கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கும் சௌந்தர்யா, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கும் சௌந்தர்யா, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அஞ்சலி - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கும் சௌந்தர்யா, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அஞ்சலி - இன்றைய எபிசோட்!
கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கும் சௌந்தர்யா, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கிறார். பின் சௌந்தர்யா அஞ்சலியிடம் தாய்ப்பால் குறித்த முக்கியத்துவத்தை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கு சௌந்தர்யா காபி போட்டு கொடுத்து வீட்டில் அடிக்கடி பிரச்சனை வருவதால் பூஜை ஒன்று செய்யலாம் என்று இருப்பதாக சொலிக்கிறார். அன்று அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் வைக்க இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு சந்தோசப்பட்ட கண்ணம்மா என்ன பெயர் வைக்க போறீங்க என கேட்கிறார். அதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை என சௌந்தர்யா சொல்ல, எந்த நாளில் பூஜை என கேட்கமாட்டியா என்று சௌந்தர்யா கேட்கிறார்.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!

என்ன நாள் என கண்ணம்மா கேட்க, உங்களது திருமண நாளில் தான் என சௌந்தர்யா சொல்கிறார். நீங்க இருவரும் பூஜையில் உட்கார வேண்டும் என சௌந்தர்யா செல்ல உங்க புள்ள என்ன நினைப்பார் என கண்ணம்மா கேட்கிறார். அதெல்லாம் பார்த்து கொள்ளலாம் என சௌந்தர்யா சொல்ல, சரி கண்டிப்பாக வர வேண்டும் என சௌந்தர்யா சொல்கிறார். கண்ணம்மா வீட்டில் இருக்கும் போது லட்சுமி வீடியோ கால் பண்ணுகிறார். அப்போது நீ நன்றாக இருக்கியா உன்னை யாரோ அடிப்பது போல எனக்கு கனவு வந்தது என லட்சுமி வருத்தப்பட்டு பேசுகிறார்.

பாரதி என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. இப்படி தினம் தினம் பிரச்சனை கூட இருப்பதாக நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரம் டாக்டர் ஒருவர் வர அடுத்த வாரம் சிம்லா போறேன் நீங்க வரீங்களா என கேட்கிறார். பாரதி யோசித்து சொல்வதாக சொல்ல, இன்னைக்கு வெண்பா கேஸ் நீதிமன்றத்திற்கு வருகிறது. நீங்க போகவில்லையா வெண்பாவிற்கு ஜாமீன் கிடைத்துவிடும் என சொல்ல, அவளை பற்றி என்னிடம் பேசாதீங்க என பாரதி சொல்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் பாராட்டு!

பின் அஞ்சலி வீட்டில் இருக்க, அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வருகிறது. என்ன மறுபடியும் நெஞ்சு வலிக்கிறது. டாக்டர் எதுவும் பிரச்சனை இல்லை என சொன்னாரே என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா வர அஞ்சலி நெஞ்சுவலிக்கிறது என சொல்கிறார். பின் பெட் மேலே பால் பாட்டில் இருக்க அதை பார்த்து சௌந்தர்யா கோபப்படுகிறார். அவர் குழந்தைக்கு இதை எத்தனை நாட்களாக கொடுக்கிறாய் என கேட்க இரண்டு நாட்களாக இதான் கொடுக்கிறேன் என சொல்கிறார். இந்த விஷயம் அகிலுக்கு தெரியுமா என அஞ்சலி கேட்க இல்லை என சொல்கிறார்.

நீ செய்வது தவறு என தெரிந்து ஏன் இப்படி செய்கிறாய் என சௌந்தர்யா கேட்க, இனிமேல் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும் வேறு எதையும் நினைத்து நீ வருத்தப்படாதே என சௌந்தர்யா சொல்கிறார். பின் அஞ்சலி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து சந்தோசப்படுகிறார். கண்ணம்மா பாரதி உடன் இப்படி நெருங்கி செல்கிறேன். ஆனால் அவரு இருக்கமாட்டார் நான் அப்பறம் என்ன செய்ய போகிறேன் என நினைக்க அவருடைய மனசாட்சி வந்து என்ன பயப்படுறியா கண்ணம்மா என்று பேசுகிறது.

நான் ஏன் பயப்பட வேண்டும் இத்தனை வருஷம் தனியாக இருந்துவிட்டேன் என சொல்கிறார். நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உனக்கு பயமாக இருப்பது போல இருக்கிறது. நீ அவரை நேசிக்கவில்லை ஆனால் அவருடன் நீ இருக்க வேண்டும் என நினைக்கிறாய் என சொல்ல, கண்ணம்மா என் குழந்தைகளுக்கு தான் அப்பா வேண்டும் எனக்கு அவர் தேவையில்லை என சொல்ல, எனக்கு அப்படி பார்த்தால் தெரியவில்லை என மனசாட்சி சொல்கிறது. அப்பறம் அவருடன் மீண்டும் காதலில் விழுந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள சொல்கிறாயா என கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியிருக்கும் நடிகர் அருண் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கோவப்பட்ட கண்ணம்மா என் லட்சுமி மீது தன்னுடைய மகள் என நினைத்து அவர் பேசியதே இல்லை, என் மீது போட்ட பழி என் குழந்தைகள் மீது வர கூடாது. அவர் லக்ஷ்மி என்னுடைய மகள் என தெரிந்தாலும் அவள் மீது என்னை போல வெறுப்பை காட்டவே இல்லை அதனால் தான் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது என கண்ணம்மா சொல்ல, அவரு 6 நாட்களில் சென்றுவிடுவேன் என உறுதியாக இருக்கார் எப்படி அவரை இருக்க வைப்ப என மனசாட்சி கேட்க நிச்சயம் நான் இருக்க வைப்பேன் என கண்ணம்மா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!