அழைத்து செல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா, லக்ஷ்மியை அழைத்து செல்லும் சௌந்தர்யா - இன்றைய
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா, லக்ஷ்மியை அழைத்து செல்லும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வெண்பா, லக்ஷ்மியை அழைத்து செல்லும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஜெயிலில் இருந்து வெண்பா வெளியே வருகிறார். பின் சௌந்தர்யா லட்சுமி மற்றும் ஹேமாவை கண்ணம்மா வீட்டில் இருந்து அழைத்து கொண்டு செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சாந்தி வீட்டில் இருக்க மாயாண்டி வந்து சீக்கிரம் கிளம்பு வெண்பா அம்மாவிற்கு இன்று பெயில் கிடைக்க போகுது என சொல்கிறார். உடனே சாந்தி கிளம்ப எதாவது பணம் கொண்டுவா என சொல்கிறார். சாந்தி என்னிடம் பணம் எதுவும் இல்லை என சொல்ல, சரி வா என சொல்கிறார். கோர்ட்டில் பத்திரிகைகாரர்கள் வெண்பாவிற்கு ஜாமீன் கிடைத்துவிடுமாம் என சொல்ல, இது பெரிய கருக்கலைப்பு குற்றம் ஆச்சே அப்பறம் எப்படி ஜாமீன் கிடைத்தது என ஒருவர் சொல்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருட்கள்?

ஜெயிலில் வார்ட்டன் வந்து வெண்பாவை கூப்பிடுகிறார். வெண்பா வெளியே வர அங்கே சாந்தி மாயாண்டி மட்டும் இருக்கின்றனர். அப்போது சாந்தியிடம் வெண்பா பாரதி எங்கே என கேட்க, அவரு வீட்டிற்கு வரேன் என சொன்னதாக சொல்கிறார். ஏன் அவன் இங்கே வரவில்லை அவனுக்கு நான் இன்னைக்கு வெளியே வரேன் என தெரியும்ல என கேட்கிறார். அதெல்லாம் தெரியும் அவர் தான் வீட்டிற்கு வருவதாக சொன்னார் என சொல்கிறார்.

பின் கண்ணம்மா வீட்டில் லட்சுமி கண்ணம்மாவுடன் சந்தோசமாக இருக்க, கண்ணம்மா பதட்டமாக இருக்கிறார். இப்போது பாரதி வந்தால் என்ன ஆகும் என வருத்தமாக இருக்கிறார். அப்போது சௌந்தர்யா வர ஹேமா லட்சுமி இங்கையா இருக்காள் என கேட்கிறார். லட்சுமி இங்கே இருக்காளா என பார்க்கலாம் என சொல்ல, ஹேமா உள்ளே வந்து பார்த்துவிட்டு லட்சுமி இங்கே தான் இருப்பதாக சொல்கிறார். ஹேமா லட்சுமியிடம் ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (டிச.30) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கண்ணம்மாவிடம் சௌந்தர்யா பாரதி இன்னும் வரவில்லையா என கேட்க வர நேரம் தான் என சொல்கிறார். சௌந்தர்யா ஹேமாவிடம் ஜூ திறந்துட்டாங்க அங்கே எல்லா விலங்குகளும் இருக்கும் சந்தோசமாக இருக்கலாம் என சொல்கிறார். லட்சுமி நீயும் வா என சொல்ல, சரி நானும் வருகிறேன் என லட்சுமி சொல்கிறார். கண்ணம்மாவிற்கு அப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. வெண்பா வீட்டிற்கு வர சாந்தி ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்கிறார்.

வெண்பா இப்படி என்னை அந்த கண்ணம்மா ஜெயிலில் இருக்க வைத்துவிட்டாள் என கோவப்பட, சாந்தி அந்த கண்ணம்மா ரொம்ப பண்ணுகிறாள் என சொல்கிறார். அப்போது மாயாண்டி ரெஸ்ட் எடுத்துட்டு பார்க்கலாம் என சொல்கிறார். ஆனால் வெண்பா இனிமேல் எனக்கு ரெஸ்ட் இல்லை. நான் அவளை ஒவ்வொரு நாளும் சித்தரவதை செய்வேன். முன்னாடி இருந்ததை விட இப்போது ரொம்ப மோசமாக இருப்பேன் என சொல்கிறார். அந்த கண்ணம்மா உங்க தகுதி உடன் போட்டி போடுகிறாள் என சாந்தி உசுப்பேத்த, வெண்பா இனிமேல் நான் டாக்டர் இல்லை என சத்தம் போடுகிறார்.

தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!

நான் வெளியே வருவது பாரதிக்கு தெரியுமா என கேட்க, அதெல்லாம் தெரியும் வந்துருவாரு என சாந்தி சொல்கிறார். வெண்பா பேசாமல் பாரதிக்கு போன் செய்வோமா என யோசிக்க வேண்டாம் அவனே பேசட்டும் என சொல்கிறார். அப்போது மாயாண்டி வர வெண்பா அம்மா ஜெயில் எல்லாம் வசதியாக இருந்ததா என கேட்கிறார். நானே கடுப்பில் இருக்கேன் என சொல்ல, மாயாண்டி இனிமேல் வெளியே வந்துடீங்க அதனால் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். வெண்பா நான் உள்ளே இருக்கும் போது என்னவெல்லாம் நடந்தது என கேட்கிறார். சாந்தி எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here