கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி - இன்றைய
கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவுடன் நெருக்கமாக வரும் பாரதி, மீண்டும் தடுத்த மனசாட்சி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் சந்தோசமான நினைவுகள் பாரதிக்கு வர அவர் நெருங்கி வருகிறார். பின் கண்ணம்மா துரோகம் செய்தது ஞாபகத்திற்கு வர விலகி செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதி தூங்க செல்ல முருங்கைக்காய் சாப்பிட்டதால் பாரதிக்கு கண்ணம்மாவிடம் நெருங்கி பழக தோணுகிறது. பாரதி கண்ணம்மா அருகே சென்று முத்தம் கொடுக்கிறார். அப்போது இருவரும் சந்தோசமாக இருந்த நாட்கள் பாரதிக்கு ஞாபகம் வருகிறது. பாரதி கண்ணம்மாவிடம் நெருக்கமாக சென்று பின் கண்ணம்மா துரோகம் செய்தவள் என்று தோன்றுகிறது. அதனால் விலகி வருகிறார். இப்படி கேவலமானவன் நீ கிடையாதே, என்ன இருந்தாலும் இவள் உனக்கு துரோகம் செய்தவள் என நினைக்கிறார்.

சேலத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று!

பின் வடிவு வீட்டிற்கு வர கண்ணம்மா அமர்ந்திருக்கிறார். சாப்பாடு எப்படி இருந்தது என வடிவு கேட்க எல்லாத்தையும் அவரே சாப்பிட்டுவிட்டார் என கண்ணம்மா சொல்கிறார். சரி அவரு மல்லிகை பூ வாங்கி கொண்டு வந்தார் அப்பறம் நைட் எல்லாம் ஜாலி தான என வடிவு கேட்க, அப்படி எல்லாம் இல்லை உங்களுக்கு என் வாழ்க்கை பற்றி சரியாக தெரிவில்லை. எனக்கும் அவருக்கும் இடையே பெரிய சுவரு இருக்கிறது. அதை அவரே தான் கட்டி இருக்கிறார். இப்போது எங்க வீட்டிற்கு விருந்தாளி போல தான் வந்திருக்கார். அதனால் தான் நானும் கவனிக்கிறேன் என கண்ணம்மா சொல்ல வடிவு அதை கேட்டு வருத்தப்படுகிறார்.

மறுபக்கம் கண்ணம்மாவை யாரோ அடிப்பது போல லக்ஷ்மிக்கு கனவு வருகிறது. லட்சுமி பதறி எந்திரிக்க சௌந்தர்யா கேட்ட கனவு கண்டிய என கேட்கிறார். ஆமாம் என சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்க ஸ்கூலிற்கு கிளம்புங்கள் என சௌந்தர்யா சொல்கிறார். ஆனால் லட்சுமி இன்னைக்கு நான் லீவு போட்டுக்கிறேன் என சொல்ல ஹேமா நானும் லீவு என சொல்கிறார். லட்சுமி கண்ணம்மாவை நினைத்து வருத்தமாக இருக்க அப்படி எல்லாம் நடக்காது என ஹேமா சொல்கிறார்.

இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!

கண்ணம்மா இன்னைக்கும் சாப்பாடு செய்ய நேரமாகிவிட்டது என சீக்கிரமாக செய்து கொண்டிருக்க பாரதி எனக்கு நேரமாகிவிட்டது என சொல்கிறார். அப்போது கண்ணம்மா தவறாக தண்ணீர் ஊற்றிவிட எல்லா சாப்பாடும் வீணாகி விடுகிறது. கண்ணம்மா சாப்பாடு எல்லாம் வீணாகிவிட்டது. கொஞ்ச நேரம் பொறுமையாக இருங்க நான் இட்லி ஊற்றி தருகிறேன் என சொல்கிறார். ஆனால் பாரதி எனக்கு வேண்டாம் என சொல்ல, கண்ணம்மா உங்களுக்கு செய்தது எல்லாம் வீணாகிவிட்டது என சொல்கிறார்.

பாரதி எனக்காக எல்லாம் வீணாக வேண்டாம், இந்த காசு என பணத்தை தூக்கி எறிகிறார். அந்த நேரம் சௌந்தர்யா வர காலையிலேயே என்ன சண்டை என சௌந்தர்யா கேட்கிறார். நான் சண்டை போடவில்லை என கண்ணம்மா சொல்ல, பாரதி என்ன எதற்கு எடுத்தாலும் காசு எடுத்து கொடுக்கிறாய் பண திமிரா என கேட்க, இதோ இவளுக்கு சப்போர்ட் செய்ய வந்துட்டீங்க என சொல்கிறார். மனுசங்க மனதை புரிந்து கொள்ள உனக்கு தெரியாத என்று சௌந்தர்யா கேட்க, பாரதி உங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசுங்க என சொல்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு காபி போட்டு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here