குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா - இன்றைய
குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
குழந்தைத்தனமாக கண்ணம்மாவிடம் சண்டையிடம் பாரதி, சாப்பாடு கொண்டு வரும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி வீட்டு வேலை செய்ததை வீடியோவாக எடுத்து கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு அனுப்புகிறார். பின் கண்ணம்மா வீட்டிற்கு வந்த சௌந்தர்யா வேணு இருவரையும் பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு பாரதி எப்படி இருக்கிறான் என சௌந்தர்யாவிடம் கேட்கிறார். நீங்க தான் அவனை கண்டுகொள்ள வேண்டாம் என சொன்னீங்க இப்போ இப்படி சொல்றீங்க என கேட்க, அவன் குடித்துவிட்டு எங்கையாவது சுற்றுகிறானா என நாம பார்க்க வேண்டும் என வேணு சொல்ல, இப்பவே மருத்துவமனைக்கு போன் செய்து பேசுகிறேன் என சௌந்தர்யா போனை எடுக்கிறார். பின் கண்ணம்மா அனுப்பிய வீடியோவை பார்த்து சௌந்தர்யா சந்தோசப்பட, என் மருமகள் எப்படி பண்ணிருக்கா என அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் டிச.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

நம்ம வீட்டில் சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்கமாட்டார் இங்கே எப்படி வீட்டு வேலைகளை செய்கிறார் என அஞ்சலி கேட்க, பொண்டாடியிடம் அடங்கி தான் போக வேண்டும். அவனை இப்படி தான் பண்ணிருக்க வேண்டும் நான் இத்தனை நாளாக இதை செய்யாமல் விட்டேன் என நினைக்கிறார். அப்போது ஹேமா வர என்ன எல்லாரும் போனில் பாக்குறீங்க என கேட்கிறார். அகில் அது பேய் படம் என சொல்லி சமாளிக்கிறார். பின் கண்ணம்மா வீட்டில் பாரதியை கிளம்ப சொல்கிறார். பாரதி பல்லு விலக்க போக அங்கே பேஸ்ட் இல்லாமல் இருக்கிறது.

உடனே கோவப்பட்ட பாரதி ஒரு பேஸ்ட் கூட வாங்கி வைக்காமல் என்ன குடும்பம் நடத்துகிறாய் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா பேஸ்ட் இருந்ததே என சொல்லி பாரதியிடம் காட்டுகிறார். இதை அமுக்கி 4 நாட்கள் பல் விலக்கலாம் என சொல்லி அமுக்கி எடுக்கிறார். அப்போது பாரதி ப்ரஸ் கொண்டு வருவதற்குள் பேஸ்ட் கண்ணம்மா சேலையில் விழுகிறது. பாரதி சேலையில் விழுந்ததை நான் ப்ரஸ் செய்ய வேண்டுமா என கேட்கிறார். அப்போ நீங்களே சென்று வாங்கி கொண்டு வாங்க என சொல்கிறார். பாரதி உரிமையிடம் திட்டுவது சந்தோசமாக இருப்பதாக கண்ணம்மா நினைக்கிறார்.

TNPSC குரூப் 4 பாட ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

மறுபக்கம் சாந்தி வெண்பாவை வெளியே எடுக்க வக்கீலை ஏற்பாடு செய்கிறார். அப்போது வக்கீல் அதிகமாக பணம் கேட்கிறார். மாயாண்டி வக்கீலிடம் பணத்தை வாங்கி சாந்தியை ஏமாற்றுகிறார். வெண்பா எப்படியும் வெளியே வர கூடாது என சொல்கிறார். பின் பாரதி சிறிய பேஸ்ட் வாங்கி வந்திருக்கிறார். கண்ணம்மா சிறிது கேட்டதற்கு அவர் தர முடியாது என சொல்கிறார். உடனே கண்ணம்மா வேப்பங்குச்சி வைத்து பல்லு விளக்குகிறார். சௌந்தர்யா வேணு வந்து இருவரையும் பார்த்து சந்தோசப்படுகிறார்கள். கண்ணம்மா வந்து வேப்பங்குச்சியில் பல்லு விலக்க காரணம் சொல்கிறார்.

பாரதி சிறிய பேஸ்ட் கூட எனக்கு கொடுக்க மாட்டேங்குறார் என சொல்ல, அதெல்லாம் வாங்கி கொடுக்க தான் நான் இருக்கேனா என கேட்கிறார். நான் போனால் காபி கொடுக்க நேரம் ஆகிவிட்டது என சொல்வீங்க என்று கேட்க, அதான் உன் வேலைக்காரன் ஆட்டோ ட்ரைவர் இருக்கானே அவனை வாங்கி கொண்டு வர சொல்லு என சொல்கிறார். இந்த இரண்டு பேர் இப்படி சண்டை போடுறீங்க என கேட்கிறார். என்னை இவள் மதிக்கவே மாட்டேங்குறா என பாரதி சொல்ல, என் புள்ள எவ்வளவு பெரிய டாக்டர் அவனை ஏன் நீ மதிக்காமல் இருக்க என கேட்க, அவர் தான் குடித்துவிட்டு வீடு முழுவதும் வாந்தி எடுக்கிறார் என சொல்கிறார்.

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

என்னடா இப்படி பண்ற என சொல்ல இரண்டு பேரும் சேர்ந்து என்னை அசிங்கப்படுத்த தான் வரீங்களா என கேட்கிறார். கண்ணம்மா வீட்டில் நிறைய பொருள்கள் இல்லை என சொல்ல, அதெல்லாம் எனக்கு வேண்டாம் என கண்ணம்மா சொல்கிறார். பாரதி எதற்கு இந்த பக்கம் வந்தீங்க என கேட்க, உனக்கு சாப்பாடு கொண்டு வந்தோம் என சொல்கிறார். சௌந்தர்யா சாப்பாடு பரிமாற நான்கு பேரும் சந்தோசமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். பாரதிக்கு பிடித்த உளுந்த வடை சாப்பிட கண்ணம்மா எனக்கு பிடித்ததை செய்யமாடீங்களா என கேட்கிறார். அவனுக்கு பிடித்ததை தவிர எல்லாம் உனக்கு பிடித்தது தான் என சொல்ல சௌந்தர்யா இருவரையும் பார்த்து சந்தோசப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!