வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா, அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா, அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் பாரதி - இன்றைய
வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா, அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா, அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா உடைய கணவர் டாக்டர் என தெரிந்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வைத்தியம் பார்க்க வருகின்றனர். அஞ்சலி குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்கின்றனர்

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வர அங்கே வீடு பூட்டி இருக்கிறது. அதனால் பாரதி வெளியே நிற்க சில பாட்டிகள் வருகிறார்கள். அவர்கள் நீ கண்ணம்மா கணவர் தான, நீ ஒரு டாக்டர் என்று சொன்னார்கள் அதனால் எங்களுக்கு உடம்பு சரி இல்லை உன்னிடம் வைத்தியம் பார்க்கலாம் என வந்தோம். இத்தனை நாள் நீ வெளி ஊரில் இருந்த என்று சொன்னார்கள். பாரதி அதெல்லாம் விடுங்க உடம்புக்கு என்ன செய்யுது என பாரதி கேட்க, ஒவ்வொருத்தரும் ஒன்று சொல்கிறார்கள்.

பின் பாரதி பரிசோதனை செய்துவிட்டு மருந்து எழுதி கொடுக்கிறார். மறுபக்கம் சௌந்தர்யா வீட்டில் நிம்மதி எதுவும் இல்லை இருக்கிறது அதனால் ஜோசியர் வர சொல்லிருக்கேன் என சொல்கிறார். அகில் எனக்கு இது மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை என சொல்ல ஜோசியர் வருகிறார். அவரிடம் சௌந்தர்யா வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சி எதுவும் இல்லை, அதனால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார். உடனே ஜோசியர் வீட்டில் சங்கர நாராயணன் பூஜை செய்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறார்.

இனி கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!

சௌந்தர்யா சரி என சொல்ல, குழந்தைக்கு அப்போது பெயர் வைக்கலாமா என கேட்கிறார். ஜோசியர் இவங்க குழந்தையா என கேட்க ஆமாம் பிறந்து 10 நாள் தான் ஆகிறது, அவனுக்கு இந்த பூஜை அன்று பெயர் வைக்கலாமா என கேட்கிறார். ரொம்ப நல்லது என ஜோசியர் சொல்கிறார். கண்ணம்மா இரவு தூங்க வர பாரதி அக்கம் பக்கத்தினரிடம் என் கணவர் டாக்டர் என சொன்னியா என்று கேட்கிறார். இத்தனை நாளாக வீட்டில் எந்த ஆம்பளையும் வராமலா இருந்தாங்க இப்போ ஒருவர் வந்தால் என்ன நினைப்பார்கள் என கேட்கிறார்.

பாரதி கட்டிலில் படுக்காதே என சொல்ல, இது என்னுடைய வீடு என கண்ணம்மா சொல்கிறார். பின் கண்ணம்மா ஸ்கூலிற்கு சாப்பாடு கொண்டு செல்ல, ஹேமா லட்சுமி வகுப்பை எட்டி பார்க்கிறார். அப்போது ஹேமாவை அழைத்து டீச்சர் பேச சொல்ல, அவள் அம்மாவை பற்றி பேசுகிறாள். என் அம்மாவை நான் பார்த்ததே இல்லை அம்மாவின் அன்பு எனக்கு கிடைத்ததே இல்லை என சொல்ல, அதை கேட்டு கண்ணம்மா வருத்தப்படுகிறார். பின் லட்சுமி பேச அவள் அப்பாவை பற்றி பேசுகிறாள்.

‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு திருமணமான ஒரே மாதத்தில் ஆர்யனுடன் விவாகரத்து? அவரே அளித்த விளக்கம்!

என் அப்பாவை நான் பார்த்ததே இல்லை நான் பிறப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றுவிட்டார். அவர் எப்படி இருப்பார் என்று கூட எனக்கு தெரியாது. என் அப்பாவிடம் சேர்ப்பேன் என என் அம்மா சத்தியம் செய்திருக்கார் என சொல்ல, அதை கேட்டு கண்ணம்மா வருத்தப்படுகிறார். இது எல்லாம் சரியாக தான் நான் இத்தனை கஷ்டப்படுகிறேன் என கண்ணம்மா நினைக்கிறார். சௌந்தர்யா பூஜை நடத்த நாள் பாக்கிறார்கள். அப்போது பாரதி கண்ணம்மா கல்யாணா நாளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் பாரதிக்கு கல்யாண நாள் என தெரியாமல் வர வைக்க வேண்டும் என அகில் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!