குடித்துவிட்டு கண்ணம்மாவிடம் தகராறு செய்யும் பாரதி, அம்மா நினைப்பாக இருக்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
குடித்துவிட்டு கண்ணம்மாவிடம் தகராறு செய்யும் பாரதி, அம்மா நினைப்பாக இருக்கும் லட்சுமி - இன்றைய
குடித்துவிட்டு கண்ணம்மாவிடம் தகராறு செய்யும் பாரதி, அம்மா நினைப்பாக இருக்கும் லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
குடித்துவிட்டு கண்ணம்மாவிடம் தகராறு செய்யும் பாரதி, அம்மா நினைப்பாக இருக்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மாவை பிரிந்து இருக்க முடியவில்லை என சொல்கிறார். பாரதி குடித்துவிட்டு வந்து கண்ணம்மாவிடம் தகராறு செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி ஹேமா ஸ்கூலில் இருக்க அங்கே குமார் அண்ணா ஆட்டோ இருக்கிறது. அதை பார்த்ததும் அம்மா வந்துட்டாங்க போல என லட்சுமி சொல்கிறார். அப்போது சௌந்தர்யா கார் வருகிறது. ஹேமா அதை பார்த்து சந்தோசப்பட,சௌந்தர்யா நான் இருவருக்கும் சாப்பாடு கொண்டு வருகிறேன் என சொல்கிறார். அப்போது கண்ணம்மாவும் வர, உங்க பார்க்காமல் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை.நான் உன்னுடனே வந்துவிடுகிறேன் என சொல்கிறார். ஹேமா எனக்கும் அப்பா ஞாபகமாக இருக்கிறது.

நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அங்கே ஜாலியாக இருக்கும் என சொல்கிறார். சௌந்தர்யா இது பற்றி அப்பறம் பேசலாம் என ஹேமாவை கை கழுவ அழைத்து செல்கிறார். ஹேமாவிடம் நீ சென்றுவிட்டால் அஞ்சலி சித்தி பாப்பா உன்னை தேடுவான் நீ தான் லக்ஷ்மியை சமாதானம் செய்து இருக்க வைக்க வேண்டும் என சொல்கிறார். ஹேமா சரி என சொல்ல, லட்சுமியிடம் நாம போய்ட்டா அஞ்சலி சித்தி பாப்பா பாவம் தான என சொல்கிறார். ஆமாம் நான் இங்கையே இருக்கேன் என லட்சுமி சொல்கிறார்.

திருமணம் ஆகவில்லை என்று கவலைப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன், சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா – குழப்பத்தில் ரசிகர்கள்!!

பின் பாரதி கண்ணம்மாவின் பழைய ஞாபகங்கள் வர அவர் பயங்கரமாக குடிக்கிறார். அவளுடைய வாசனையை காட்டி என்னை மயக்க பாக்கிறாய் ஆனால் நீ எனக்கு துரோகம் செய்தவள் உன் வாசனைக்கு நான் மயங்கமாட்டேன் என குடிக்கிறார். குடித்துவிட்டு வீட்டிற்கு வர, கண்ணம்மா என்ன இப்படி நாத்தம் வருகிறது. எப்படி தான் இதை எல்லாம் குடிக்கிறீங்க என கேட்கிறார். உன்னால் தான் குடித்தேன் உன்னை கல்யாணம் செய்து என வாழ்க்கை எல்லாம் போய்விட்டது. நீ எனக்கு துரோகம் செய்தவள் என சொல்ல கண்ணம்மா கோபப்படுகிறார்.

ஒரு பொம்பள புள்ள இருக்கிறது அதை பற்றி நினைக்காமல் எப்படி தான் இப்படி குடிக்கிறீங்க என கண்ணம்மா கேட்க என் மகளை எப்படி வளர்க்க வேண்டும் என எனக்கு தெரியும் நீ யாரு அதை சொல்ல, என் வீட்டிற்கு போனால் என் அம்மா கூட என்னை கேள்வி கேட்கமாட்டார். இரு என் அம்மாவிற்கு போன் செய்கிறேன் என பாரதி போன் செய்கிறார். அப்போது சௌந்தர்யா என்ன இந்த நேரத்தில் இவன் கூப்பிடுகிறான் என பேச, அம்மா என பாரதி கூப்பிடுவதை வைத்தே குடித்திருக்கியா என கேட்கிறார். அங்கே வர வாடை வருகிறதா என கேட்க, அங்கே சென்று இப்படி குடித்தால் கண்ணம்மா என்ன நினைப்பாள் என கேட்கிறார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நக்ஷத்திரா & ராகவ் திருமணம் – வீடியோ வெளியீடு! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

அம்மா நான் குடித்தால் நீங்களே கேள்வி கேட்க மாட்டீங்க ஆனால் இவ காலையில் இருந்து என்னிடம் எவ்வளவு கேள்வி கேட்கிறாள். இவள் யாரு அதை எல்லாம் கேட்க என கேட்கிறார். அவள் உன் பொண்டாடி அவளுக்கு உன்னை கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கிறது என சொல்கிறார். நீங்க அவளுடைய டீம் அதை மறந்துவிட்டு உங்களுக்கு போன் செய்துவிட்டேன் என பாரதி சொல்ல, நம்ம எல்லாரும் ஒரே டீம் தான் உனக்கு தான் அது புரியவில்லை என சௌந்தர்யா சொல்கிறார். கண்ணம்மா போனை வாங்கி பேச பாரதி ஒரே வாந்தி எடுக்கிறார். அதனால் கண்ணம்மா போனை வைத்துவிட்டு பாரதியை தூக்கி முகம் கழுவி படுக்க வைக்கிறார். பாரதி எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என புலம்ப அதை பார்த்து கண்ணம்மா வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!